எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செனனை, ஜன. 6- மலேசியாவை சேர்ந்த 41வயது இளைஞருக்கு  குடல் புற்றுநோய் கட்டியால் சிறு குடலில்  ஏற்பட்ட அடைப்பை அறுவைசிகிச்சையின்றி நவீன முறையில் சரிசெய்து சென்னையை சேர்ந்த மெட் இந்தியா மருத் துவமனை சாதனை புரிந்துள்ளது.

இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுவே முதல்முறையாகும். மலேசியாவில் மீன் அங் காடியில் மேலாளராக பணி புரியும் அந்தநபர் கடந்த 6 மாதங் களாக  முறையாக சாப்பிட முடியாமலும் தண்ணீர் அருந்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். சாப்பிட்டால் வந்தியாக வெளியேறிவிடும். மலேசியா மருத்துவர்களிடம் காட்டியபோது அவர்கள் வாயு தொல்லைக்கான மருந்துகளை பரிந்துரைத்தனர். ஆனாலும் பிரச்சினை சீராக வில்லை. இதன்பின்னர் சொந்த ஊரான சீர்காழிக்கு வந்துமருத் துவர்களிடம் உடலைகாட்டிய போது அவர்களும் பரிசோதித்து சில மருந்துகளை தந்தனர்.

குணமாகவில்லை. நிலைமை மேலும் மேசானமானது. இதன் பின்னர் அவர்  உடல்நலிந்து எலும்பும் தோலுமாக  அவர்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மெட் இந்தியா மருத்துவ மனைக்கு அழைத்துவரப்பட்டார்.  அவரை பரிசோதித்த பிரபல இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை நிபுணரான பத்மசிறீ டாக்டர்  டி.எஸ்.சந்திரசேகர் அந்த இளைஞருக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து கடந்த மாதம் 26 ஆம் தேதி  நோயாளின் வாய் வழியாக இயுஎஸ் கருவி மூலமாக  ஸ்டென்ட் (செயற்கை குழாய்) பொருத்தப்பட்டு பெருங் குடலில் இருந்து சிறுகுடலுக்கு உணவுசெல்ல மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டது. இதேபோல்பித்தப்பாதையில் இருந்த அடைப்பை நீக்கி பித்த நீர்வெளியேறி சிறுகுடலுக்கு செல்லவும் மாற்று வழி ஏற் படுத்தப்பட்டது. இதனால் அந்த நோயாளி தற்போது குணமடைந்து  சாப்பிட தொடங்கியுள்ளார். நன் றாக தண்ணீர் அருந்துகிறார்.

இந்த சிகிச்சையால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைப்பதே கேள்விக்குறி யாக இருந்தஒருவருக்கு வாழ் வளித்துள்ளது. எண்டோஸ் கோப் பிக் அறுவைசிகிச்சையின்போது எந்த வலியும் தெரியவில்லை என்றும் தூங்கி எழுந்தது மாதிரி இருந்ததாகவும் அந்த நபர் கூறினார். இந்த அறுவைசிகிச் சையின் வெற்றி இதுபோல குடலில் சிறிய புற்றநோய் கட்டியுடன் போராடும் பலருக்கு உதவிகரமாக  இருக்கும் என்றார் டாக்டர் சந்திரசேகர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner