எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சர்வதேச அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025இல் இரட்டிப்பாகி, 2050இல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு போன்றவற்றால் அவர்களுடைய வாழ்நாள் அளவு உயர்ந்து வருவதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

முதியவர்கள் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்வது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, தன்னார்வப் பணிகளை செய்வதோடு, தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மேலும் அவர்களுடைய முழுப் பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் மிகுதியான பலனைக் கொடுக்கிறது. எனவே, வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் இருப் பதற்கு, நீடித்த பராமரிப்பை அளிப்பது நம் ஒவ் வொருவரின் முக்கியக் கடமை.

முதியவர்களுக்கு வயது அதிகரிக்கும்போது நீண்டநாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு...

* உங்கள் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்து கொண்டு முறையாக நோய்த் தடுப்புக்கான பரிசோத னைகளைச் செய்து வர வேண்டும்.

* உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

* அதிக உடல் எடை மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதால் மிதமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அது உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். நடை, யோகா, தியானம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும்.

* புகை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

* உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம் என்பதால் உடலை அதிகமாக வருத்தக் கூடாது.

* சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடு வதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்துக்கு பல் பாதுகாப்பு அவசியம்

பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சாதாரண மருந்து மாத்திரைகளால் அளிக்கப்படும் சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை பல்வேறு வழிகள் உள்ளது.  எனவே பல் பாதுகாப்பு மிக அவசியம்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு பல் பிடுங்கும் சூழல் வந்தால் அவர்களுடைய சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திய பிறகுதான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

* பற்கள் ஏற்றமும் இறக்கமாகவும் இருந்தால் முகத்தின் அமைப்பு சீராக இருக்காது. இதற்கு   எனப்படும் க்ளிப் போட்டு சரி செய்யலாம்.

* செயற்கை பல்லை அதன் இடத்தில் வலுவாக பொருத்துகிற   நவீன மருத்துவம் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்த டெண்டல் இம்ப்ளாண்ட் மூலம் இழந்த பல்லின் இடத்தில் தாடைக்குள் நிரந்தரமாக பல்லைப் பொருத்த முடியும்.

* வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை அடக்குதல், பாக்குகளை பயன் படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்கியம் கெடலாம். ஆதலால், ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.

* பற்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்கு வதைப் போலவே, இரவு தூங்குவதற்கு முன்னும் பல் துலக்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner