எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வைரஸ் கிருமிகள், ஒட்டுண்ணிகள், பாக்டீ ரியா கிருமிகள், பூஞ்சைக் கிருமிகள் ஆகியன ரத்தம் மூலம் பரவுவதற்குச் சாத்தியம் உண்டு.

வைரஸ் கிருமிகள் என்று எடுத்துக் கொண்டால். எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் (-1  -2), மஞ்சள் காமாலை ஏ வைரஸ், மஞ்சள் காமாலை பி வைரஸ், மஞ்சள் காமாலை சி வைரஸ், மஞ்சள் காமாலை ஈ வைரஸ், டெங்கு வைரஸ், வெஸ்ட் நைல் வைரஸ், சைட்டோ மெகல்லோ வைரஸ், மனித லிம்ஃபோட்ரோபிக் வைரஸ், பார்வோ வைரஸ்  19, எப்ஸ்டீன்-பார் வைரஸ் ஆகியவை முக்கியமானவை.

ஒட்டுண்ணிகள் என்று எடுத்துக் கொண்டால், மலேரியா ஒட்டுண்ணி-பிளாஸ் மோடியம் ஒட்டுண்ணி, லேயிஷ்மேனியா சிஸ்-லேயிஷ்மேனியா ஒட்டுண்ணி, சாகஸ் நோய்-டிரிபனோசோமா குரோசி ஒட்டுண்ணி, உண்ணிக் காய்ச்சல்-பாப்சியா ஒட்டுண்ணி, டாக்ஸோபிளாஸ்மோசிஸ்-டாக்ஸோ பிளாஸ்மா கோன்டி ஒட்டுண்ணி, யானைக் கால் நோய்-வூரியா ப்ராங்க்ரோஃப்டி ஒட் டுண்ணி ஆகியவை முக்கியமானவை.

பாக்டீரியா கிருமிகள் என்று எடுத்துக் கொண்டால், சால்மோ னெல்லா டைஃபி, டிரிஃப்போனிமா- சுருள் பாக்டீரியா, எர்சினியா, புரோடீஸ், சூடோமோனாஸ், எஷ் சரிச்சியா, கிளப்சையிலா ஆகியவை முக்கிய மானவை. பூஞ்சைக் கிருமிகள் என்று எடுத்துக்கொண்டால், மியூகார்மைகோசிஸ், சைகோமை கோசிஸ், பைத்தியோசிஸ் ஆகியவை முக்கியமானவை.

உலக சுகாதார அமைப்பு

என்ன சொல்கிறது?

எய்ட்ஸ் கிருமிகள், மஞ்சள் காமாலை பி வைரஸ், மஞ்சள் காமாலை சி வைரஸ், சிஃபிலிஸ் ஆகிய நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளை உலக சுகாதார அமைப்பு செய்யச் சொல்கிறது. நமது நாட்டில் மலேரியா பாதிப்பு தொடர்ந்து இருப்பதால், அதற்கான பரிசோதனையையும் சேர்த்து 5 பரிசோதனை களைச் செய்கிறோம்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், மேற் கூறிய பரிசோதனைகளுடன் டிரிபனோசோமா குரோசி ஒட்டுண்ணி, லேயிஷ்மேனியா ஒட்டுண்ணி ஆகிய பரிசோதனை களையும் செய்கிறார்கள். ஏனென்றால், அங்கு இவ் வகைப் பாதிப்புகள் உள்ளன. மனித லிம்ஃபோட்ரோபிக் வைரஸ் பரிசோதனையை, சில மேலை நாடுகளில் பிற முக்கியப் பரிசோ தனைகளுடன் செய்கிறார்கள்.

பரிசோதனைக்கான

காரணங்கள்

மேலே குறிப்பிடப்பட்ட பரிசோதனைகள் மிகவும் முக்கிய மானவை, ஏனென்றால் இந்தத் தொற்று நோய்கள் உடலைப் பெரிதும் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. பிற கிருமிகளின் பாதிப்பு அபூர்வ மாகவே ஏற்படும். அத்துடன் அவற்றைக் குணப்படுத்தி, காப்பாற்றவும் முடியும். ஒருவேளை பரிசோதனையில் தவறு இருந்து தானம் பெற்ற ரத்தத்தில் கிருமிகள் பரவிவிட்டால், அதைச் சரிசெய்வதற்குக் கூடப் பல உயரிய தொழில்நுட்பங்களும் வேதிப்பொருட் களும் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.

ஆகவே, தொற்றுள்ள தானம் பெற்ற ரத்தத்தை வேறு நோயாளிக்குச் செலுத்து வதற்கு முன்பாகப் பரிசோதனை செய்தால்கூட அந்த ரத்தத்தைக் கிருமி நீக்கம் செய்ய முடியும் அல்லது அந்த ரத்தத்தைச் செலுத் தாமல் தவிர்க்க முடியும். அந்த ரத்தத்தை அழித்துவிட முடியும்.

முகாம் நடத்தும்போது கவனம்

பொதுவாக, மிகப் பெரிய குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சி களை நடத்தும்போது, ஒரே நேரத்தில் ஏராளமானோர் குருதிக் கொடைசெய்யும் நிலையில், அனைவருக்கும் பரிசோதனைகளை வேகமாகக் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டியிருப்பதால் சில நேரம் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. (தொற்று உள்ள ரத்தத்தைப் பெறுவது நிகழலாம்).

இத்தனை பேரிடமிருந்து ரத்த தானம் பெறப்பட்டது என்று கின்னஸ் சாதனைகள் கூட நடந்தேறியிருக்கும். ஆனால், அவசர கதியில் செயல்படுவதால் சாதனைகளைத் தாண்டி, இது போன்ற சோதனைகளையும் குடும்பங்களின் வேதனைகளையும் ஏற்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரத்ததான முகாம் நடத்துபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை யுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

சாத்தூர் சம்பவத்தைப் பொறுத்தவரை தானம் செய்ய வந்தவர் ரத்தத்தை முறையாகப் பரிசோதித்து நிராகரிக்காமல் போனதுதான் மாபெரும் தவறு. இனியும் இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் கவனத்துடன் இருந்தி ருந்தால், இது போன்ற சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.

குருதியை

தரமாக்குவோம்

குருதிக் கொடை வழங்க வரும்போது கொடையாளி தன்னைக் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, காய்ச்சல் ஏற்பட்டது, அது எப் போது ஏற்பட்டது, எந்தத் தொற்றால் ஏற்பட்டது, அதற்காக வழங்கப்பட்ட சிகிச்சைகள், உடலில் உள்ள பிற நோய்கள் அதற்காகச் செய்யப்பட்டுவரும் சிகிச்சைகள் என அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner