எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மறந்து போன எண்ணெய்க் குளியல்

நமது வண்டியைச் சரியான கால இடை வெளியில் சர்வீஸ் செய்யவில்லை என்றால், வண்டி ஓட மறுக்கிறது; பிரச்சினை செய்கிறது. அதனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் வண்டியைப் பராமரிக்கிறோம். ஆனால், நாம் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டு தாக்குப்பிடிக்கும் உடலை முறைப்படி சர்வீஸ் செய்கிறோமா? குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு சிறந்த வழிமுறை.

இப்போது நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகளைப்போல், நம் முன்னோர் களுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் அன்றைய கோட்பாடான உணவு முறை, வாழ்க்கை முறை. அதில் எண்ணெய்க் குளி யலும் அடக்கம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வாத, பித்த, கபத் தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய சரியான மாத்திரை அளவில் வைப்பதற்கு உதவுகிறது. எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை உத்தம நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று இடையில் நம்பப்பட்டு வந்தது. இப்போது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூல மாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃ பாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப் படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

கிடைக்கும் நன்மைகள்

சிரசாசனம் செய்யும்போது தலைப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் எடுத்துச் செல்லப்பட்டு மூளைப் பகுதி எவ்வாறு பலப்படுகிறதோ, அதேபோல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் ரத்தவோட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு எண்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

தற்போதைய அவசர உலகில், பலருக்கும் மன அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இவற் றால் உடல் வெப்பமடையும். மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள், தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

எண்ணெய் குளியல் தரும் நன்மைகள்

முடி உதிர்தலைக் குறைக்கும்

பார்வை பலப்படும்

முதுமையைத் தாமதப்படுத்தும்

ஆயுட்காலத்தைக் கூட்டும்

தோலைப் பளபளப்புடன் வைத்திருக்க உதவும்

உடலில் உண்டாகும் கழிவை வெளித் தள்ளும்

உள்ளுறுப்புகள் தங்களுடைய செயல் களைச் சிறப்பாகச் செய்யும்

மனதை நல்ல நிலையில் வைத்திருக்கும்

முறையான தூக்கத்தைத் தரும்

உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப் பற்றாலுடனும் வைத்திருக்கும்

மூட்டுக்கு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தைக் குறைக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சளி பிடிக்கிறது எனப் பெரும்பாலான மக்கள் நம்புவதற்கு மாறாக, கபத்தையும் இது நல்ல நிலையில் வைத்திருப்ப தால் கால மாறுபாட்டால் வரும் தொந்தரவுகளையும் தவிர்க்கிறது.

உடலுக்கு ஆதாரமான, உடல் இயக்கத் துக்கு அடிப்படையான வாத, பித்த, கபத்தைச் சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

சுட்டெரிக்கும் வெயில் : கண்கள் ஜாக்கிரதை

சுற்றுலா, விடுமுறை, விளையாட்டு எனக் குழந்தைகள் குதூகல மாகச் சுற்றித் திரியும் காலம் கோடைக் காலம். வெயில் காலத்தில் தூசு நிறைந்த சுற்றுப்புறத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான சாத்தியம் அதிகம்.

இப்படி விளையாடும்போது கண்ணில் உள்ள கன்ஜங்டிவா என்ற வெள்ளைப் பகுதியில் ஏற்படும் ஒவ்வாமையான அலர்ஜி கன்ஜங்டிவைட்டிஸ், கண் உலர்தல் நோய் போன்றவை ஏற்படுவ தற்கான சாத்தியம் அதிகம்.

இதனால் கண் சிவந்து இருப்பது, கண் அரிப்பால் கண்ணைத் தேய்த்துக்கொண்டு, கண்ணை அடிக்கடி சிமிட்டிக்கொண்டிருப்பது போன்ற அறிகுறிகளுடன் தங்கள் குழந்தைகளைக் கண் மருத்து வரிடம் அழைத்து வரும் பெற்றோர் அதிகம்.

தடுப்பது எப்படி?

* குழந்தைகள் புழுதி நிறைந்த இடங்களில் விளையாடு வதைத் தவிர்க்க வேண்டும்.

* வெயிலில் செல்லும்போது தரமான கண் குளிர்ச்சி கண்ணாடி(Sun Glass)
போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். தரமற்ற, போலியான கண் குளிர்ச்சி கண்ணாடி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கண் மருத்துவர் அல்லது கண்ணாடிக் கடைகளில் கிடைக்கும் புறஊதா கதிரியக்கத்தைத் தடுக்கக்கூடிய கூலிங் கிளாஸைப் பயன்படுத்தவும்.

* குளிர்ந்த தண்ணீரால் அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

* கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை நனைத்துக் கண் மீது ஒத்தடம் வைக்க வேண்டும்.

*கண் ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் வெயில் காலத்தில் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொண்டும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

* மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* வீட்டைத் தூசியில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

*அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீச்சல் குளத்தில் கண் பாதுகாப்பு

விடுமுறை காலத்தில் குழந்தைகளில் பலரும் கோடை வெப் பத்தைத் தணித்துக் கொள்ள நீச்சல் பயிற்சி செல்வது வழக்க மாக இருக்கும்.

* அப்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளவும்.

*நீச்சல் குளத்தின் சுத்தத்தை உறுதி செய்து கொள்ளவும்.

*குளித்து முடித்தவுடன் குளிர்ந்த, சுத்தமான தண்ணீரால் முகம், கண் பகுதியைக் கழுவிக்கொள்ளவும்.

கூர்மையான பொருட்கள் ஜாக்கிரதை

விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடும் போது, கூர்மையான விளையாட்டுப் பொருட்களை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்களா என்றும் பெற்றோர் கவனிக்க வேண்டும். விளையாடும்போது கூர்மையான பொருட்கள் கண்ணில் குத்தி விபத்து ஏற்படுவது அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.

உலர் கண் நோய்

வெயில் காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாகக் கண் நீர் படலம் உலர்ந்து, கண் எரிச்சல், உறுத்தல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இதை எப்படித் தடுப்பது?

1. அதிகப்படியான தண்ணீர், பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.

2. செல்பேசி, அய்பேடு, டேப்லெட் போன்ற மின்னணு கருவி களில் குழந்தைகள் காணொலி விளையாட்டுகள் (வீடியோ கேம்ஸ்) விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து காற்று நேரடியாகக் கண்ணில் அடிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. கண் மருத்துவரை அணுகிச் செயற்கை கண்நீர் சொட்டு மருந்து வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.
அதிகப்படியான வெயிலில் உள்ள புறஊதா கதிர்கள் வெயிலில் வேலை செய்பவர்களுக்குக் கண் சதை வளர்ச்சி கண் புரை, விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப் பாக விவசாயிகள், வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுப்பது எப்படி?

* வெயில் காலத்தில் வெயில் அதிகம் அடிக்கும் நேரமான பகல் 10 மணி முதல் மதியம் 2 மணிவரை வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

* வேலைக்கு இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு முறை மரத்தடியில் அல்லது நிழலில் அய்ந்து நிமிடங்கள் அமர்ந்து, நிறைய தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்யலாம்.

பொதுமக்களின் கவனத்துக்கு

*உடல், கை, சுற்றுப்புரம் போன்றவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*உச்சி வெயிலில் செல்வதைத் தவிர்க் கவும்.

*வெயில் பாதுகாப்புக்குத் தனிக் கண்ணாடி அணிந்து கொள்ளவும்.

* கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத் துவரை அணுகவும்.

*மருந்துக் கடைகளில் சுயமாகக் கண் சொட்டு மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner


Banner