எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 31 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் அதிநவீன வசதிகளுடன் கூடிய இலவச நடமாடும் காசநோய் பரிசோதனை முகாமை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை யர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்துக்கு உள்பட்ட எண்ணூர் தாழங்குப் பத்தில் இலவச நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 106 பேரின் சளி மாதிரி கள் சேகரிக்கப்பட்டது.

முகாம் நடைபெறும் இடங்கள்

மாநகராட்சியின் தண்டை யார்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 31), ராயபுரம் நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதன் கிழமையும் (ஆகஸ்ட் 1), ராயபுரம் போஜராஜன் நகரில் வியாழக்கிழமையும் (ஆகஸ்ட் 2), ஆசிர்வாதபுரம், பேசின்பிரிட்ஜில் வெள்ளிக்கிழமையும் (ஆகஸ்ட் 3), தேனாம்பேட்டை சண்முகம்பிள்ளை தெரு, ருத்தரபுரம், நொச்சிகுப்பத்தில் ஆகஸ்ட் 4-ஆம் தேதியும், அடை யாறு சீனிவாசபுரம், பட்டினப் பாக்கத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், அடையாறு ஓடை மான் நகர், திடீர் நகர், பெசன்ட் நகரில் ஆகஸ்ட் 7-ஆம் தேதியும், அடையாறு ஆர்.பிளாக், கோட் டூர்புரத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதியும், பெருங்குடி, கல்லுக் குட்டையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதியும், சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரியில் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஆகஸ்ட் 11-ஆம் தேதியும் இலவச நடமா டும் காசநோய் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner