எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வழக்கமான உணவுப் பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடுதல் வேண்டும். மையாக அரைத்த மாவால் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை (இட்லி, தோசை, சப்பாத்தி உட்பட) முற்றாகத் தவிர்த்து விட்டு, நார்ச்சத்து மிகுந்த கொர கொரப்பான மாவில் தயாரிக்கப்பட்ட சிவப்பரிசி அல்லது ராகி மாவால் தயாரிக்கப்பட்ட புட்டு, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். சிறுதானியம், நொய்யரிசி, உடைத்த கோதுமை ஆகியவற்றைக்கொண்டு சமைக்கப்பட்ட உப்புமா, பொங்கல், கஞ்சி போன்றவை மிகவும் சிறந்தவை.

தற்காலிகமாக இறைச்சி உணவையும் கிழங்குகளையும் தவிர்த்துவிட்டு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைப் பெருமளவு எடுத்துக் கொள்ளலாம். மிகவும் குறிப்பாக பப்பாளி, மாதுளை போன்ற நீர்த் தன்மை மிகுந்த பழங்களை மட்டுமே இரவு உணவாக எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது இளநீர் எடுத்துக்கொண்டு மீண்டும் பசி வந்த பின்னர் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. புளிக்காத மோர் அல்லது நொதிக்க வைத்த வடித்த கஞ்சியின் நீர் இரண்டும் பெருங்குடலுக்குத் தேவையான நன்மை செய்யும் கிருமிகளை உருவாக்கக் கூடியவை.

குடல்வாலில் கழிவு தேக்கமடைந்து வலி தோன்றுகிற போது சளிப் பிடித்து மோர், பழம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் உண்ணப் பிடிக்கவில்லை என்றால் இறைச்சி, காய்கறி, கீரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் சூப்பை ஒவ்வொரு நேரமும் முழு உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். வலி முற்றாக நீங்கிய பின்னர் கஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுக்குத் திரும்பி, ஒருவாரத்துக்குப் பின்னர் வழக்கமான உணவை எடுத்துக்கொள்ளலாம். அப்போதும் மாவால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பதே நல்லது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner