எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோடை வெப்பத்தில் இருந்து
பாதுகாத்து கொள்வது எப்படி?

2016ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது நிலவும் கோடை கால வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் பொது மக்கள் தங்களை கோடை வெப்பத் திலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். அன் றாட தட்ப வெப்ப நிலை அறிய செய்திதாள், தொலைக்காட்சி செய்தி மற்றும் வானொலி செய்திகளை தவறாமல் கேட்க வேண்டும்.

தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கூலிங் கிளாஸ் மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து கொள்ள வேண்டும். உப்பு கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லெஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர் சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட் கொள்ள வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைசுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்படின் உடன் மருத்துவரை அணுக வேண்டும். வீட்டில் உள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும்.

மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல், அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பணிபுரியும் இடத்தின் அருகில் போதிய அளவு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நேரடியாக சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வேலை செய்யும் பொழுது, கூடுதல் ஓய்வு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயில் குறைவாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகளை செய்ய திட்டமிடல் வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் கர்ப்பமாக உள்ள தொழிலாளர்கள் மருத்துவ நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ அல்லது செல்லப் பிராணிகளையோ விட்டு செல்ல கூடாது. வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடர்த்தியான நிற உடைகள் மற்றம் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மது அருந்துவது, தேநீர், போன்ற பானங்களை  அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும்.

புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஆண்களுக்கு வரும் புற்றுநோய்

நாற்பது வயது ஆகிவிட்டாலே நாம் அனைவரும் வருஷத்துக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்து கொள்வது நல்லது. அதிலும் ஆண்கள் பி.எஸ்.ஏ. டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது மிக அவசியம். ஏற்கனவே புராஸ்டேட் வீக்கம் உள்ளவர்களும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்கிறவர்களும் ஆண்டுதோறும் இந்த டெஸ்ட்டை செய்துகொள்ள வேண்டும்.காரணம், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் வருவது போல், ஆண்களுக்கு புராஸ் டேட் புற்றுநோய் வருவது இப்போது அதிகரித்து வருகிறது. இதை ஆரம்பத்திலேயே தெரிவிப்பது பி.எஸ்.ஏ. டெஸ்ட்.

வெயிலுக்குச் செல்லாமலும், இடுப்புக்கு எந்தப் பயிற்சியும் தராமலும் இருக்கிற ஆண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண் டும். காரணம், வைட்டமின் டி குறைவாக உள்ளவர் களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் அதிகம் வருவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. தகாத பாலுறவு வைத்துக் கொள்கிறவர்களுக்கும் இது ஏற்படுவதுண்டு. கண்ட கண்ட வலி மாத்திரைகளை சுயமாக வாங்கிச் சாப்பிடுபவரிடம் இது வருகிறது. வழக் கமாக நம் உடலில் சுரக்கும் என்சைம்கள் நல்லதே செய்யும். ஆனால், 3 என்று ஓர் என்சைம் இருக் கிறது. இது நமக்கு எதிரி. இதன் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால், எறும்புகள் மரத்தைச் சுற்றி மண் புற்றை வளர்ப்பதைப் போல், இது புராஸ்டேட் செல்களைத் தூண்டி புற்றுநோயை வளர்க்கிறது.

இதன் அறிகுறிகளைப் பார்ப்போமா?

ஆரம்பத்தில் சாதாரண புராஸ்டேட் வீக் கத்துக்குரிய பல அறிகுறிகள் தென்படும். அதனால் பயந்துவிட வேண்டாம். இப்போது சொல்லப் போகிற அடையாளங்களைக் கவனி யுங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு இருந்தால், உடல் சூடு, நீர்ப்பிணைப்பு என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, ஊரிலும் உறவிலும் சொல்லும் மருந்தைச் சாப்பிட்டு நேரம் கடத்தாதீர்கள். உடனடியாக டாக்டரைப் பாருங்கள்.

சிறுநீர் செல்லும்போது வேகம் குறையலாம்.

சிறுநீர் செல்வதற்குச் சிரமப்படலாம்.

சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கத் தோன்றலாம்.

திடீரென்று மொத்தமே சிறுநீர் கழிக்க முடி யாமலும் போகலாம்.

சிறுநீர் கழிக்கும்போது கடுமையான எரிச்சல் ஏற்படும். வலி தாங்க முடியாது.

சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இது ஒரு முக்கியமான அறிகுறி.

விரைகளில் வலி உண்டாகலாம். அலட்சியப் படுத்தக்கூடாது.

இதற்கு என்ன பரிசோதனை?

நாம் ஏற்கனவே பார்த்த விரல் பரிசோதனை யிலேயே புராஸ்டேட் சாதாரணமாக இருக்கிறதா, வீங்கி இருக்கிறதா என்பதை டாக்டர் சொல்லி விடுவார். ஆனாலும், அந்த வீக்கம் புற்று நோயைச் சார்ந்ததா என்று சரியாக கணிக்க முடி யாது. ஆகவே, சில ரத்த டெஸ்ட்டுகள் செய்யச் சொல்வார்.

பிஎஸ்ஏ டெஸ்ட், ஆசிட் / ஆல்கலைன் பாஸ்படேஸ் டெஸ்ட். இவற்றில் பிரதானமாக மருத்துவர்களுக்குக் கை கொடுப்பது பிஎஸ்ஏ டெஸ்ட்தான். பிஎஸ்ஏ என்பது புராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்  என்பதன் சுருக்கம். இது புராஸ்டேட் செல்கள் சுரக்கிற ஒருவித புரோட்டீன். இதன் அளவு 4 நானோகிராமுக்குக் கீழ் இருந்தால், புராஸ்டேட் வீக்கம் சாதாரண மானது; இதற்கு மேல் தாண்டிவிட்டால், புற்று நோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்.

ஏன், இதிலும் இந்தப் புற்றுநோயை உறுதி செய்ய முடியாதா? முடியாது. இதுவும் சில சமயங்களில் நம்மை ஏமாற்றிவிடும். இப்போது அடுத்த பரிசோதனைக்கு வருவோம். வயிற்றைப் பரிசோதிக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். இதில் புராஸ்டேட் எந்த அளவுக்கு வீங்கியுள்ளது என்பது தெரியும். அந்த வீக்கம் எந்த அளவுக்குச் சிறுநீர்ப்பையை அடைத்துள்ளது என்பதையும், ஒருமுறை சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப்பையில் எவ்வளவு சிறுநீர் தங்குகிறது என்பதையும் காணலாம்.

இதை வைத்து நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம். இதிலும் நோயின் பாதிப்பு தீர்மானமாகத் தெரியவில்லை என்றால் எம்.ஆர். ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி எனப்படும் ஸ்பெஷல் டெஸ்ட் தேவைப்படும். அத்தோடு சிடி / எம்ஆர்அய் ஸ்கேன் மூலம் புராஸ்டேட்டின் நிலைமை, ஒரு வேளை அதில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அது வயிற்றிலும் உடலிலும் பரவியிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புற்றுநோய்க்கு எந்த சிகிச்சையை மேற் கொள்வதாக இருந்தாலும் அதற்கு முன் னால், ட்ரூகட் பயாப்சி செய்ய வேண்டும். மலக் குடல் வழியாக புராஸ்டேட்டை அணுகி, அதிலிருந்து சிறு திசுவை எடுத்துப் பரிசோதிக்கிற முறை இது. இதில் புற்று நோயின் வகை தெரியும். அதைக் கண்டுபிடித்து, எந்த சிகிச்சை எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதை நோயாளிக்கு முன்பே தெரிவித்து விடலாம்.

புராஸ்டேட்டை அகற்றும் சர்ஜரி, கீமோ தெரபி, விரைகளை அகற்றும் சர்ஜரி, ஹார் மோன் சிகிச்சை, ரேடியேஷன் எனப் பல தரப்பட்ட சிகிச்சைகள் இதற்கு உண்டு. என்றாலும் எவருக்கு எந்த சிகிச்சை நல்ல பலன் தரும் என்பதை புற்றுநோய் நிபுணர்தான் முடிவு செய்ய வேண்டும்.

புராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் பயிற்சிகள்!

சிறுநீர் கழிக்கும்போது இடுப்புக்குழி தசை களைச் சுருக்கி சிறுநீர்க் கழிப்பை நிறுத்துங்கள்.
20 நொடிகளுக்கு இப்படி நிறுத்துங்கள்.

இப்போது மறுபடியும் சிறுநீர் கழிக்கவும்.

இது ஒரு சுருக்கம் எனப்படுகிறது.

இப்படி 15 முறை செய்யவும்.

இது ஒரு சுற்று எனப்படுகிறது.

தினமும் 3லிருந்து 5 சுற்றுகள் செய்யுங்கள்.

50 வயதுக்கு மேல்...

முழுத் தானிய உணவுகளையும் சிறு தானிய உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் ஒரு பழம் கட்டாயம் சாப்பிடுங்கள்.

காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள் ளுங்கள்.

கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத் துங்கள்.

முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகை களை அளவோடு சாப்பிடுங்கள்.

பருப்பு மற்றும் முளைகட்டிய பயறுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

மீன் உணவு மிகவும் நல்லது.

முட்டையில் வெள்ளைக் கருவைச் சாப் பிடலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

ஆலிவ் எண்ணெயை சமையலுக்குப் பயன் படுத்தினால் நல்லது. ஆனால், விலை அதிகம்.

பசுந் தேநீர் (கிரீன் டீ) குடிப்பது நல்லது.

தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய் யுங்கள்.

தினமும் அரை மணி நேரம் வெயிலில் நில்லுங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner