எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல் சொத்தை, இன்று பலருக்குக் குடும்பச் சொத்துபோல ஆகிவிட்டது. சரியாகப் பல் துலக்காதது, இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிட்ட பின் வாயைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது, பல் துலக்காமல் இருப்பது போன்ற பல காரணங்களால் பல் சொத்தை ஏற்படுகிறது.

பற்சொத்தையின் முதல் படியாக கரும் புள்ளி தெரியும். பிறகு பல்லில் சிறு ஓட்டை விழும். பிறகு பல் வலி எடுக்கும். ஆரம்ப நிலையிலேயே பல் மருத்துவரின் ஆலோச னையைப் பெற்றால், அடுத்து வரும் பாதிப்புக் களைத் தடுக்கலாம்.

இதுகுறித்து கோவையில் உள்ள பல் மருத்துவர் திவ்யா தரும் ஆலோசனைகள்:

பல் சொத்தைக்கு முக்கியக் காரணம் நாம சாப்பிடற உணவு பொருட்களில் இருக்கிற மாவுச்சத்துதான் (கார்போஹைட்ரேட்).

குழந்தைகளுக்கு ரொம்பச் சின்ன வயசு லேயே பல் சொத்தையாவதற்குக் காரணம், இரவு நேரத்துல குழந்தைக்கு பாட்டிலில் பாலைக் கொடுத்துவிட்டு, பல தாய்மார்கள் தூங்கிடுறாங்க.

குழந்தைகள் ரொம்ப நேரம் பால் பாட் டிலை வாயிலேயே வெச்சுகிட்டு இருக்கிறதா லே, அவங்க வளர வளர அதுவே பல்லை பலவீனப்படுத்தி பல் சொத்தையாகக் காரண மாகிடுது.

பல்லின் வேர்வரை சொத்தை பரவி, பல் வலி அதிகமாகி, பல்லை அகற்றும் நிலை வரலாம். பல்லை அகற்றாமல், பல்வேர் சிகிச்சை (ரூட் கெனால்) முறை நிவாரணம் தரலாம். பல்வேர் சிகிச்சை செய்யப்பட்ட பல்லுக்கு செராமிக் கேப் போடுவார்கள்.

வேர் சிகிச்சை செய்த பல்லின் மூலம் கடினமான உணவுப் பொருட்களை கடிக் காமல் பாத்துக்கொண்டால் போதும். அழகான பற்கள் கேரண்டி என்றார்.

டெங்கு வைரஸ் பரவுவதை கண்டறிய தொழில்நுட்பம்


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலையின் அடிப்படை யில், டெங்கு காய்ச்சலுக்கான வைரஸ் பரவு வதைக் கண்டறிவதற்கு புதிய தொழில்நுட்ப முறையை பிரிட்டன் ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

பிரிட்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களும், அய்தராபாத்தில் உள்ள இந்திய ரசாயன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், குவாஹாட்டியில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வனத்தின் ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர்.

அவர்கள், கேரளம், குஜராத், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையின் அடிப்படையில், டெங்கு வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வரை கொசு கடிப்பதன் மூலம், அவருடைய உடலில் உள்ள டெங்கு வைரஸ், அந்தக் கொசுவின் உடலுக்குள் செல்கிறது. பின்னர், அந்தக் கொசுவின் உடலில், டெங்கு வைரஸ் பல்கிப் பெருகுகிறது. அதன் பிறகு, நலமாக இருக்கும் ஒருவரை அந்தக் கொசு கடிக்கும் போது, அதன் உமிழ் நீர் வழியாக, அந்த மனிதருக்கு டெங்கு வரைஸ் பரவுகிறது.

இந்நிலையில், கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் பல்கிப் பெருவதில், அந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு பிராந்தியத்தின் தட்பவெப்ப நிலை குறைவாக (17-18) டிகிரி செல்சியஸ்) இருந்தால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொசுக்களின் உடலில் டெங்கு வைரஸ் பல்கிப் பெருவதற்கு அதிக நாள்கள் ஆகும். இதனால், டெங்கு வைரஸ் பரவுவது குறைகிறது.

அதேநேரம், ஒரு பிராந்தியத்தின் தட்ப வெப்ப நிலை அதிகமாகும்போது (17 முதல் 30 டிகிரி செல்சியஸ்), அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொசுக்களின் உடலில் குறைந்த நாள்களில், டெங்கு வைரஸ் பல்கிப் பெருகு கிறது.

இதனால், அதிக அளவில் டெங்கு வைரஸ் பரவுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மழைப் பொழிவுக்கும், டெங்கு வைரஸ் பரவுவதற்கும் இடையே அதிக தொடர்புகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருக்கிறார்கள்.

அதன்படி, பெரும்பாலான மாநிலங்களில் மழைக்காலத்தில், குறுகிய நாள்களிலேயே அதிக அளவில் டெங்கு வைரஸ் பரவுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, தட்ப வெப்ப நிலையின் அடிப்படையில், டெங்கு வைரஸ் பரவுவதை முன்கூட்டியே கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை இந்த ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு பிராந்தியத்தில் டெங்கு வைரஸ் பரவு வதற்கான சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று ஆய்வுக் குழுவின் தலைவர் சீனிவாச ராவ் முத்தனேனி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner