எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

காசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக் கீரை - சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடைய செய்யும்.

கொடிபசலைக்கீரை - வெள்ளையை  விலக்கும், நீர்க் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை - பசியைத்தூண்டும். வீக்கம் வத்த வைக்கும்.

அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை - ரத்த சோகையை விலக்கும், கண்நோயை  சரியாக்கும்.

பிண்ணாக்கு கீரை - வெட்டையை, நீர்க்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை - ரத்த சோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.

வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக் கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும்.

பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக் கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளை - ஆண்மை தரும். சரும நோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக் கீரை - இருமலை போக்கும்.

சாணக் கீரை - காயம் ஆற்றும்.

வெள்ளைக் கீரை - தாய்ப்பாலை பெருக்கும்.

விழுதிக் கீரை - பசியைத் தூண்டும்.

கொடிகாசினி கீரை - பித்தம் தணிக்கும்.

துயிளிக் கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக் கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக் கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்குதட்டை கீரை - சளியை அகற்றும்.

நருதாளி கீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.


 

நன்மை பயக்கும் காய்கறிச் சாறுகள்!

இஞ்சிச் சாறு

எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய இஞ்சியைச் சாறு பிழிந்து தேன் கலந்து அதிகாலையில் அருந்தினால் பித்த வியாதிகள் விரட்டி அடிக்கப்படும். தீராத வியாதிகளும் தீர்க்கப்படும். சளி, இருமல், புளியேப்பம், வாயுத் தொல்லைகள் அகலும். வயிற்று வலி, வயிறு உப்புசம், தொண்டை வலி, தலைவலி ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

தக்காளிச் சாறு

உடலுக்கு குளிர்ச்சியை அளித்து மூலச்சூடு, மலச்சிக்கல், வாயுத் தொல்லைகளைப் போக்குகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. முகப் பொலிவுக்கும், உடல் இளமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளும் அச்சமின்றி பருகக் கூடிய தக்காளிச்சாறு உடல் பருமனைக் குறைக்கும்.

வெள்ளரிச் சாறு

வெயில் காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் நீர்ச் சத்தும் குளிர்ச்சியும் நிறைந்தது. வெள்ளரிச்சாறில் அனைத்துச் சத்துகளுடன் வைட்டமின் “பி’ அதிகமாகவும் உள்ளது. உடல் சூடு தணியும். உடல் பருமன், உடல் தொப்பை குறையும். சிறுநீரக எரிச்சல், குடல் எரிச்சல் கல் அடைப்பு குணமாகும். ரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் அவசியம் அருந்த வேண்டிய சாறு.

சுரைக்காய்ச் சாறு

நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய் குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாவுச் சத்து குறைவானது. காயைச் சிறு துண்டுகளாக்கி நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி தேன் சேர்க்கலாம். சுரைக்காய்ச் சாறு மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப் புண், மூல வியாதி முதலியவற்றைக் குணமாக்கும். உடல் சூடு தணியும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

பீட்ரூட் சாறு

புற்று நோய் ஆராய்ச்சியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பீட்ரூட் சாற்றில் சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இரு நிறங்கள் உள்ளன. பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளித்து சிறுநீரக எரிச்சலைத் தணிக்கிறது. வயிற்றுக் கோளாறுகளைக் குணமாக்கி முகப் பொலிவை உண்டாக்குகிறது. உடலில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்தவிருத்தியை உண்டாக்குகிறது. மலச்சிக்கலை அகற்றுகிறது. உடல் பருமனையும் சரியான எடைக்குச் சமன் செய்கிறது.

கேரட் சாறு

கேரட்டைத் துருவி அரைத்து வடிகட்டி நீருடன், தேன், வெல்லம் அல்லது பேரீச்சை கலந்து சாறு தயாரிக்கலாம். கேரட் சாறு கண்களைப் பாதுகாத்து கண் நோய்களைத் தீர்ப்பதில் முதல் இடத்தைப் பெறுகிறது. பற்களின் உறுதியையும் முகப்பொலி வையும் கேரட் சாறால் அடையலாம். பெப்டிக் அல்சர், கேன்சர் போன்ற நோய்களின் வீரியத்தை வெகுவாகக் குறைக்கும். கேரட் சாறு உடலில் அழிந்த திசுக்களையும் விரைவில் புதுப்பிக்கிறது.

பாகற்காய்ச் சாறு

பாகற்காய்ச் சாறு கசப்பு நிறைந்தது என்றாலும், அமிர்தத்தை விட மேலானது என்பர். பாகற்காயைச் சாறு பிழிந்து இனிப்பு வேண்டுமென்றால் சேர்த்து அருந்தலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புத மருந்து. நரம்புகள் பலம் பெறும், வயிற்றிலுள்ள புழுக்கள், பூச்சிகள் முதலியவை அழியும். நஞ்சு முறிவடையும். கல் அடைப்பு, மூலவியாதி, கல்லீரல் வீக்கம் போன்றவையும் குணமாகும்.


உடலுக்கு தேவையான வைட்டமின்கள்

* வைட்டமின் ஏ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

* வைட்டமின் பி குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

* வைட்டமின் சி குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப் படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக் கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner