எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, நவ. 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக நிமோனியா நாள் மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் 24.11..2018 அன்று காலை 11 மணியளவில்  கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் தலைமையேற்க பெரியார் நலவாழ்வு சங்க செயலாளர் பேராசிரியர் கே. ஏ.எஸ். முகமது சபீக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத் துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின்  உதவி பேராசிரியரும், நுரை யீரல் நோய் சிறப்பு மருத்துவரு மான E.M.PR.M.விஸ்வநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சுவாசப் பிரச்சினைகள் பெரும்பாலும் தூசு, புகை, நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளுதல் மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படுகின்றது என்றும்  நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்றும் உரையாற்றினார். மேலும் குளிர்காலங்களில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பெரும்பாலும் அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின் றனர். நிமோனியா காய்ச்சல் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால்  நுரையீ ரலில் ஏற்படும் தொற்று என் றும் அதனை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்ற எளிய வகை தொழில்நுட்ப வசதி களை பயன்படுத்தி எளிதாக கண்டறியமுடியும் என்றும் உரையாற்றினார். உடலில் ஏற் படும் நோய்த்தொற்றுகளுக்கு அதிக வீரியமிக்க ஆன்டிபயா டிக் மருந்துகள் எடுத்துக்கொள் வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நுரையீரல் பாதிப்பிற்காக மருத்துவர்களை அணுகும் போது முன்பு மேற் கொண்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவக் குறிப்புக்களை கட் டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். நிமோனியா நோயினை முற்றிய நிலையில் கண் டறிந்தாலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவ வசதிகள் தற் போது வளர்ந்துள்ளது என்றும் இந்நோய்க்கு தடுப்பூசி போட் டுக் கொள்வது சிறந்தது என் றும் உரையாற்றினார்.

தற்பொழுது அதிகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் குறித்த அறிகுறிகள், தேவை யான சிகிச்சை முறைகள் மற் றும் நோய் தாக்காமல்  தற்காத் துக்கொள்ள மேற்கொள்ள வேண் டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து    எடுத்துரைத்து மாண வர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார்.  இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரி யர் முனைவர் அ.மு. இஸ்மா யில், துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் நலவாழ்வு சங்க இணைச் செய லர் திருமதி அ. ஷமீம் அவர் கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner