எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுடும் வெயிலில் கடும் தலைவலி

வெயில் காலம் வந்து விட்டாலே உடல் உபாதைகளுக்கு பஞ்சமில்லை. அதிலொன்று தலைவலி. சிலருக்கு வெயிலில் சென்றாலோ அல்லது வெயில் பட்டாலோகூட தலை வலி தோன்றுவதுண்டு.

ஏன் இப்படி தலைவலிக்கிறது?  சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின்  உக்கிரத் தாக்குதலால், நம் உடலில் உள்ள நீர்ச் சத்தும், உப்புச் சத்தும் குறைந்து விடுகிறது, இதனால் வெயில் காலங்களில் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்து விட்டு வருபவர்கள் சிலர் வெயிலின் தாக்கம் குறையும் என்று எண்ணி உடனடியாக குளிர்ச்சியான பானங்களை குடிக்கும் பழக்கம் உடையவர்கள்.

இது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்வதனால் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டு தலைவலி ஏற்படுகிறது. தலைவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்துகிறது. இயற்கை அல்லாத குளிர் பானங்களால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தலைவலியை ஏற்படுத்தும். குளிர் பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கக்கூடிய இளநீர், மோர், உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரும் உடலின் வெப்பத்தை தணிக்கும்.

தினமும் நீண்ட தூரம் வண்டி ஓட்டுபவர்கள் காட்டன் உடைகளை அணிவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் தலை சுற்றலோ அல்லது வாந்தி, மயக்கம் ஏற்படுகின்ற மாதிரி அறி குறிகள் ஏற்பட்டால் உடனடியாக நிழலான இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்தபின் பயணத்தை தொடரலாம். இறுக்கமான உடை களை அணியக்கூடாது. வெயில் தலையில் படுவதால் வியர்வை ஏற்படுகிறது.

அதை உடனடியாக துடைத்து விடவேண்டும் அல்லது காற் றோட்டமாக உலர வைக்க வேண்டும். தர்பூசணி, சாத்துக்குடி ஆகிய நீர்ச்சத்து நிறைந்த பழவகைகள் உடலுக்கு நீர்ச்சத்தைக் கொடுத்து நம்மை பாதுகாக்கும். வெயில் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக  தண்ணீர் குடிக்க வேண்டும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமான வெயிலில் இருந்து வந்த உடனே டெம்ப்ரேச்சர் குறைவாக வைத்து ஏசியில் வேலை பார்ப்பதும் தலைவலியை அதிகப்படுத்தும்.புறஊதாக் கதிர்கள் கண்களில் படும்போது கண்களின் பின்புறம் வலி ஏற்பட்டு அது தலைவலியையும் ஏற்படுத்தும் என்பதால் குளிர் கண்ணாடி அணிவது சிறந்தது. இரத்த அழுத்தம் உடையவர்கள் வெயிலின் தாக்கம் இல்லாத நேரங்களில் தங்களுடைய வேலைகளை பார்ப்பது நல்லது. இயற் கையான நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க சிறந்த வழி.

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலை யில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறு நீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு  தீர்வு காண்பது  குறித்து நலம் தரும் நாட்டு மருத் துவத்தில் பார்க்கலாம். பொன்னாங்கண்ணி, புளிச்ச கீரை, செவ்வாழை ஆகிய வற்றை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கி, உடலுக்கு பலம் தரும் மருந்துகள் குறித்து பார்க்கலாம். சிவப்பு பொன்னாங்கண்ணி பல்வேறு நன்மைகளை கொண்டது. உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன் தோலுக்கு மினுமினுப்பை கொடுக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம், அழகை தரக்கூடிய கீரை இது. புளிச்ச கீரையில் கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகளவில் உள்ளன. சுவையான உணவாக விளங்கும் இது அற்புதமான மருந்தாகிறது. செவ்வாழை உணவாகி மருந்தாகிறது.

புளிச்ச கீரை நாவறட்சி, சோர்வு நீங்கும். உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.  புளிப்பு சுவையுடையதுமான இந்த கீரை எலும்பு களுக்கு பலம் கொடுக்க கூடியது. நார்ச்சத்து உடை யது.  சிவப்பு பொன் னாங்கண்ணி கீரையில் நார்ச்சத்து உள்ளது. இது நோய்கள் வரா மல் பாதுகாக்கும். மலச்சிக்கலை போக் கும். கண்களுக்கு கூர் மையான பார்வையை கொடுக்கும். சிவப்பு பொன்னாங்கண்ணி யில் இரும்பு சத்து, விட்டமின், மினரல் உள்ளிட்டவை உள்ளது. சிறுநீர் தாரையில் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது.அதிக வெயிலால் சிறுநீர் தாரையில் எரிச்சல், உடல் எரிச்சல், அதிக வியர்வை, துர்நாற்றம், சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு செவ்வாழையை  பயனுள்ளதாக அமைகிறது.  கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் தலைவலியை போக்க கொடி பசலை கீரை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கொடி பசலை கீரை உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. வலியை போக்கும் தன்மை கொண்டது. கொடி பசலை கீரையை அரைத்து பசையாக்கி நெற்றியில் பற்றாக போட்டுவைத்தால் தலைவலி

வெகு விரைவில் விலகிப் போகும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும் தேன்பழம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உண வுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பய னுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேன் பழம் என்று அழைக்கப்படும் ஜமைக்கன் செர்ரியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.   சாலையோரங்களில் காணப் படும் குறு மரம் ஜமைக்கன் செர்ரி. இனிமையான சுவையை கொண்ட பழங்களை உடையது. இது கோடை காலத்தில் பழுத்து பயன் தரக்கூடியது. தேன்பழம் மரத்தின் இலைகள், பூக்கள், கனிகள், வேர், பட்டை என அனைத்தும் மருந்தாகிறது.

இதன் பழங்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. இதில், வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம், நீர்ச்சத்து ஆகியவை உள்ளன. தேன் பழங்கள் செர்ரி போன்று சிவந்த நிறத்தில் இருக்கும். இந்த பழம் சாப்பிடும்போது தேனை போல இனிக்கும்.  இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. தேன் பழத்தின் இலைகளை பயன்படுத்தி வயிற்று வலி, மூட்டுவலியை குணப்படுத்தும்.  பல் வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேன் பழத்தின் இலைகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது. தேன் பழத்தின் இலைகளை பயன்படுத்தி தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்துக்கான மேல் பூச்சலாம்.   தேன் பழத்தின் இலைகளை நீரில் இட்டு காய்ச்சி குடித்துவர வயிற்று வலி சரியாகிறது. இது தலைவலி, காய்ச்சலுக்கு அற்புதமான மருந்தாகிறது. எளிதாக கிடைக்கும் இந்த மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை

இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக     ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்ப தாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக் கிறது.

குழந்தைகளிடம் அதிகரித்திருக்கும் ரத்த சோகையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக் கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இதுதான் அடிப்படையான பிரச்னை. கருவுற்றவுடன் மருத்துவரை அணுகுவதில் தாமதம், தக்க சிகிச்சை மற்றும் பரிசோதனை எடுத்துக்கொள்வதில் இருக்கும் தொய்வு, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் அலட்சியம் காட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு ரத்தசோகையுடன் குழந்தை பிறக்கிறது.குழந்தை குறை மாதத்திலும் பிறக்கும். எடை குறைவாகவும், அதாவது 2 கிலோவுக்குக் குறைவாக இருக்கும். பிறந்த பிறகு பால் குடிக்கும் திறனும் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் இது அடிப்படையான காரணமாக இருக்கிறது. தவழ்வது, நடப்பது போன்ற செயல்பாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.

அதனால், கருவுற்ற முதல் நாளிலிருந்து மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். ஊட்டச் சத்து மாத்திரைகள் எல்லா அரசு மருத்துவமனை களிலும் கிடைக்கிறது. இதை கருவுற்ற தாய்மார்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner