மருத்துவம்

அத்திப்பழம் மலச்சிக்கலை குணமாக்கும்

அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளன. அத்திப்பழம் உணவை விரைவில் செரிமானம் செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும்.

¥  தினசரி குறைந்தது 2 பழங்களை சாப் பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

¥  மலச்சிக்கலை தவிர்க்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப் பிடலாம்.

¥  நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடலாம்.

¥ போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை புளி காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.

¥ தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் நன்றாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறி யுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப் பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பொடியாக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீதும் பூசலாம்.

 


 

தண்ணீரை சேமித்து வைக்க

சாதாரண பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவது நல்லதா?

ஒரு மனிதனுக்கு தினசரி 3.8 லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் 45.6 லிட்டர் நீர் அல்லது அதற்கு மேற்பட்ட நீரை நீங்கள் ஒரு நாளைக்காக சேமித்து வைக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு நாம் தினசரி சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண் டியது அவசியம்.

நீங்கள் நிறைய தண்ணீரை சேமித்து வைக்க விரும்பினால், காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். இதனால் தண்ணீரின் தன்மை மாறாது. காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

தினசரி தேவைகளுக்காக தண்ணீரை புட் கிரேடு பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது.

ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பிளாஸ்டிக் பிபீஎ ப்ரீ பாட்டிலாக உள்ளதா என் பதையும், தண்ணீரை சேமித்து வைப்பதற்காக தனித் துவமாக உருவாக்கப்பட்டதா என்பதை யும் உறுதி செய்து கொள்வது அவசியம்.

நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க பயன்படுத் தும் தொட்டிகள் மற்றும் டிரம்களை நேரடியாக சூரிய வெளிச்சம் படும்படி வைக்க வேண்டாம்.

தண்ணீரை சேமித்து வைக்கும் பாட்டில் களை நன் றாக சுத்தம் செய்வது அவசியம். பாட்டிலின் உள் பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.

தண்ணீரை குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் முடி வைப்பது அவசியம். நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், பிறரை பயன்படுத்த விடாதீர்கள்.

திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகுவதை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக இறைச்சியை நீர்த்த குழம்பாகச் சமைப்பதற்குப் பதிலாகக் கெட்டியான (கிரேவி) பதத்தில் உண்பதையே பலரும் விரும்புகின்றனர். உணவின் எந்த வகையும் அடர் வடிவத்தில் உள்ளே செல்கிறபோது, அதைச் செரிக்க நமது இரைப்பைக்கு நிறைய நீர் தேவைப்படும். செரிப்பதற்கான நீரை உடலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும். தாகத்தை உருவாக்கி வெளியில் இருந்தும் நீரை குடிக்கச் செய்யும்.

இது செரிமான மண்டலத்துக்கு ஒரு கூடுதல் வேலை என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்தக் கூடுதல் வேலையைச் செரிமான மண்டலம் தொடர்ந்து செய்கிறபோது தொய்வுற்று இரைப்பைப் புண், குடல் புண், உணவுக்குழாய் எரிச்சல் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகிறது.
எனவே, செரிக்கக் கடினமான இறைச்சி போன்ற உணவு வகைகளை உண்கிறபோது, கூடிய மட்டிலும் நீர்த்த வடிவத்தில் உண்பதுதான் உடலுக்கு நன்மை தரும். உண்ட உணவை உடனடியாகச் செரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கவும் இலகுவாகும்.  பருப்பு வகைகளைத் தோலுடன் சமைப்பதே அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ற முறை என்று முன்னரே பார்த்துள்ளோம். அதுபோல் கோழியையும் தோலுடன் சமைப்பதே சிறந்தது. தோலுக்கும், சதைக்கும் இடையே கொழுப்புப் படலம் இருக்கும். அதைத் தவிர்ப்பதால் மிகைக் கொழுப்பு சேராமல் தவிர்க்கலாம் என்று கருதுவோரும் உண்டு. 

இறைச்சி போன்ற கடினத் தன்மை வாய்ந்த உணவைச் சமைப்பது என்றாலே சேர்மானங்கள் கலந்து, அவற்றை குக்கரில் போட்டு சமைக்கிறார்கள்.  மிகை அழுத்தத்தில் வேகிற உணவுப் பொருள், தனது சத்துக்களை இழந்துவிடும் என்பதை நினைவில் நிறுத்தி, கோழி இறைச்சி சமைக்க மண் பாத்திரத்தையே தெரிவுசெய்வோம்.

மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது. எனவே, உணவுப் பொருளின் உள்ளுக்குள் புழுங்கி வெந்து இணக்கமாக இருக்கிறது. எந்த இறைச்சி ஆனாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும்.

எலுமிச்சம் பழச்சாறு அருந்த மலச்சிக்கல் நீங்கும். அதிகதாகம், நாவறட்சி போன்றவை நீங்கும்.

எலுமிச்சை சாற்றினைச் சுடுநீரில் கலந்து குடிக்க அஜீரணம், வயிற்றுப் பொருமல், உணவு உண்ட பின் ஏற்படும் வயிறு ஊதல் அகலும்.

ஒரு கரண்டி எலுமிச்சம் பழச் சாற்றுடன் சம அளவு வெங்காய்ச் சாறு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

எலுமிச்சம் பழச் சாற்றில் உப்பு சேர்த்துச் சாப்பிட உடம் வெம்மை தீரும். வாந்தி நிற்கும்.

எலுமிச்சைச் சாற்றை மூக்கில் தேய்த்து உறிஞ்ச மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.


நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது தற்போது கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது. கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் ரிமோட், மடிக்கணினி போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளால், அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய முடிவதாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகப் பணியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத் தாலும், தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வது அவசியமாகி விட்டது. இவர்கள் இடையிடையே எழுந்திருப்பதும், நடப்பதும் குறைந்துவிட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்புவரை இம்மாதிரியான பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உடல் அசைவுகள் இப்போது இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இவ்வாறு பல மணி நேரத்துக்குத் தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு, தினமும் பத்து சிகரெட் புகைத் தால் உடலுக்கு  எந்தளவு கேடு உண்டாகுமோ அந்த அளவுக்கு ஆபத்தானது என்பது உறுதியாகியுள்ளது.

உடற்பருமன், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய், குறை வான ஆயுள் போன்றவை நம் வாழ்க்கைமுறை மாற்றங்களால் நாமே வரவழைத்துக்கொண்ட கேடுகளாகும். கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி எனப் பலதரப்பட்ட உடல்வலி களுக்கும் நம் வாழ்க்கைமுறை மாற்றங்களே காரணம். இந்த வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது முக்கிய இடத்தைப் பெற்றுவருகிறது.

நகர்ப்புறப் பணியாளர்களில் ஒருவர் சராசரியாகப் பத்து மணி நேரம் தொடர்ந்து அமர்ந்துகொண்டே வேலை செய்பவராகத் தான் இருக்கிறார் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வறிக்கை. செய்யும் பணி தவிர, பலர் காரில் பயணம் செய்பவர்களாக இருக்கின்றனர். இன்னும் பலர் தொலைக் காட்சிப் பெட்டிக்கு முன்பு அமர்ந்துகொள்கின்றனர். உடலுழைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் பலரும் நேரம் ஒதுக் குவதே இல்லை என்பதால் இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப் பட்டு, பல வழிகளில் ஆரோக்கியம் கெடுகிறது என எச்சசரித்துள்ளது அந்த ஆய்வறிக்கை.

அதேநேரத்தில், நாம் அமர்ந்து பணி செய்கிற நேரத்தில் உடல் அசைவுகளையும் கவனித்து, அமரும் முறைகளை முறைப்படுத்தினால், அந்தப் பாதிப்புகளைப் பெருமளவு தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையையும் அந்த ஆய் வறிக்கை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்து எலும்புகள், முதுகுத்தண்டு ஜவ்வு, முதுகுத் தசைகள், தண்டுவட நரம்புகள் ஆகியவை எல்லாமே ஒன்றோடொன்று இணைந்து இயங்குவதால்தான் கை, கால், கழுத்து, முதுகு ஆகியவற்றின் இயக்கங்கள் சரியாக இருக்கின்றன. நாம் உட்காரும் நிலை தவறாக இருந்தாலோ உடல் அசைவுகள் குறைந்தாலோ இவற்றின் இயக்கங்களும் குறைந்து, வலிகளை ஏற்படுத்திவிடும். கழுத்துவலி, முதுகு வலி, இடுப்புவலி, முழங்கால் வலி, மூட்டுவலி, தலைவலி, கண் வலி, கண்ணெரிச்சல் என பலதரப்பட்ட வலிகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகி வருகிறது.

பல ஆண்டுகள் இம்மாதிரி அமர்ந்தே வேலை செய்யும்போது, உடல் திசுக்கள் சோர்வடைந்துவிடுகின்றன. வளர்ச்சிதை மாற்றப் பணிகள் தாமதமாகின்றன. கொழுப்பு கரைவதற்கு வழி இல்லாமல், உடற்பருமன் வந்துவிடுகிறது. இது இன்சுலின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இன்சுலின் எதிர்ப்புணர்வு  ஏற்படுகிறது. இதனால், இவர்களுக்கு விரைவி லேயே நீரிழிவு ஏற்படுகிறது. இந்த  கொழுப்பு இதயத்தமனி களில் சேருமானால், மாரடைப்பு வரக் காத்திருக்கிறது. இதுவே மூளைத் தமனியில் ஏற்பட்டால், பக்கவாதம் வரும்.
அமர்ந்தே வேலை செய்யும்போது அசைவுகள் குறைவ தால், உடலில் ரத்தச்சுழற்சியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. ரத்தம் ஓடும் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது. இவ்வாறு மெதுவாக ஓடும் ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, ரத்த ஓட் டத்தை இன்னும் அதிகமாகப் பாதிக்கிறது. ஆகவே, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் மற்றவர்களைவிட இவர்களுக்கு விரைவாக வந்துவிடுகிறது. இதனால் இவர்களின் ஆயுள் குறைகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்குக் குடல் புற்றுநோயும் புராஸ்டேட் புற்றுநோயும், மார்பகப் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித் திருப்பது தெரியவந்துள்ளது. பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு எலும்பு வலுவிழப்பு நோய் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, அமர்ந்து வேலை பார்ப்பது நம் பணியானாலும், அதில் சிற் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டியது அவசியமாகும்.பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் மட்டுமே புத்துணர் வாக இருப்பதில்லை. நல மான பற்கள், நலமான இதயத்துக்கும் உதவுகின் றன என்கிறார்கள் மருத்து வர்கள்.

பல்லீறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள நுண் கிருமிகள் ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் ரத்த உறைவை ஏற்படுத்தும். இது பல்வேறு இதய நோய்களுக்குக் காரணமாக அமையும்.

பல்லீறு நோய்களால் ஏற்படும் வீக்கமும் இதயத்தில் ரத்த உறைவு உருவாகக் காரணமாக இருக்கின்றன. இந்த ரத்த உறைவு, இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. அதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்கிறார் டில்லியில் உள்ள பி.எல்.கே. பல்நோக்கு மருத்துவமனையின் இதய நலத் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ் சந்திரா.
இதய வால்வுகளில் ஏற்படும் தொற்றுகள் பொதுவாக பாக்டீரியா கிருமிகளால் ஏற்பட்டாலும், மிக அரிதாக பூஞ்சை களாலும் உருவாவதற்கான சாத்தியமும் உண்டு. பல் துலக்காமல் போனால், வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை இதய வால்வுகளுக்குச் சென்று, தொற்றுகளை ஏற்படுத்தும்.

புகையிலைப் பயன்பாடு, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, நீரிழிவு போன்ற காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுவது போலவே ஈறு நோய்களாலும் இதயம் பாதிக்கப்படலாம். ரத்தக் குழாய் சார்ந்த இதய நோய்களுக்கு, முறையாகப் பல் துலக் காமையே காரணம்.
முறையாகப் பற்களை சுத்தம் செய்யாமல் இருப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று பல்லீறுகளின் வீக்கத் தில் உள்ள கிருமிகளால் பல் தாடை எலும்புகள் பாதிக்கப்படு கின்றன. இன்னொன்று, ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவை விழுங்குவதால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது என்கிறார் குருகிராமில் உள்ள பாரஸ் மருத்துவமனையின் இதய அறிவியல் துறைத் தலைவர் மருத்துவர் தபன் கோஷ்.

எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்

எலுமிச்சம் பழச்சாறு அருந்த மலச்சிக்கல் நீங்கும். அதிகதாகம், நாவறட்சி போன்றவை நீங்கும்.

எலுமிச்சை சாற்றினைச் சுடுநீரில் கலந்து குடிக்க அஜீரணம், வயிற்றுப் பொருமல், உணவு உண்ட பின் ஏற்படும் வயிறு ஊதல் அகலும்.

ஒரு கரண்டி எலுமிச்சம் பழச் சாற்றுடன் சம அளவு வெங்காய்ச் சாறு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

எலுமிச்சம் பழச் சாற்றில் உப்பு சேர்த்துச் சாப்பிட உடம் வெம்மை தீரும். வாந்தி நிற்கும்.

எலுமிச்சைச் சாற்றை மூக்கில் தேய்த்து உறிஞ்ச மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.


Banner
Banner