எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கண்நீர் அழுத்தம் முன்னெச்சரிக்கைகள்

கண்நீர் அழுத்த உயர்வால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்பது ஈடுசெய்ய முடியாத நிரந்தரப் பாதிப்பு. இதைத் தடுப்பதற்கு எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்?

> அடிக்கடி தலைவலி, குண்டு பல்பைச் சுற்றி வண்ண வண்ண வட்டங்கள், பக்கப் பார்வையில் பிரச்சினை போன்றவை இருந்தால், உடனே கண் மருத்துவரிடம் கண்நீர் அழுத்த உயர்வைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

> பொதுவாக 40 வயதை நெருங்கும்போதுதான் கண்நீர் அழுத்த உயர்வு பெரும்பாலும் ஏற்படும் என்பதால், அந்த வயதில் அனைவரும் கண்களைக் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

> ரத்த உறவில் யாருக்காவது கண்நீர் அழுத்த உயர்வு ஏற்கெனவே இருந்தால், அத்தகையவர்கள் 40 வயதுக்கு முன்னரே கண்நீர் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

> கண்நீர் அழுத்தம் உயர மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, மன அழுத்தத்தை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.

> கண்நீர் அழுத்த உயர்வைப் பொறுத்தவரையில் தொடர் சிகிச்சையுடன் கண்காணிப்பும் அவசியம்

உங்களுக்கு தெரியுமா?

இதய அறுவை சிகிச்சை செய்த பிறகு, குழாய் வடிவத்திலான கரோனரி ஸ்டென்ட் பொருத்துவது வழக்கம். இந்த ஸ்டென்டின் விலை 23 ஆயிரத் தில் தொடங்கி, 2 லட்சத்துக்கு மேலும் விற் பனை செய்யப்பட்டு வருகிறது.  தற்போது அதன் விலையை அதிரடியாகக் குறைத்து நிர்ணயித்துள்ளது. இந்த புதிய விலையின்படி, உலோக ஸ்டென்ட் விலையின் உச்ச வரம்பு 7 ஆயிரத்து 260 ஆகவும், மருந்துடன் கூடிய ஸ்டென்ட் விலை 29 ஆயிரத்து 600 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை பிப்ரவரி 14 முதலே அமலுக்கு வர உள்ளது.

நீரிழிவை சொல்லும் வாய்!

ஈறுகளில் ரத்தக்கசிவா? அது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்!அதீத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்(குறிப்பாக இரவில்), பசி, சோர்வு, காரண மின்றி எடை குறைதல்... பொதுவாக இவையே நீரிழிவுக் கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றை யெல்லாம் பலர் கண்டுகொள்ளாமல் விடுவதாலோ என்ன வோ, இன்னும் ஒர் அறிகுறியையும் நீரிழிவு சுட்டிக் காட்டு வதாக மருத்துவர்கள் இப்போது அறிவித்துள்ளனர். அது தான் ஈறுகளில் ரத்தக்கசிவு.இனி பற் சிகிச்சைக்குச் செல் லும்போதே, பல் மருத்துவரே நீரிழிவுக்கான அறிகுறி இருப் பதை சில நொடிகளில் உறுதிப்படுத்திவிட முடியும்! தீவிர மான ஈறு பிரச்சினையின் போது ரத்தக்கசிவு ஏற்படும்.

இந்தப் பிரச்னையோடு இருப்பவர்களில் அய்ந்தில் ஒருவருக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நீரிழிவு தாக்கும் அபாயம் அருகிலேயே இருக்கக்கூடும். இது ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அண்மை ஆராய்ச்சி முடிவு.

இதனால், பல் மருத்துவரே ரத்த சர்க்கரை அளவை சில நொடிகளில் அறிந்துவிட முடியும். அதற்கேற்ப பல்லைக் காக்கும் முயற்சிகளிலும் தேவையான சிகிச்சை முறை மாற்றங்களைச் செய்துவிட முடியும். அதோடு, உடனடியாக நீரிழிவு சிகிச்சை மருத்துவரின் ஆலோ சனையைப் பெறும்படியும் அவர் அறிவுறுத்துவார்.

நீரிழிவாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்களுக்கு நீரிழிவுப் பிரச்னை உள்ளது என்பதையே அறியாமல் உள்ளனர். காரணம் நீரிழிவின் ஆரம்ப அல்லது நீடிக்கும் அறிகுறிகளை அறியாமலே இருப்பதுதான். சிலர் கண்டுகொள்ளாமலும் இருப்பதுண்டு. ஆனால், ஈறுகளில் ரத்தக்கசிவு என்பது எளிதில் அறியக்கூடிய / உணரக்கூடிய ஒரு பிரச்னை.

இதற்கான தீர்வை நோக்கிச் செல்லும்போது, நீரிழிவும் அறியப்பட்டுவிடும். ஆரம்பகட்டத்திலேயே இது கண்டு பிடிக்கப்படும்போது சிகிச்சை செலவுகள் குறைவதோடு, பெரும் குழப்பங்களையும் தவிர்க்க முடியும். இதனால்தான், விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகக் கருதுகின்றனர்.10 முதல் 15 சதவிகித மக்களுக்கு ஈறு நோய்கள் இருந்தாலும், அவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு நீரிழிவு தாக்கும் சந்தர்ப்பம் அதிகம். மற்றவர்களைக் காட்டிலும் நீரிழிவாளர்களுக்கு ஈறு நோய் பிரச்னை ஏற்படுவது 2 முதல் 3 மடங்கு வரை அதிகம். ஈறு நோயால் பாதிக்கப்படுகிற மற்றவர்களுக்கும் இது நீரிழிவுக்கான தற்செயல் எச்சரிக்கையாகவும் அமையும். `வரும் முன் கவனி என அவர்கள் திட்டமிட்டு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு! ஏற்கனவே நீரிழிவு பிரச்சினை அறியப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் ஈறுகளில் ரத்தக்கசிவு. அப்படியானால்..? நீரிழிவு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதுதான் ஈறு நமக்கு உணர்த்துகிற உண்மை.ஆகவே, ஒரு துளி ரத்தக்கசிவாக இருந்தாலும், அது எதனால் என்பதை மருத்துவ ஆலோசனையில் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்... அவசரம்!

இவையும் அறிகுறிகளே...

* ஆண் உறுப்பு(பெனிஸ்) / பெண் உறுப்புப் பகுதி(வெஜினா)யில் எரிச்சல் இருப்பது கூட நீரிழிவின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.
* சரும மாறுபாடுகள், தொற்று, ஒவ்வாமை அடிக்கடி ஏற்பட்டாலும், அதற்கு நீரிழிவு காரணமாக இருக்கலாம்.
* விழி லென்ஸ் உலர்ந்து பார்வை மங்குவது கூட நீரீழி வின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவேதான் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை அறிவுறுத்தப்படுகிறது.
* இதய நோய், நீரிழிவு பிரச்னையோடு உள்ளவர்களை பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் எளிதில் தாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வகையில், மாதுளை, கொத்துமல்லி, ரோஜா போன்றவற்றை கொண்டு தயாரிக்கும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.

கோடைகாலத்தில் உடல் உஷ்ணமாவதால் சிறுநீர் தாரையில் எரிச்சல், கண்களில்  எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள்  போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண் டது. கொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல் நோய்களை குணப்படுத்தவல்லது. மாதுளையை பயன் படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பங்கு மாதுளை சாறு, ஒன்னரை பங்கு கற்கண்டு பொடி சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சவும். இதை எடுத்து வைத்துக் கொண்டு ஓரிரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். வயிற்று எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். வாந்தி, குமட்டலை சரிசெய்யும்.

கொத்து மல்லியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனத்தூள், பனங்கற்கண்டு. செய்முறை: கொத்துமல்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில் இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும். உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரோஜா பூவை பயன்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கத்தை சரிசெய்யும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ரோஜா பூ, நார்த்தங்காய், கற்கண்டு பொடி. செய்முறை: ரோஜாப்பூ பசையுடன் நார்த்தங்காய் சாறு, கற்கண்டுபொடி சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் சூடு தணியும். நீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உடலுக்கு வலிமை, உற்சாகம் தரும் பானமாக விளங்கும். தலைச் சுற்றல், மயக்கம் குணமாகும்.

ரோஜா பூ அற்புதமான மருத்துவ குணங்களை கொண் டது. பல்வேறு நன்மைகளை கொண்ட ரோஜாவில், விட்டமின் சி, இரும்புசத்து, மினரல் உள்ளது. இது, துவர்ப்பு சுவையுடையதால் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவை குணமாக்கும். புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் அதிக வெயில் காரணமாக உடல் உஷ்ணமாகும். இதனால் பித்தம் அதிகமாகி ஈரல் பாதிக்க வாய்ப்புண்டு.  தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner