எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப் படுகிறது.

*  கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும் பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

*  உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

*    ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

*     கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விரைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

*    நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

*  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

*    கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

*    முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

*    கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

*    3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*    தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

*    கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

*  கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப் பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப் பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்.

ஏனெனில் கறிவேப்பி லையில் பல்வேறு மருத் துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண் மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபி யாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பி லையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு எண்ணையாக பயன்படுத் தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித் துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.

பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட் டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என் கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டி யில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறி வேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவி லிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவா வதையும் தடுக்கிறது.

பிரிரேடிக் கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களி லுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக் கல்ஸ் உருவா வதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என் கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத் தக்கது.

கொலஸ்ட்ரால் பற்றி...

நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலிலும், கொழுப்பு - நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று

இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்பிக் கொண்டி ருக்கிறது மருத்துவ உலகம்.

அதன் காரணமாக இதய நோயைத் தடுக்க, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பது, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் குறைப்பது என்ற அணுகுமுறையை அது பின்பற்றி வருகிறது. 1 லிட்டர் ரத்தத்தில் 1.03 மில்லி மோலுக்கும் குறைவாக நல்ல கொழுப்பு இருந்தால் இதயத்தில் பிரச்சினை வரும் என்று முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தது தான் இந்த அணுகு முறைக்கு அடிப்படை.

ஆனால் கடந்த வாரம் (ஜூலை 22) பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான லேன்சட் தனது இணைய தளத்தில் வெளி யிட்டுள்ள ஒரு தகவல், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்குமிடையே சம்பந்தம் இருப்பதாகக் கருதி மேற்கொள் ளப்பட்ட அணுகுமுறையைத் தூக்கி யெறிந்து விட்டது!

முதல்நிலை இதய நோய்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை ஆராய 17,800 பேரிடம் ஜூபிடர் என்ற ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சரி பாதிப் பேருக்கு அதாவது 8,900 பேருக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந் தான ரோசுவாஸ்டாட்டின், தினம் 20 மி.கி. அளவிற்குக் கொடுக்கப்பட்டது.

மீதமுள்ள மற்றொரு பாதியினருக்கு மருந்து கொடுக்கப் படவில்லை. ஆய்வின் முடிவுகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்கு மிடையே சம்பந்தம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கின்றன. முதல் நிலை இதய நோய் ஏற் படாமல் தடுக்க, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் கணிசமாகக் குறைத்து விட்டால் போதும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனத் தெரிவிக் கின்றன.

ஜூபிடர் ஆய்வறிக்கை இதுவரை மருத்துவ உலகம் கொண் டிருந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதால் மருத்துவ உலகில் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner