எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செர்விகல் ஸ்பாண்டி லைட்டிஸ்  என்று அழைக்கப் படும் கழுத்து வலி  கால் நூற்றாண்டுக்கு முன்புவரை  வயதானவர்களுக்கு மட் டுமே வருகிற நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது.

கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்குத் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்குச் செல்லப் பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்குப் பாதை அமைப்பவைதான்.

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். கழுத்தை எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியைச் சாதாரண வலி மாத்திரைகள், களிம்புகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத் துக்கு டிராக்சன் போட்டுக்கொள்வது, பிசியோதெரபி சிகிச்சை போன் றவை பலன் தரும். நோயின் தன்மையைப் பொறுத்து சிலருக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படலாம். நீங்கள் எலும்பு நலச் சிறப்பு மருத்துவரையோ, நரம்பு நலச் சிறப்பு மருத்துவரையோ நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

மீண்டு வந்தாலும் மீண்டும் வரும் டெங்கு!

பொதுவாக, அம்மை போன்ற வைரஸ் நோய்கள் தாக்கும்போது, ஏதாவது ஒரு வகைக் கிருமி மூலம் மட்டுமே நோய் வரும். அதனால், ஒருமுறை அந்த நோய் வந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைத்துவிடுவதால், மறுபடியும் அதே நோய் ஏற்படுவதில்லை. ஆனால், டெங்கு அப்படியில்லை.

டெங்குக் கிருமிகள் மொத்தம் நான்கு வகை. இவற்றில் பல துணை வகைகளும் உண்டு. எந்த வகையினாலும் டெங்கு வரலாம். முதலில் எந்த வகை டெங்குக் கிருமியால் நோய் ஏற்பட்டதோ அந்த வகைக் கிருமிக்கு மட்டுமே டெங்கு சரியானதும், நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மற்ற மூன்று வகைக் கிருமிகளுக்கு அந்த எதிர்ப்பாற்றல் கிடைக்காது. ஆகவே, அடுத்தமுறை அதே நபருக்கு மற்ற மூன்று வகைக் கிருமிகளால் டெங்கு வரும் சாத்தியம் உள்ளது. எனவே, ஒருமுறை டெங்கு வந்தவர்களும் மற்றவர்களைப் போல், கொசுக் கடியிலிருத்து தப்பிக்கத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டால் மீண்டும் டெங்கு வராமல் தப்பிக்கலாம்.

இரண்டாம் முறை டெங்கு வந்தால் ஆபத்தும் அதிகம். உடனடியாக, மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். ஒருவருக்கு டெங்கு வந்திருப்பது, முதல் முறையா, இரண்டாம் முறையா எனத் தெரிந்துகொள்ளவும் ரத்தப் பரிசோதனை உள்ளது.

ரத்தத்தில் அய்.அய்.எம். மற்றும் அய்.ஜி.ஜி. எதிர் அணுக்கள்  இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்த்தால் அது தெரிந்துவிடும். காய்ச்சல் ஏற்பட்ட அய்ந்தாம் நாளில்    பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பயனாளிக்கு டெங்கு பாதிப்பு முதல் முறையாக இருந்தால், அய்.ஜி.எம். அளவு அதிகமாக இருக்கும். அய்.ஜி.ஜி. அளவு குறைவாக இருக்கும். டெங்கு பாதிப்பு இரண் டாவது முறையாக இருந்தால், அய்.ஜி.எம். அளவு குறைவாக இருக்கும். அய்.ஜி.ஜி. அளவு அதிகமாக இருக்கும்.

பொருளாதாரம் மேம்பட்ட அயல் நாடுகளில் டெங்கு அவ்வளவாக இல்லை என்பது உண்மை. இதற்கு முக்கியக் காரணம் அங்கு நிலவும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை, கொசு உற்பத்திக்கு அவ்வளவாக உதவுவதில்லை. அடுத்த காரணம் அங்குள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையிலும் கழிவுநீரை அகற்றுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். கொசு வளர்வதைத் தடுக்கப் பெரும்பாலான நகரங்களில் பாதாளச் சாக்கடை உதவுகிறது. அதை நன்றாகப் பராமரிக்கின்றனர் என்பதும் மிக முக்கியமானது.

வீடு, அலுவலகம், ஆலைகள், உணவு விடுதிகள் போன்ற வற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி வெளியேற்றுவதற்கும், அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் முறையான அமைப்புகளை வைத்துள்ளனர்.

இதன் பலனால் கொசு உற்பத்தி குறைந்துவிடுகிறது. அயல் நாடுகளில் கொசு ஒழிப்புக்கு நிரந்தரத் திட்டங்களை வகுத்துள்ளனர்.

இந்தியாவிலோ கொசுக்கள் வளர இடம் கொடுத்துவிட்டு, அதை ஒழிப்பதற்கு மருந்து தெளித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் கம்பூசியா அஃபினிஸ்  எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக் களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்.

வயிற்றுக் கோளாறுகளை போக்கும் மிளகு

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், தோல்நோய்களை போக்கவல்லதும், மூலநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதுமான  மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டு பந்தியிலும் அமரலாம் என்று கூறும் அளவுக்கு மிளகு பல்வேறு நன்மைகளை உள்ளிடக்கியது. மிளகு காரச் சுவை கொண்டது. இது, பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் வலி, காய்ச்சல், மாதவிலக்கு போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

மிளகை பயன்படுத்தி செரிமான கோளாறு, வயிறுமாந்த பிரச்சினைக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி, சுக்கு பொடி, திப்பிலி பொடி, சோம்புதூள், சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். பசியை தூண்டும். இது பித்த சமனியாக விளங்குகிறது. மாந்தத்தால் எற்படும் கழிச்சலை குணமாக்குகிறது. மிளகு பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. நுண்கிருமிகளை அளிக்கும். வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளக் கூடியது. வலியை போக்க கூடியது. வயிற்று வலி, சிறுநீரக பாதையில் ஏற்படும் வலி, மார்பு வலி போன்றவற்றை குணப்படுத்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை சேர்ந்தது திரிகடுகம் என்று அழைக்கப்படுகிறது. இது, மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்துக்கு சுக்கு பலம் கொடுக்கிறது. செரிமானத்தை சீர் செய்கிறது. தலைபாரத்தை குறைக்கிறது.

எலும்பிற்கு வலு சேர்க்கும்  சாத்துக்குடி சாறு

சாத்துக்குடி பழத்தில் அபரிமிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சாத்துக்குடியில், நார்சத்து  நிறைந்துள்ளது.

சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறு களை நீக்க உதவுகிறது. எலும்புகளுக்கு வலுவூட் டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. சாத்துக்குடியில் பொட்டாசியம், பாஸ் பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துக்குடி சாறு குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். உடலில் புதிய ரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துக்குடி பழச்சாறு அருந்த வேண்டும். உடல் அசதி பறந்துவிடும். அதனால் தான், நோயுற்றவர்களுக்கு சாத்துக்குடி சாறு அருந்த தரப்படுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துக்குடி சாறு அருந்தலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றி யமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துக்குடி சாறு அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துக்குடி சாறு சிறந்த பலனை தரும். பெரியவர்களுக்கு ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துக்குடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner