மருத்துவம்

காய்ச்சல் என்ற ஒற்றை வார்த்தை ஊரெல்லாம் ஒரே பேச்சாக பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்ற விதவிதமான பெயர்களும், உயிரிழப்புகள் தொடர்பாக பரவக்கூடிய தகவல்களும் பதற வைப்பதாக இருக்கிறது. ஆனால், காய்ச்சல் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. சில எளிய முறைகளைப் பின்பற்றினால் போதும் என்கிற பொதுநல மருத்துவர் சுகுநாதன், அதற்கான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

காய்ச்சல் என்பது எல்லோருக்கும் வரக் கூடியது. அது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கிறது. காய்ச்சல் வருவது ஒருவகையில் நல்லதும் கூட. ஏனெனில் உங்கள் கவனம் உங்கள் மீது தேவை என்கிற அலாரம் ஒலியை போல எச்சரிக்கையை தருகிறது காய்ச்சல். காய்ச்சலுடைய தாக்கம் அதிகமாகும் போதுதான் அது கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. உடனடியாகப் பரிசோதித்து சிகிச்சை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

சாதாரணமாக ஒருவருக்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கும் மேல் அதிகம் இருந்தாலோ அல்லது உடலின் வெப்பநிலை 98 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தாலோ உடனே கவனிக்கப்பட வேண்டும். உடலில் பொதுவாக பல்வேறு காய்ச்சல்கள் மனிதர் களை தாக்குகிறது. காய்ச்சல் ஒரு வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கிறது.

வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், நிஃபா வைரஸ் காய்ச்சல், டைபாய்டு, பறவைக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்கள் இருக்கிறது. குறிப்பாக, மழைக் காலங்களைப் பொறுத்தளவு கொசுக்களால் பரவக்கூடிய காய்ச்சல்கள் அல்லது சுகாதார மற்ற நீர், உணவால் ஏற்படக் கூடிய காய்ச் சல்கள் என இரண்டு வகைகளாக இருக்கிறது.

அதில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய காய்ச்சலாக டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், சிகா வைரஸ் நோய் போன்ற காய்ச்சல்கள் அதிகம் ஏற்படும். குறிப்பாக, மலேரியா   எனும் வகையைச் சேர்ந்த கொசு வால் பரப்பப்படுகிறது, சிக்குன் குனியா காய்ச் சலானது   வகை கொசுக்களால் பரப்பப்படும். மூளைக்காய்ச்சல்   எனும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது, டெங்குக் காய்ச்சல் ஏடிஸ் எகிப்தி எனும் வகை கொசுவால் பரப்பப் படுகிறது. யானைக்கால் நோய்   எனும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது. இவையெல்லாம் கொசுவால் பரவக்கூடிய காய்ச்சல்கள் ஆகும்.

இத்துடன் மழைக்காலங்களில் சுகாதார மற்ற நீர் மற்றும் உணவுகளால் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்றவையும் அதிகம் மக்களைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களை இத்தகைய காய்ச் சல்கள் எளிதில் தாக்குகிறது.மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் ஒரு நோய் இன்னொருவருக்கு எளிதில் பரவக் கூடிய அபாயமும் கொண்டதாக இருக்கிறது. அதனால் மழைக்காலங்களில் காய்ச்சல் வராத வண்ணம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் சுய உணவு ஒழுக்கம், சுற்றுப்புறத் தூய்மை இரண்டையும் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

மழைக்கால காய்ச்சல்களும் அறிகுறிகளும்

வைரஸ் காய்ச்சல்

சுகாதாரக் குறைவான காற்று, தண்ணீர், கொசுக்களின் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு எளிதில் பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் வரை நீடிக்கும், தீராத உடல் வலி, தோலில் அரிப்புகள் கடுமையான தலைவலி போன்றவை அறிகுறிகளாக இருக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி தக்க சிகிச்சை மேற்கொள்ளும்போது மூன்று நாட்களுக்குள் குணப்படுத்திவிடலாம்.

டைபாய்டு காய்ச்சல்

மழைக்காலங்களில் ஏற்படும். சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் நம் உடலுக்குள்   பாக்டீரியா கிருமிகள் தாக்குகிறது. இதன் மூலம் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் சிறுகுடலை பாதிக்கச் செய்கிறது. நாக்கில் வெண்படலம் தோன்றும். பசியின்மை. வாந்தி, வயிற்று வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

மலேரியா: மலேரியா என்பது ஒட்டுண் ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து ஒரு வருக்குக் கடத்தப்படுகிறது.

இந்த நோய் மழைக்காலங்களில் கொசுக் களால் தொற்றக் கூடிய ஒரு காய்ச்சல் இந்த காய்ச்சல் வந்தால் குளிர் நடுக்கம், ஏற்படும். பெரும்பாலும், மலேரியா நோய் தொற்றியவுடன் காய்ச்சல் ஏற்படுவதில்லை அதிகபட்சம் 30 நாட்கள் வரை ஆகிறது.

டெங்கு காய்ச்சல்

இது மழைக்காலங்களில் தேங்கியிருக்கிற தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் எகிப்தி என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டுவலி, வயிற்றுவலி, கண்ணுக்குப் பின்புறம் ஏற்படும்.

வலி, வாந்தி, உடல்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். டெங்குவில் 4 வகை உட்பிரிவுகள் வைரஸ்கள் உள்ளது. இந்த நான்கு வகையிலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வரலாம். ஒரு வகை டெங்கு காய்ச்சல் குணப்படுத்தியும், கொசுவால் மற்ற வகை டெங்கு காய்ச்சலும் வருவதற்கு வாய்ப் பிருக்கிறது. அதனால், டெங்கு எந்த வகை வைரஸால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை மருத்துவர்களுக்கு அதிகம் இருக்கிறது.

மூளைக்காய்ச்சல்

மூளைச்சவ்வுக் காய்ச்சல் கொசுவால் பரப்பப்படுகிறது, இதனால் மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகள் வீக்கமடைகிறது. கொசுக்கள் மூலம் பாக்டீ ரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். கழுத்து வலி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கம் ஆகியவை மூளைக் காய்ச்சலால் தோன்றுகிறது. இதனால் மூளை பாதிக்கப்பட்டால் வலிப்பு நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

 

(An ISO 9001:2008 Certified Institution)

பெரியார்  நூற்றாண்டு கல்வி வளாகம்

திருச்சிராப்பள்ளி - 620 021

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சுகாதாரமான சமுதாயத்திற்கு

இளைஞர்களின் பங்கு (Youth for Cleanliness)

முகாம் நிறைவு நாள் விழா

ள் : 10.12.2018  திங்கட்கிழமை  நேரம் : மாலை 5.00 மணி   இடம்: பிச்சாண்டார் கோவில்

வரவேற்புரை:

முனைவர் இரா. செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)

முகாம் அறிக்கை வாசித்தல்:

ச. ஆரோக்கியசாமி (நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்)

தலைமை:

ஞான. செபஸ்தியான் (தாளாளர், பெரியார் மருந்தியல் கல்லூரி)

முன்னிலை:

முனைவர் அ. மு. இஸ்மாயில்

(பேராசிரியர்,  பெரியார் மருந்தியல் கல்லூரி)

முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி

(துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)

நிறைவுநாள் விழா சிறப்புரை:

முனைவர் த. ஜானகி, M.A.,M.Phil., Ph.D.,

இயக்குநர், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) வல்லம் -  613 403

வாழ்த்துரை:

தே. வால்டேர் (தி.க. இலால்குடி மாவட்ட தலைவர்) ப. ஆல்பர்ட் (திராவிடர் கழக திருச்சி மண்டல செயலாளர்)

மரு. புவனேஸ்வரி M.B.B.S.,  (திருச்சி)

ப. பாலகிருஷ்ணன் (உடற்கல்வி ஆசிரியர்)

குழந்தை தெரசா (மாவட்ட மகளிர் பாசறை தலைவி)

ச. பிச்சை மணி  (இலால்குடி ஒன்றிய செயலாளர்,  திராவிடர் கழகம்)

அங்கமுத்து (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)

இராமசாமி (டோல்கேட் பகுதி தலைவர், தி.க.)

சத்தியமூர்த்தி  (தாளக்குடி தலைவர், தி.க.)

மோ. பாப்புராஜ் (தோட்டக்கலை அலுவலர், முசிறி)

திருமதி  ஆர். கோதை (தலைமை ஆசிரியர்)

திருமதி ஆர்.தனலெட்சுமி (உதவி ஆசிரியர், ஊராட்சி  ஒன்றிய துவக்கப் பள்ளி, பிச்சாண்டார் கோவில்)

நன்றியுரை:

முனைவர் த.சிறீ.விஜய கிருபா

(நாட்டு நலப்பணித் திட்ட  அலுவலர், பெரியார் மருந்தியல் கல்லூரி)

குருதிக் கொடை மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, டிச. 6- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் (2.12.2018) 86ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் வெகு சிறப்புடன் நடைபெற்ற குருதிக் கொடை வழங்குதல் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் விழா மாட்சிகள் குறித்த விவரம்:-

சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சிறப்பு மருத்து வமுகாம் மற்றும் குருதிக் கொடை வழங்கும் முகாமை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் துவக்கி வைத்தார்.

இம்மருத்துவ முகாமில் கண் சிகிச்சைப் பிரிவில் பேராசிரியர் டாக்டர் எம்.இராதா கிருஷ்ணன் எம்.எஸ்.டி.ஓ. (மேனாள் இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர், அரசு கண் மருத்துவமனை எழும்பூர் சென்னை -8) கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

பொதுமருத்துவம் பிரிவில் டாக்டர் இ.பிரபு (தலைமை அணு ஆற்றல் சிறப்பு மருத்து வர் - அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை) மற்றும்  மயக்க இயல் மருத்துவர் டாக்டர் நளினி பிரபு அவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டனர் மேலும் Neprologist டாக்டர் சக்தி மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் அறவாழி கலந்து கொண்டார். இதய நோய் சிகிச்சைப் பிரிவில் டாக்டர் நவீன்ராஜா (கார் டியாலஜிஸ்ட்), டாக்டர் சி.சுந்தரேசன் எம்டிஆர்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பல் மருத் துவம் பகுதியில் பல்மருத்துவர் டாக்டர் ஆர்.மித்ரா கலந்து கொண்டார்.

காது மூக்கு தொண்டை பகுதியில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜோதீஸ்வரன் கலந்து கொண்டார்.

சிறுநீரக இயல் துறைக்கு சென்னை சைதாப்பேட்டையில் இயங்கும் ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனையில் இருந்து ராஜா, செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர். கண் சிகிச்சைப் பிரிவிற்கு சென்னை-, வாசன் அய்கேர் பிரிவில் இருந்து கண் பரிசோ தனை மருத்துவ உபகரணங்களை கொண்டு வந்திருந்தனர்.

குருதிக்கொடையை வழங்க 62 தோழர்கள் வந்தி ருந்தனர் அவர்களில் உடல் தேர்வு செய்யப்பட்டு குருதிக்கொடையை 40 தோழர்கள் மகிழ்ச்சியுடன் வழங்கினர். இராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து வந்திருந்த இரத்த வங் கியை சார்ந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் இப்பணியை சிறப்புடன் செய்திருந்தனர்.

திரளான பொதுமக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றோர் விபரம்: ஆண்கள் 152, பெண்கள் 81 என மொத்தம் 233 பேர் கலந்து கொண்டனர். வந்திருந்த மருத்துவ வல்லுனர்கள் அவரவர் துறை சார்ந்த மருத்துவ சேவையினை வழங்கி சிறப்பித்தனர். இம்முகாமிற்கு வந்திருந்த சிறப்பு மருத்துவர்களை பெரியார் மணியம்மை மருத்துவமனை மய்யத்தின் இயக்குனர்கள் டாக்டர் சி.மீனாம்பாள், டாக்டர் ஆர்.கவுதமன், டாக்டர் பிறைநுதல் செல்வி (மறைந்த திராவிடர் கழக பொருளாளர்) நிலைய மருத்துவர் டாக்டர் டி. தங்கம் ஆகியோர் வரவேற்றனர்.

இம்மருத்துவமனை விழா ஏற்பாடுகளை மேலாளர் ஜி.குணசேகரன், ஜி.தயாளன் மற்றும் செவிலியர்கள் நித்யா கல்பனா, சி.ஆக்னஸ், .உமா லூசி, நற்சோனை, லேப் டெக் னீசியன் ஜெயந்தி, கோகிலா, இயன் முறை மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றினர். பெண் உதவியாளர்கள் லலிதா, எம்.சி., சியா மளா ஆகியோரும் உடனிருந்தனர். முகாமில் நன்கு கவனித் ததாக சிகிச்சை பெற்றவர்கள் கூறிச்சென்றனர்.

திருச்சி, நவ. 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக நிமோனியா நாள் மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் 24.11..2018 அன்று காலை 11 மணியளவில்  கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் தலைமையேற்க பெரியார் நலவாழ்வு சங்க செயலாளர் பேராசிரியர் கே. ஏ.எஸ். முகமது சபீக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத் துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின்  உதவி பேராசிரியரும், நுரை யீரல் நோய் சிறப்பு மருத்துவரு மான E.M.PR.M.விஸ்வநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சுவாசப் பிரச்சினைகள் பெரும்பாலும் தூசு, புகை, நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளுதல் மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படுகின்றது என்றும்  நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்றும் உரையாற்றினார். மேலும் குளிர்காலங்களில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பெரும்பாலும் அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின் றனர். நிமோனியா காய்ச்சல் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால்  நுரையீ ரலில் ஏற்படும் தொற்று என் றும் அதனை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்ற எளிய வகை தொழில்நுட்ப வசதி களை பயன்படுத்தி எளிதாக கண்டறியமுடியும் என்றும் உரையாற்றினார். உடலில் ஏற் படும் நோய்த்தொற்றுகளுக்கு அதிக வீரியமிக்க ஆன்டிபயா டிக் மருந்துகள் எடுத்துக்கொள் வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நுரையீரல் பாதிப்பிற்காக மருத்துவர்களை அணுகும் போது முன்பு மேற் கொண்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவக் குறிப்புக்களை கட் டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். நிமோனியா நோயினை முற்றிய நிலையில் கண் டறிந்தாலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவ வசதிகள் தற் போது வளர்ந்துள்ளது என்றும் இந்நோய்க்கு தடுப்பூசி போட் டுக் கொள்வது சிறந்தது என் றும் உரையாற்றினார்.

தற்பொழுது அதிகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் குறித்த அறிகுறிகள், தேவை யான சிகிச்சை முறைகள் மற் றும் நோய் தாக்காமல்  தற்காத் துக்கொள்ள மேற்கொள்ள வேண் டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து    எடுத்துரைத்து மாண வர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார்.  இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரி யர் முனைவர் அ.மு. இஸ்மா யில், துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் நலவாழ்வு சங்க இணைச் செய லர் திருமதி அ. ஷமீம் அவர் கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

வயது ஆக ஆக, வலியும் அதனால் ஏற்படும் வேதனையும் சொல்லி மாளாது. அதுவும், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையில் விழுவது வரை, நாள் முழுக்க கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு நம்மைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிவிடும். இந்த வலி தரும் பயத்தாலேயே பலரும் வெளியில் செல்வதற்குத் தயங்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். முடக்கு வாதம் என்று இந்த நோய்க்குச் சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்!

ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் அல்லது முடக்கு வாதம் என்பது உடலிலுள்ள நீர்ம மூட்டுகளைப் பிரதானமாக தாக்கும் நாள்பட்ட மூட்டு நோயாகும். இந்த நோய், மூட்டுகளை மட்டுமல்லாது நுரையீரல், இதயம், கண் போன்ற உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக, 40 முதல் 50 வயது கொண்டவர்களை அதிகமாகத் தாக்கினாலும், எந்த வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாகவே இது கருதப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்கள் மூன்று மடங்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கு வாதம் கொண்ட வர்களுக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலை நேர மூட்டு இறுக்கம், மூட்டுச் சீர்குலைவு மற்றும் மூட்டுச் செயல்பாடின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு அன் றாட வேலைகளைச் செய்வதில் மிகுந்த சிரமமும் உடல் அயற்சியும் ஏற்படும்.

வலி குறைக்கும் பயிற்சிகள்

முடக்கு வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை மூலமாக ஓரளவு தீர்வு பெற முடியும். அதோடு சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் கொண்டவர்களில் பெரும்பாலா னோ ருக்குக் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் உள்ள மூட்டுகளில் முழுமை யான மூட்டு அசைவு கள் இல்லாமல் இறுக்கமாக இருக்கும். மேலும், எதையும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் திறன் இருக்காது. இதனால், அவர்களால் பையைத் தூக்குவது, சாவி கொண்டு கதவைத் திறப்பது, பாட்டில் மூடியைத் திறப்பது, டம்ளரைப் பிடிப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதுகூடக் கடினமாக இருக்கும். ஆதலால், கை, மணிக்கட்டு மூட்டுகளில் இத்தகைய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் கண்டிப்பாகக் கைகளுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதற்காக சாரா எனும் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை, உயர்தர மருத்துவ ஆய்வு ஒன்றில், முடக்கு வாதம் கொண்ட மக்களிடையே சோதிக்கப்பட்டு, திறன் மிக்கவை எனக் கண்டறியப்பட்டவை. மேலும், இந்தப் பயிற்சிகள் கை, மணிக்கட்டு மூட்டுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முடக்கு வாதம் பாதிக்கப்பட்ட கைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சாரா பயிற்சிகள் பரிந்துரைப்பதை முடக்கு வாத மருத்துவர்கள் மற்றும் தெரப் பிஸ்ட்டுகள் ஆதரித்து வருகின்றனர்.

மூட்டு அசைவுகளை எளிதாக்கும் 7 பயிற்சிகள் மற்றும்  விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டுகளில் உள்ள தசைகளை உறுதிப்படுத்தும் 4 பயிற்சிகள் என சாரா இரண்டு வகையான பயிற்சிகளைக் கொண்டது.   இவற்றைச் செய்வதால் மூட்டு வலியும் இறுக்கமும் குறைந்து அன்றாடச் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.

Banner
Banner