எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதயத்துடிப்பை சீர் செய்ய மின்னணு பேஸ் மேக்கர், டிஜிட்டல் பேஸ்மேக்கர் போன்றவை ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. உடலுக்குள் தொடர்ந்து 8 ஆண்டுகள் வரையிலும் இயங்கும் இந்த பேஸ்மேக்கர்கள், பேட்டரி தீர்ந்துவிட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும். இனி அந்த பேட்டரி மாற்றம் அவசியம் இல்லாத அளவுக்கு வந்திருக்கிறது. கனடா நாட்டின் மெக் எவன் பல்கலைக்கழக மருத்துவ மய்ய விஞ்ஞானிகள் தற்போது உயிரியல் செயல்பாட்டு பேஸ்மேக்கர் செல்களை கண்டுபிடித்துள்ளனர்.

மனித மரபணு செல்களிலிருந்து பிரித்தெ டுக்கப்பட்டு 21 நாட்களில் உருவாக்கப்படும் பேஸ்மேக்கர் செல்களை நோயாளியின் உட லில் நேரடியாக செலுத்தி, மின்தூண்டுதல் மூலம்  இதயத்துடிப்பை சீராக்க முடியும் என் பதைக் கண்டறிந் திருக்கின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி இதய அறுவைசிகிச்சை நிபுணர் கூறியதாவது:

மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு இது. நிச்சயம் இது எலக்ட்ரானிக் பேஸ்மேக்கருக்கு மாற் றாக இருக்கும். ஏனெனில், ஒருவருக்கு எலக்ட்ரானிக் பேஸ்மேக்கரினால் நோய்த்தொற்றுகள் ஏற்படவும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகவும் இப்போது வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், சிறுகுழந்தைகளுக்கு இதய அளவு மாற்றங்களை ஏற்க முடியாமல் போகிற சிக்கல்களும் நடைமுறையில் இருக்கிறது.

கருவில் உள்ள இதயச்சுருக்கம் ஏற்பட் டுள்ள குழந்தைகளுக்கு எலக்ட்ரானிக் பேஸ் மேக்கரை பொருத்த முடியாத சிக்கலும் இருக் கிறது. பயாலஜிக்கல் பேஸ்மேக்கரில் இந்த குறை பாடுகளெல்லாம் இருக்காது என்பது வரவேற்கத் தக்க சிறப்பம்சம் என்றே சொல்ல

வேண்டும் என்பவர், இதேபோல் வேறு இதய நவீன சிகிச் சைகளையும் நம்மிடம் விளக்குகிறார்.
தற்போது   என்று சொல்லப்படும் வயர் இல்லாத பேஸ் மேக்கர்களை உபயோகப்படுத்துகிறோம். இதற்கு ஊசி தேவையில்லை. துளையிட வேண்டிய அவசியமும் இல்லை. நேரடியாக நோயாளியின் இதயத்துக்குள் பொருத்திவிடலாம். மின்னணு பேஸ்மேக்கரைப்போலவே இதயத் துடிப்பின் வேகத்தை கட்டுப்படுத்தும். தன்னிச் சையாகவே செயல்படக் கூடியது இது.