மருத்துவம்

மனித உடலில் வயிற்றுக்கு பின் பக்கம் இருக்கும் கணையம் எனும் பகுதியிலிருந்து முறையாக இன்சுலின் சுரக்காமல் தடைபடும்போது குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.  நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளது. இதில் டைப் 1 என்பது கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுவது. டைப் 2 என்பது கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதில் இந்தியாவில் அதிகமானோர் டைப் 2 வகை நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.   தற்போது டைப் 2 வகை நீரிழிவு நோய் சம்பந்தமாக வட அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வில், தேவையான வைட்டமின் டி எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது. வைட்டமின் டி எலும்பு நலனுக்கு உகந்தது, சூரிய ஒளியில் கிடைப்பது என்று நமக்குத் தெரியும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட    ஆராய்ச்சியில், நீரிழிவிலிருந்து தற்காத்துக் கொள் ளவும் வைட்டமின் டி உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.

தூக்கத்தின்போதுதான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம். சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.

அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல். பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு  9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை. குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண் டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும். பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண் மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டிய தில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்கு படுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீ னாகச் செய்யப் பழக்குங்கள்.  குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்ச மின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள் ளுங்கள்.தூங்குவதில் பிரச்சினை செய்கிற குழந்தை களுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள்.  படுக்கையில் இருந்த படி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம். மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறை களின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப் பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

பரோட்டா, சோலாப்பூரி, நாண், தந்தூரி ரொட்டி, பட்டூரா, பாதுஷா, கேக், பிரெட், பீட்ஸா, பர்கர், பப்ஸ், சமோசாக்கள், பாவ், சிலவகை கலர் கலர் அப்பளங்கள், சந்திரகலா, சூர்யகலா, சோனே ஹல்வா (கார்ன் ஃப்ளவர்) மேலும் பல இனிப்பு வகைகள் அனைத்துமே மைதாவில் தான் தயாராகின்றன. இன்றைய தேதிக்கு வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் மைதா அதிகம் சாப்பிடு கிறார்கள் என்றொரு வதந்தி உலவுகிறது. காரணம் பரோட்டா. சரி அந்த பரோட்டா தயாரிக்கத் தேவையான மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மைதா,  கோதுமையில் இருந்து தயாராகிறது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் அது ஜவ்வரிசி, சேமியா போல மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகிறது என்றும் நம்புகிறார்கள். நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது என்று நம்பலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் நற்குணங்கள் ஏதும் இதற்கில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கலந்து இருக்கும்.

ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்ப தில்லை. மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்... பென்ஸாயில் ஃபெராக்சைட்

அலாக்சன்

மோனோ சோடியம் குளூட்டமேட்

மேற்காணும் ரசாயனங்கள் மைதாவின் தரத்தை கூட்டும் வகையில் கலக்கப்படுவதால்  சாப்பிடுவோருக்கு கேடு விளைவிப்பவை யாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே மிக மோசமான உடல் நலக் கேடுக்கு 100 சதவிகித உத்தரவாத முண்டு.

மைதாவுக்கு வெளிநாடுகளில் வேறு பெயருண்டு. ஆல் பர்பஸ் ஃப்ளவர் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியக்கூடும். அது சாட்ஷாத் நம்மூர் மைதாவே தான். மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்டால் என்ன ஆகும்?

மைதா உணவுப் பொருட்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக ஒபிசிட்டி,  ஹை பிளட் ப்ரஸ்ஸர், மனக் கொந் தளிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பு அதிகம்.

மைதா உயிருக்கு கேடா?! நிஜம் எது? கட்டுக்கதை எது?

இல்லை.. ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில் மைதா கண்டு பிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் உழைக்கும் வர்க்கத்தினரின் அதாவது நேரம் காலம் கரு தாது உழைத்தே தீர வேண்டிய  நிர்ப்பந்தம் விதிக்கப்பட்டவர்களுக்கும் கொத்தடிமை களுக்கும் பசிப்பிணி தீர்க்கும் உணவுப் பொருட்களை உருவாக்க பேருதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது பீட்ஸா. முதன்முதலில் இத்தாலியில் பீட்சா உரு வான கதையை அறிய முற்பட்டீர்கள் என்றால் மைதா அலைஸ் ஆல் பர்பஸ் ஃப்ளாரின் அருமை புரிய வரும். பரோட்டா பசி தாங்கும். ஆனால், அதையே நாற்காலியைக் குத்தகை எடுத்த மூளை உழைப்பாளிகள்  ருசிக்காக தொடர்ந்து  சாப் பிட்டு வந்தோமென்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் அமைந்து விடும். அத னால் ஜாக்கிரதை!

அறுசுவை தளத்தில் மைதா உணவு குறித்த கேள் விக்கு ஒருவர் பதில் சொல்லி இருந்தார்...

எந்த உணவில் தான் இன்றைக்கு ரசாயனக் கலப்பு இல்லாமல் இருக்கிறது. வேண்டுமானால் பரோட்டா சாப்பிடும் அல்லது மைதா வில் செய்த வேறு எந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மைதா உணவு வகைகளைக் ருசிக்காகவும், ஆசைக்காகவும் கொஞ்சமாகவும்  காய்கறி குருமா அல்லது சாலட் வகைகளை அதிக மாகவும் சாப்பிட்டு வைத்தோமென்றால் மைதா உணவுகளால் ரத்தத்தில் ஜிவ்வென்று ஏறக்கூடிய சர்க்க ரையின் அளவை கொஞ்சமே கொஞ்சம் சமப்படுத்த முடியும் என்று; ஆனால், அதெல்லாம் சும்மா வெற்றுச் சமாதானம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மைதா பரோட்டா மற்றும் மைதாவில் தயாரிக்கப்படும் அத்தனை உணவுகளையும் தவிர்த்து விடுதலே நலம்.

உணவக மெனுவிலிருந்து குழந்தை களுக்கு ஊட்டச் சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுப்பது மிகவும் கடினம். உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை:

பிரட் & ரோல்ஸ் : ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த ரொட்டித் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.

ஃபிளேக்ஸ் :காலை உணவாகப் பெரும்பாலான குழந்தைகள் உட்கொள்ளும் ஃபிளேக்ஸ் வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்காக ஃபிளேக்ஸ் உணவை வாங்கும்போது அவற்றில் 3 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகப் புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது. கூடுமானவரை துரித, சக்கை உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அய்ஸ்கிரீமும் கேக்கும்: அய்ஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இந்த வகையான அய்ஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக, வெறும் அய்ஸ்கிரீமை மட்டும் வாங்கிக்கொடுக்கலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்: குழந்தைகள் சர்வ சாதாரணமாக ஒருநாளில் ஒன்று, இரண்டு என்று சாப்பிட்டுக் காலிசெய்யும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பொதுவாகவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

பீட்சா: ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சாவில், இருக்கிறது. எந்த மேல் படுகையும்(toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.

பொரித்த நொறுக்குத்தீனிகள்

எண்ணெய்யில் நன்றாகப் பொரித்த கோழிக்கறி எப்படித் தவிர்க்கப்பட வேண்டியதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக  விரும்பிச் சாப்பிடும் பிரெஞ்சு ஃபிரைஸ், சிக்கன் நக்கெட்ஸ், மொசெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ் ஸ்மைலிஸ்  போன்ற வையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.

அதிகமாக பல் துலக்குவது நல்லதா?

பற்களைப் பராமரிக்க ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை பிரஷ் & பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது பற்களுக்குக் கேட்டையே விளைவிக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், பற் பசையில் உள்ள உடலின் இயல்புத் தன்மைக்கு மீறிய ரசாயனக் கூட்டு, பல்லின் ஒளிர்வைச் சிதைத்துவிடும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் உடலுக்கு ஆபத்தான கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை அப்புறம் பார்க்கலாம். நம்முடைய உமிழ்நீரில் இருக்கும் காரத்தன்மை ஒவ்வொரு நொடியும் பற்களைச் சுத்தப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உண்ணும் உண வின் வழியாகப் பல்லில் மாக் கூறுகள் படிந்து ஒருவேளை அது உமிழ் நீரால் கரைக்கப்பட வில்லை என்றாலும் உண்ட ஓரிரு மணி நேரம் கழித்து வெறும் நீரில் வாய் கொப்புளித்தாலே அவை வெளியேறிவிடும்.

இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம். நாளொன்றுக்கு 3 வேளை அதிகமாக உண்பதைவிட, சிறிது சிறிதாகப் பலமுறை உண்பது நல்லது. இரவு உணவைத் தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்குமுன் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும். இரவில் சர்க்கரை, தயிர், தேங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிமுன் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்ப்பது நன்று. பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட்ஃபுட் உணவு வகைகள் இதயத்துக்கு ஆகாது. நாளொன்றுக்குக் குறைந்தது 5 முறை பழங்களையும் காய்கறி களையும் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பப்பாளிப் பழத்தைக் காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முடிந்தால் தினமும் வால்நட் பருப்பைச் சாப்பிடலாம். எண்ணெய்யில் பொரித்த மீனையும் இறைச்சி யையும் தவிர்ப்பது நல்லது.

உப்பு அதிகம் தவறு

உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை உரு வாக்கும். உணவைச் சமைத்த பின், அதாவது சாப்பிடும்போது உப்பைச் சேர்க்கக் கூடாது. ஏற்கெனவே உப்பு அதிகம் சேர்த்துத் தயார் நிலையில் உள்ள நூடுல்ஸ், சிப்ஸ், முட்டை, சாஸ், கெட்ச்அப் போன்றவை உடலுக்குக் கேட்டையே விளைவிக்கும். உப்புக்குப் பதிலாக வெங்காயம், பூண்டு, மிளகு, எலு மிச்சைச் சாறு போன்றவற்றை ருசிக்குப் பயன்படுத்தலாம்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த...

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊறுகாய், அப்பளங் களைத் தவிர்ப்பது எளிய வழி. இளநீர், வாழைப்பழம், ஆரஞ்சு, எலு மிச்சைச்  சாறு போன்றவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. உடலுக்குத் தேவையான (90ml/dl) பொட்டாசியத்தை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது.

நல்ல கொழுப்பை அதிகமாக்க...

குழம்பு மீன், வால்நட், கிரீன் டீ, காலை உணவில் பப்பாளி, கீரை வகைகள் போன்ற வற்றை வாரத்துக்கு 2 முறையும் பாதாம் பருப்பை வாரத்துக்கு 2-3 முறையும் உட் கொள்வது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மது அருந்துவதைத் தவிர்ப்பது உடல் நலனுக்கும் குடும்ப நலனுக்கும் நன்று. சால்மன் போன்ற ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளைச் சாப் பிட்டால், உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும், ரத்த அழுத்தம் குறையும், ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது தடைபடும், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நீங்கும்.

ரத்த குழாய்களில் அடைப்பு

கொழுப்பால் உண்டாகும் அடைப்புக்கு அத்திரோமா (Atheroma) என்று பெயர். இந்த அத்திரோமா இதயத்துக்கு நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டு மல்லாமல்; மூளை, சிறுநீரகங்களுக்குச் செல் லும் ரத்தக் குழாய்களிலும் அடைப்பை ஏற் படுத்துகிறது. நெய், வெண்ணெய், முட்டை, மாமிசம், மூளை, ஈரல் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நன்று. போதிய உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதே உடலில் கொழுப்பு சேர்வதற்கு முக்கியக் காரணம்.

டிரான்ஸ்பேட் எனும் எதிரி

உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், டிரான்ஸ்ஃபேட்-அய் (Transfat)
அதிகம் பயன்படுத்துகின்றன. பிஸ்கெட், பொரித்த உணவு, ரஸ்க், ரொட்டி, பன், கேக், மின் அடுப்பில் பொரிக்கப்பட்ட பாப்கார்ன், பீட்சா, பர்க்கர், பிரெஞ்சு பிரை, சாக்லேட், ஐஸ்கிரீம்கள் ஆகியவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ளது. டிரான்ஸ்பேட் உணவால் உடல் பருமன் அதிகமாவதுடன், நல்ல கொழுப்பின் (HDL) அளவு குறைந்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், ரத்தத்தில் triglyceride என்னும் கெட்ட கொழுப்பின் அளவும் அதிகமாகிறது. எனவே, டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ள உணவை அறவே தவிர்ப்பது இதய நலனுக்கு நன்று.

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்யில் சரிக்குச் சமமாக நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும் உள்ளன. நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது. சூரியகாந்தி எண்ணெய் குறைந்த அடர்த்திகொண்டது. அதில் PUFA வகைக் கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்தக் கொழுப்பு உடலுக்கு நல்லது. பாமாயிலில், அடர் கொழுப்பு உள்ளதால் அறவே தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் (30 கிராம்) அளவு எண்ணெய் போதுமானது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு 3 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வறுவலுக்கு ஏற்ற எண்ணெய்

எண்ணெய்யை அதிகப்படியாகச் சூடு படுத்தும்போது, ரசாயன மாற்றம் ஏற்பட்டு அதனால் புற்றுநோய் ஏற்படச் சாத்தியம் உள்ளது. அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும், நுரையும் புகையும்  ஏற்படுத்தாத நல்லெண் ணெய்யே வறுவலுக்கு ஏற்ற எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய்யையும் வறுவலுக்குப் பயன்படுத்தலாம்.

எண்ணெய்யைப் பாதுகாக்க...

எண்ணெய் பாக்கெட்டில் TFA-வின் அளவு குறிப்பிட வேண்டும் எனச் சட்ட மாக்கப்பட்டுள்ளதால், TFA இல்லாத எண் ணெய்களை வாங்க வேண்டாம். பிளாஸ்டிக், டின்களில் வாங்கப்படும் எண்ணெய்யை உடனடியாக இரும்பு, அலுமினியம் அல்லது கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண் டும். சமையல் எண்ணெய்யைக் குளிர் நிறைந்த, வெளிச்சம், ஈரமில்லாத பாத்திரத்தில் இறுக மூடி (காற்றுப்புகாதவாறு) பாதுகாக்க வேண்டும்.

ஆயுளை நீட்டிப்போம்

இங்கு உள்ள எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், இதயத்தின் நலன் மேம்படும். இதயத்தின் நலனே மனிதனின் நலனுக்கு அடிப்படையானது. இதய நலனை நன்கு பேணினால், உடலின் நலன் மட்டுமல்ல; நமது ஆயுளும் நீடிக்கும்.

Banner
Banner