எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழச்சாறு அருந்தும் முன் கவனிக்க வேண்டும்!

வசதி படைத்தவர்கள் தண்ணீரைக்கூடத் தரம் பார்த்துக் குடிக்கலாம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கொளுத்தும் கோடையை சமாளிக்க, தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற குளிர்பானம், கூழ், பழங்கள்தான் அவர்களுக்கு ஆறுதல். இவை உடனடியாக அவர்களது தாகத்தையும் களைப்பையும் போக்கினாலும், பின்ன ணியில் உள்ள ஆபத்தை யாரும் உணர்வது இல்லை. வெயிலில் நீண்ட நேரம் வைக்கப்படும் எந்த உணவுப் பொருளிலும் கெட்டுப்போகும் தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் அரசு மோகன்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் பழச்சாறு, லஸ்ஸி, ஃப்ரூட் சாலட், கரும்பு சாறு, சர்பத், பனஞ்சாறு, கேழ்வரகுக் கூழ்,  தர்பூசணி,  அய்ஸ்க்ரீம் போன்றவற்றின் வியாபாரம் அதிக அளவில் நடைபெறும். தாகம் தணிய வேண்டும் என்று அருந்தும் இந்த குளிர்பானங்களில் நோயைப் பரப்பும் காரணிகள் அதிகம் என்பது தெரியுமா உங்களுக்கு?!இந்த பழச்சாறுகள் பெரும்பாலும் திறந்த நிலையிலேயே விற்கப்படுகின்றன. இதனால் ஈக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கம் எளிதாக இருக்கும். ஏதோ பெயரளவுக்கு சிலர் கம்பி வலையால் மூடி வைக்கின்றனர். சிலர் தாள்களால் மூடி வைக்கின்றனர்.   பழச்சாறு தயாரிக்க பயன்படுத்துகிற மிக்ஸி, பழங்களை அறுக்கிற கத்தி போன்றவற்றை ஒவ் வொரு தடவையும் நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். அதேபோல், பழங்களை மிக்ஸியில் போட்டு அரைக்கும் முன் சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும். பழச்சாறு ஊற்றி கொடுக்கும் டம்ளர் போன்ற பாத்திரங்களையும் சுத்தமாக கழுவிய பின்னரே, அடுத்த முறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் அப்படி செய்வது கிடை யாது. மிக்ஸி, டம்ளர் போன்றவற்றை திறந்தவெளியில் வைப்பதால், அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப் படும் புகை, தூசு, நோயைப் பரப்புகிற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நிரந்தரமாக தங்கவும் கூடும்.

வெயிலில் நீண்ட நேரம் சுகாதாரமற்ற முறையில் வைக்கப் படுகிற உணவுப்பண்டங்களில் நோயைப் பரப்புகிற வைரஸ், பாக்டீரியா விரைவில் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வயிற்றுப்போக்கு அதன் காரணமாக ஏற்படும் நீர்ச்சத்து குறைதல், களைப்பு, மயக்கம் அடைதல் என பலவிதமான பாதிப்புக்கு ஆளா கின்றனர்.    அதனால், முடிந்தவரை சாலையோர கடை களில் பழச்சாறு, லஸ்ஸி போன்றவற்றை தவிர்ப்பதே பாதுகாப்பானது.  தரமான கடைகளில்,  தரமான பழங்கள், நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை வாங்கி உபயோகிப்பது நல்லது.

வலிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி போன்ற ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுகிறார்கள். இப்படிச் சொல்வது சரியா? சரியில்லை. சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர் களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.

மூடநம்பிக்கை

இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக் காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப் பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்து விட்டது. பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானா கவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொ ருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகு மல்லவா? இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் விதம்: மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல் பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

என்ன காரணம்: தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற வையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக் கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக பொய் வலிப்பு  வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு: குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்: ஒருவருக்கு வலிப்பு வந்து விட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்:

# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள் சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்ற வற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய் யுங்கள்.

# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள். உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

# ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?

# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.

# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.

# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.

முள்ளங்கி மூலநோயை
குணப்படுத்தும்

முள்ளங்கியை சாம்பாரில் பயன்படுத்துவதோடு பொரியல் செய்தும் உண்ணலாம். முற்றாத கிழங்குகள் உண்ணத்தகுந்தவை. முற்றியவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதுடன், சுவையும் குறைவாகவே இருக்கும்.சிறுநீர் கழிக்கையில் உண்டாகும் எரிச்சலைத் தீர்க்கும். சிறுநீர் பாதையில் ஏற்படும் கல் இவற்றிற்கு முள்ளங்கிச்சாற்றை தினமும் ஒரு வேளையாக பதினைந்து நாட்கள் குடித்து வர உபாதை நீங்கும்.ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச்சாற்றை சமஅளவு தேனும், கல்உப்பு சிறிதளவும் கலந்து குடித்தால் வறட்டு இருமல், மார்ப்புச்சளி, கரகரப்பு குணமாகும்.

முள்ளங்கி இலைகளை மஞ்சள்காமாலைக்கும் பயன் படுத்தலாம். இலைகளை நசுக்கி சாறெடுத்து  வடிகட்டி ருசிக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். தினமும் இவற்றை அரைக்கிலோ அளவு கொடுத்து வர வேண்டும். இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.சிவப்புநிற முள் ளங்கியை விட வெள்ளைநிற முள்ளங்கி மருத்துவ குணத்தில் சிறந்தது.முள்ளங்கிக்கிழங்கு மூலநோய், விக்கல், வயிற்றுப் புண், காலரா நோய்களுக்கான சிகிச்சைக்கும் உதவும். முள்ளங்கிச்சாற்றுடன் கேரட் சாறும் சேர்த்துப் பருகினால் அது உடம்பில் உள்ள சளிப்படலத்தை சுத்தம் செய்யும்.

வெயிலை சமாளிக்க...

அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட செயற்கை குளிர் பானங்கள், குளிரூட்டப்பட்ட குடிநீர் ஆகியவற்றை குடிப் பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக கோடையில் கிடைக்கக்கூடிய காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு களில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். தண்ணீர்... கண்டிப்பாக குடிக்க வேண்டும்.  உடல் உறுப்புகள்  சீராக இயங்க தண்ணீரின் தேவை அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner


Banner