எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதமிழ்நாட்டில் மிக எளிதாக கிடைக்கக் கூடிய காய்கறிகளிலிருந்து உடலில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற வகையில் ஒவ்வொரு காய்க்கும் உள்ள மருத்துவ குணங்கள் பட்டியலிடப் பட்டுள்ளது. இந்த காய்கறிகளை முழுதோலுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் (தோலை நீக்க கூடாது நீக்கினால் பயன் கிடையாது, வேகவைக்கவும் கூடாது) இந்த குறிப்புகள் அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களின் கருத்தினைக் கொண்டு உரையாற்றிய விவசாய பயன்பாட்டாளரின் தொகுப்பு.

இரத்த அழுத்த நோய்க்கான காரணத்தை குறைக்கக்கூடிய காய் வகை

5 வெண்டைக்காயை சுடுநீரில் பத்து நிமிடம் ஊறவைத்து உணவுக்கு முன்பாக மூன்று நேரமும் பச்சையாக சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

இதயநோய் உள்ளவர்களுக்காக: வாழைக்காயை தோலோடு சாறாக பிழிந்து தினசரி குடித்து வந்தால் இரத்த குழாய் அடைப்புகள் சரியாகும்.
கேன்சர்: கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடலில் உள்ள புளிப்புத்தன்மையை முற்றிலுமாக குறைக்க வேண்டும், அத்துடன் வெள்ளை பூசணிக்காய் சாறு எடுத்து தினசரி குடித்து வந்தால் நோய் குணமாகும். சாத்திய கூறுகள் அதிகம்.

சிறுநீர் பிரச்சினைகள்: இரண்டு கத்தரிக்காய், இரண்டு தக்காளி ஆகிய வற்றை சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதன் சாறு எடுத்து தினசரி குடித்து வந்தால் கெட்ட நீர்கள் வெளியேற்றப்பட்டு நாளடைவில் பிரச்சினைகள் நீங்கும்.

நரம்பு பிரச்சினைகள், பீரியட் பிரச்சினை, பக்கவாதம்: இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 10 கொத்தவரங்காய், ஒரு எலுமிச்சை பழம் (தோலுடன்) மிக்சியில் அரைத்து சாறு எடுத்து குடித்துவர பிரச்சினைகள் நீங்கும்.

மன அமைதி, தூக்கமின்மை: புடலங்காயை சாறு எடுத்து குடித்து வர நல்ல முன்னேற்றம் காணலாம்.

குடல், தசை, கர்ப்பப் பை பிரச்சினைகள்: அரசாணிக்காய் (மஞ்சள் பூசனிக்காய்) சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கொலஸ்ட்ரால், சோரியாசிஸ்: கோவைக்காய் அல்லது அதனுடைய இலை சாறு எடுத்து குடித்துவர பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கும்.
ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகள்: முருங்கை இலை சாறு எடுத்து குடித்து வரவும் அல்லது நன்கு முற்றிய விதையினை சப்பி சாப்பிட்டால் பிரச்சினைகள் நீங்கும்.

பெப்டிக் அல்சர்: பீர்க்கங்காய் சாறு எடுத்து குடித்துவர வேண்டும் அல்லது மென்று சாப்பிட வேண்டும்.

மூட்டுவலி (முதியோர்), எலும்பு பிரச்சினை: கொப்பரத்தேங்காய் (நன்றாக முத்திய எண்ணெய் பசையுள்ள தேங்காய்) தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பிரச்சினை நீங்கும்.

தைராய்டு, ஹார்மோன் இம்பேலன்ஸ்: எலுமிச்சை பழத்தை தோலோடு மிக்சியில் அரைத்து சாறு எடுத்து குடித்துவர பிரச்சினைகள் தீரும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner