எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்கள் நம்முடைய மனநிலையையும், உடல்நிலை யையும் தீர்மானிக்கின்றன என்பதை அறிந்தி ருப்போம். அந்த வகையில் கார்ட்டிசால்

(Cortisol) என்கிற ஹார்மோனே மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். இதுவரை கார்ட்டி சாலின் அளவைக் கணக்கிட வழி இல்லாமல் இருந்து வந்தது. இப்போது அதற்கும் முடிவு கட்டிவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

ஒருவருடைய உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிவதற்குப் போதுமான தகவல்கள் அவரது ரத்தத்தில் மட்டும் இன்றி வியர்வையில்கூட இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தான்  நீரிழிவு முதல் பல நோய்களைக் கண்டு பிடிக்க உதவும் புதுப்புது மின்னணு உணரிகளை  (Electronic Sensor)  விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி வருகின்றனர்.

இதில் கவலைகளால் ஏற்படும் மனச்சுமை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. மனச்சுமை அதிகம் உள்ளவர் களது ரத்தத்தில் கார்டிசால் என்ற ஹார்மோன் கூடுதலாக இருக்கும். நமது வியர்வையில் இருந்து வெளிப்படுகிற இந்த ஹார்மோனை அளக்கும் மின்னணு உணரியை ஸ்டான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணரியில் உள்ள பட்டையை, ஸ்டிக்கர் போல தோலில் ஒட்டிக்கொண்டால் போதும். அது தொடர்ந்து வியர்வையில் கார்ட்டிசாலை அளந்து சொல்லும். இந்தத் தகவலை வைத்து நாள் முழுவதும் ஒருவரு டைய மனச்சுமை எந்த அளவுக்கு இருந்தது என்பதை மருத்துவர்களால் கணக்கிட முடியும். உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் இந்த கண்டுபிடிப்பு.

நோயாளி தன்னைப் பற்றி முழுமையாக விளக்காவிட்டாலும் அல்லது விளக்கத் தெரியாவிட்டாலும் மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் ஒரு நோயாளியை முழு வதுமாக அறிய இந்த உணரிகள் பெரிதும் உதவும் என்று பெருமையுடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner