ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே கொழுப்பு சத்துள்ள உணவு பொருள்களை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர். இருந்தும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கட்டுப்படுத்த ஸ்டேடின்ஸ் என்ற ஊசி மருந்தை சிலர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்தை இங்கிலாந்தில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது சரிவர செயல்பட வில்லை. மேலும் சில பக்க விளைவுகளை எற்படுத்துவதாக கருதி அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து தற்போது புதிய ஊசி மருந்தை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு மேஜிக் புல்லட் ஜேப் என பெயரிட்டுள்ளனர். இந்த ஊசி மருந்து ரத்தத்தில் கெடுதல் விளைவிக்கும் கொழுப்புச் சத்தை குறைத்து நலமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த மருந்தை மனிதர்களிடம் பயன்படுத்துவது குறித்து முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதற்கான ஆய்வு 18 வயது முதல் 45 வயது வரையிலான 54 ஆண்கள் மற்றும் 2 பெண்களிடம் நடத்தப்பட்டது. அதில் நல்ல பலன் கிடைத் துள்ளது. இந்த சிகிச்சை ஏ.எம்.ஜி145 என பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு தேநீர், பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்....!

மது, புகைப் பழக்கம் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவற்றை நிறுத்திவிட்டு கருப்பு தேநீர், பழங்கள் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மது, புகைப் பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக நுரையீரல் ஆராய்ச்சி பிரிவு மருத்துவர்கள் ஸ்டான்டன் சியு, கைசர் பெர்மானென்டி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
1978ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. 1.26 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது. இவர்களில் பலர் தொடர் மதுப் பழக்கம் உள்ளவர்கள்.
ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி கைசர் கூறியதாவது: மதுப் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்காணித்து நடத்தப்பட்ட ஆய்வு இது.
தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் உள்ள 1,852 பேருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. நோய் பாதிப்பு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் நோய் தீவிரம் ஆகாமல் எளிதாக விடுபட்டனர்.
புகை, மது பழக்கம் இரண்டுமே நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. இரண்டு பழக்கமும் ஒருசேர இருந்தால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
இதய பாதிப்புகளும் தலைதூக்கும். புகை, மதுப் பழக்கத்தை கைவிட்டு, கருப்பு தேநீர், பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.