எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல் அறுவை சிகிச்சைக்குப்பின்...

பல்லில் அறுவை சிகிச்சை முடிந்து ஓரிரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வலி இருக்கும். அதனால் உணவு சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். சூடான உணவை சாப்பிடுவதால் ரத்தக்கசிவு ஏற்படும். மேலும் கடினமான உணவும் வலியை அதிகரிக்கும். பல்லில் ஒட்டிக்கொள்ளக்கூடிய மற்றும் அதிகம் மெல்லக்கூடிய உணவையும் தவிர்க்க வேண்டும். அதற்குபதில் சூப், தயிர், ஜுஸ் என திரவு உணவுகளாகவோ, பாதி திட உணவுகளா கவோ உட்கொள்வது நல்லது.

காலில் தசைப்பிடிப்பா?

ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கும் நீர்ச்சத்து பற்றாக்குறை உண்டாகலாம். இதன் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக் கூடும். எனவே, அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்னால் கால்களுக்கு தளர்வு கொடுக்கும் பயிற்சிகள் அல்லது ஸ்டேஷனரி சைக்கிளிங்கும் செய்யலாம்.

காஃபி எப்போது குடிக்கலாம்?

காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்கும் என பெரும்பாலானவர்கள் சொல்வதை பார்க்க முடியும். ஆனால், அமெரிக்க உணவியலாளரும்,  Women’s Health Body Clock Diet என்ற நூலின் ஆசிரியருமான லாராசிபுல்லோ, காலை எழுந்தவுடன் உடலில் ஸ்ட்ரெஸ்சுக்கு காரணமான கார்ட்டிசோல் நிறைந்திருக்கும்.

அப்போது காஃபி குடித்தால் முதலில் சுறுசுறுப்பைத் தந்தாலும், போகப்போக சோர்வை அதிகரித்து, ஒருவித மந்தத்தன்மையோடு நாளை தொடர்வீர்கள். அதனால் காலையில் எழுந்து 2 அல்லது 3 மணி நேரம் கழித்து காபி அருந்துவதே சிறந்தது. அதாவது காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை காபி அருந்த சிறந்த நேரம் என்கிறார்.

தலைவலிக்கும் இன்ஹேலர் பயன்படுத்தலாம்!

ஆஸ்துமா பிரச்சினைக்குப் பயன்படுத்தும் இன்ஹேலரை இப்போது ஒற்றைத் தலைவலிக்கும் பயன்படுத்தலாம் என்று ஜெர்மனை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் அளவைக் குறைக்கவும், அந்த மருந்துகளை முற்றிலும் தடுத்து நிறுத்தவும், நாம் சுவாசிக்கிற காற்றின் கலவைகளை மாற்றுவதற்கும் உதவுகிறது என்கின்றனர். அதிகமான தலைவலி தொடங்கும் முன்பு உணர்ச்சியோ அல்லது கண் பார்வையில் தொல்லையோ ஏற்படுகிற ஒற்றைத்  தலைவலியுடைய நோயாளிகளுக்கு இந்த புதிய இன்ஹேலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ள தாக  ஒரு  இதழில் வெளியான ஆய்வு தெரிவிக் கிறது.

இதயம் மற்றும் நுரையீரல் அரங்கம்

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த விளிம்பு நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், நோய்த் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத் தவிர்க்க தனிப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப்  பிரிவு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ரூ. 1 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் மகத்துவங்கள் நமக்கு புதிதல்ல என்றாலும் நமக்குத் தெரியாதவற்றையும்   International Journal of Pharmaceutical Sciences என்னும் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. 200 மில்லிகிராம் கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் சாறை 30 நாட்கள் வரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வருவதால் ரத்த குளூக்கோஸ், கிளைகோசைலேடட் ஹீமோ குளோபின், யூரியா, யூரிக் அமிலம் மற்றும் கிரியாட் டினின் அளவு கணிசமாக குறைவதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம்.  காலையில் வெறும் வயிற் றில் சுத்தமான 10 கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தாலே ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எல்லாம் குறைவதுடன் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், அயர்ன், காப்பர் என அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner