மருத்துவம்

வழக்கமான உணவுப் பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடுதல் வேண்டும். மையாக அரைத்த மாவால் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை (இட்லி, தோசை, சப்பாத்தி உட்பட) முற்றாகத் தவிர்த்து விட்டு, நார்ச்சத்து மிகுந்த கொர கொரப்பான மாவில் தயாரிக்கப்பட்ட சிவப்பரிசி அல்லது ராகி மாவால் தயாரிக்கப்பட்ட புட்டு, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். சிறுதானியம், நொய்யரிசி, உடைத்த கோதுமை ஆகியவற்றைக்கொண்டு சமைக்கப்பட்ட உப்புமா, பொங்கல், கஞ்சி போன்றவை மிகவும் சிறந்தவை.

தற்காலிகமாக இறைச்சி உணவையும் கிழங்குகளையும் தவிர்த்துவிட்டு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைப் பெருமளவு எடுத்துக் கொள்ளலாம். மிகவும் குறிப்பாக பப்பாளி, மாதுளை போன்ற நீர்த் தன்மை மிகுந்த பழங்களை மட்டுமே இரவு உணவாக எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது இளநீர் எடுத்துக்கொண்டு மீண்டும் பசி வந்த பின்னர் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. புளிக்காத மோர் அல்லது நொதிக்க வைத்த வடித்த கஞ்சியின் நீர் இரண்டும் பெருங்குடலுக்குத் தேவையான நன்மை செய்யும் கிருமிகளை உருவாக்கக் கூடியவை.

குடல்வாலில் கழிவு தேக்கமடைந்து வலி தோன்றுகிற போது சளிப் பிடித்து மோர், பழம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் உண்ணப் பிடிக்கவில்லை என்றால் இறைச்சி, காய்கறி, கீரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் சூப்பை ஒவ்வொரு நேரமும் முழு உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். வலி முற்றாக நீங்கிய பின்னர் கஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுக்குத் திரும்பி, ஒருவாரத்துக்குப் பின்னர் வழக்கமான உணவை எடுத்துக்கொள்ளலாம். அப்போதும் மாவால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பதே நல்லது.

உங்களுக்குச் சாப்பிட்ட சில நேரத் திலேயே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? எதுக்களிப்புத் தொந்தரவு இருக்கிறதா? இந்தத் தொந்தரவுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். அலட்சியம் தொடர்ந்தால் ஜெர்ட்  என்ற நோய் உங்களுக்கு வந்துவிட லாம். அதென்ன ஜெர்ட் நோய்? உணவுக் குழாயில் வரக்கூடிய பொதுவான பிரச்சினைதான் இது. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்குத் திரும்பி வரு வதைத்தான்  ரிஃப்ளக்ஸ் என்று அழைக் கிறார்கள். ஜெர்ட் எனப்படும் இந்த நோயைப் பேச்சு வழக்கில் எதுக்களிப்பு நோய், நெஞ்செரிவு நோய் என்று அழைப்பதுண்டு. மனித உடலில் இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் சுருக்குத் தசை இருக்கிறது. இதை ஸ்ஃபின்க்டர்  என்று அழைப்பார்கள். இந்தச் சுருக்குத் தசை எப்போதும் மூடியே இருக்கும். இது ஒரு வழிப் பாதையைப் போன்றது.

நாம் உண்ணும் சாப்பாடு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குச் செல்லும். சாப் பாட்டை இரைப்பைக்குச் செல்ல மட்டும் சுருக்குத்தசை அனுமதிக்கும். இரைப்பைக்குள் உணவு சென்றுவிட்டால், திரும்பவும் வெளியே வரவிடாது. இரைப்பையில் உள்ள அமிலம் எக்காரணம் கொண்டும் உணவுக் குழாயைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இயற்கையே செய்த அற்புதமான அம்சம் இது.

ஆனால், மனிதர்களின் தவறான பழக்க வழக்கங்களால் இந்தச் சுருக்குத் தசை பலவீனமடையவும் செய்யலாம். அப்படிப் பலவீனமடைந்தால், எப்போதும் மூடி யிருக்கும் சுருக்குத்தசை திறந்தே இருக்கும். ஒரு வழிப்பாதை என்பது இரு வழிப் பாதை ஆகிவிடும். விளைவு, இரைப்பைக்குச் சென்ற சாப்பிட்ட உணவு, இரைப்பையில் இருந்து உணவுக் குழாய்க்குத் திரும்பி வரத் தொடங்கும். இதற்குப் பெயர்தான்  ரிஃப்ளக்ஸ். இரைப்பையில் இருக்கும் அமிலம், உணவுக் குழாய்க்கு வந்தால், ஹார்ட் பர்ன் எனப்படும் நெஞ்சு எரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வயிறுமுட்ட சாப்பிட வேண்டாம்!

இந்தப் பிரச்சினை குறித்து குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன் விளக்கினார். இது ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உடலமைப்பு. இன்னொன்று பழக்கவழக்க நடைமுறை . மனிதர்கள் உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இந்த நோய் ஏற்பட முக்கியக் காரணம்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கும் இந்த நோய் வர வாழ்க்கை முறைதான் காரணம். கொழுப்பு உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது, காபி, சாக்லெட், மசாலா, வறுத்த உணவு வகைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால் இந்த நோய் வரலாம். இவை தவிர புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் ஒரு காரணம்.

வயிறு முட்டச் சாப்பிட்டாலும் ரிஃப்ளக்ஸ் வர வாய்ப்பு உண்டு. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டு உடனே படுத்துவிட்டாலும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, நடக்கும்போதோ நிற்கும்போதோ இரைப்பை கீழே இருக்கும். உணவுக் குழாய் மேலே இருக்கும். ஆனால், படுக்கும்போது உணவுக் குழாயும் இரைப்பையும் சம நிலைக்கு வந்துவிடும். அந்த நேரத்தில் வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தால், திறந்துவிட்ட குழாயைப் போல சாப்பிட்ட உணவு மேலே வர ஆரம் பித்துவிடும் என்கிறார்.

மாற்றமே சிறந்த சிகிச்சை

உங்களுக்கு ரிஃப்ளக்ஸ் தொந்தரவு இருந்தால், வாழ்க்கை நடைமுறையை முற் றிலும் மாற்றிக்கொள்வதுதான் நல்லது. வெறும் மருந்து மட்டுமே இந்த நோயைக் குணப் படுத்திவிடாது என்று எச்சரிக்கிறார் சந்திர மோகன். எந்த வகையில் வாழ்க்கை முறை மாற்றம் செய்ய வேண்டும்?

இந்தப் பாதிப்பை அறிந்துகொள்ள எண்டோஸ்கோப்பி பரிசோதனை போது மானது. உணவுக் குழாயை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை எண்டோஸ் கோப்பியே சொல்லிவிடும். ரிஃப்ளக்ஸை 50 சதவீதம்தான் மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியும். எஞ்சிய 50 சதவீதம் வாழ்க்கை முறை மாற்றமே சிகிச்சை. மருந்தை நம்பி மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் பாதி அறிகுறிகளைச் சரி செய்துவிடலாம். இதுதான் இதில் முக்கியம் என்கிறார் அவர்.

தடுப்பது எப்படி?

இரைப்பையில் அமிலத்தைக் குறைப்பது, ஒரு வழிப் பாதையை ஒழுங்குபடுத்துவது, அமிலத்தைச் சமநிலைப்படுத்துவது, முகோசா படலத்தைப் பாதுகாப்பதற்கு போன்றவற்றுக்கு மருந்துகள் உள்ளன. மருந்தை மட்டும் உட்கொண்டுவிட்டு வாழ்க்கை முறையை மாற்றாமல் இருந்தால், பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டும் கதைதான் நடக்கும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, காரம் அதிகம் இல்லாமலும் மசாலா கலக்காமலும் சாப்பிட வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது.

மது, புகைப் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.  அசிடிட்டியை உண்டாக்கக்கூடிய சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடாமல் இருப்பது எல்லாமே வாழ்க்கை முறை மாற்றம்தான் என்கிறார் சந்திரமோகன்.

பொதுவாக, எல்லோருக்கும் இரவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சாப்பிட்ட சற்று நேரத்தில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது அல்லது உறங்கச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கமும் இந்த நோய் வருவதற்கான வாசலைத் திறந்துவிடும். உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உண்ணுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவு உணவில் மசாலா கூடவே கூடாது. இரவு உணவைக் குறை வாகவே சாப்பிட வேண்டும். குறைவாக என்றால், இன்னொரு இட்லியைச் சாப்பிட் டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போது நிறுத்திவிடுவது நல்லது என்கிறார் சந்திரமோகன்.

பெருங்குடலை நாம் சுத்தமாக வைத்திருக்கத் தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அதை அசுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்யாமல் இருக்கும்படியான உணவுப் பழக்கம் நம்மிடம் இருப் பதே போதுமானது. ஏனென்றால், பெருங்குடலில் சேரும் கழிவை உடனடியாக நீக்கிச் சுத்தப்படுத்து வதற்கென்றே உடலுக்கு நன்மை செய்யும் கிருமிகள் பெருமளவில் அங்கே தங்கியுள்ளன.

உடலில் உள்ள நன்மை செய்யும் கிருமிகளில் பாதிக்கும் மேலானவை பெருங்குடலில்தான் உள்ளன. அதுவும் நமது பிறப்போடு, தாயின் கருக்குழாய் வழியாக நமக்கு அளிக்கப்படுகிறது.

தவறான உணவுப் பழக்கத்தால் பெருங்குடல் தனது ஆற்றலை இழந்து மலச் சிக்கல் ஏற்பட்டு அல்லது செரிமானப் பிரச்சினை ஏற்பட்டு அப் பெண்டிக்ஸ் வலி தோன்றும்போது, அறுவை சிகிச்சை செய்து அப்பெண்டிக்ஸை நீக்குவது ஒன்றுதான் வழி.

அப்பெண்டிக்ஸ் வலி குறைய

அப்பெண்டிக்ஸ் வலி ஒரே நாளில் திடுமென உயர்ந்து உயிர் வாதையாக மாறுவதில்லை. சாப் பிட்டு முடித்தவுடன் அடி வயிற்றின் வலப்புறத்தில் சிறிதாகத் தோன்றித் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கும். அதை நாம் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறபோது அல்லது வலி நிவாரணி கொடுத்துத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறபோதுதான் அது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போய், ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலையை அடையும்.

இப்போது நாம் செய்யத் தகுந்தது இதுவொன்றே. அடிவயிற்றில் வலி ஏற்பட்டதும் வலி தானாகக் குறையும்வரை இதமான வெந்நீர் தவிர வேறெதும் உண்ணக் கூடாது. வலி முழுமையாகக் குறையாத வரை பசி தோன்றாது. எனவே, ஓரிரு நாட்கள் ஆனாலும் பாதகமில்லை. உண்பதை முற்றாகவே தவிர்த்துவிடலாம்.

மிகவும் அவசியமான நேரத்தில் இளநீர் அல்லது விருப்பமான பழச்சாறு அல்லது புளிக்காத மோர் போன்றவற்றை அருந்தி வந்தால் வழக்கத்துக்கு மாறான கெட்ட நாற்றத்துடன் மலம் வெளியேறும். அதற்கு ஓரிரு நாட்கள்கூட ஆகலாம். அதற்குப் பொறுத்திருப்பதைத் தவிர தேர்ந்த, சிறப்பான சிகிச்சை வேறொன்றும் இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுயமரியாதை நாள் விழாவை முன்னிட்டு இலவச சிறப்பு முகாம் - மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் துவாக்குடி லயன்ஸ் சங்கம் - மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை இணைந்து நடத்தும்

நாள்: 30.12.2018, ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம்: பெரியார் மருத்துவமனை (சாந்தி திரையரங்கம் அருகில்), திருவெறும்பூர், திருச்சி -13

டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல நன்மைகளைச் செய்யும் திறனும் கொண்டது நிலவேம்பு என்று புகழ்கிறார்கள் மாற்று மருத்துவர்கள்.

* கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் என ஏதாவது இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். அது பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். (வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்துக்கு உகந்தது.) காய்ச்சிய பிறகு, 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் 15 மிலியும், பெரியவர்கள் 30 மிலியும் சாப்பிடலாம்.

* எந்த விஷக்காய்ச்சலாக இருந்தாலும் நில வேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரசையும் முழுமை யாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டு வலியும் காணாமல் போய்விடும்.

* நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. காய்ச்சலுக்காக ஏற்கெனவெ ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், நிலவேம்பு குடிநீரும் எடுத்துக் கொள்வது உங் களுடைய ஆரோக்கியத்தை விரைவில் உறுதி செய்து நோயிலிருந்து விடுதலை தரும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும்.

* வாத மிகுதியால் ஏற்பட்ட காய்ச்சல், தலை நீரேற்றம், உடல்வலி ஆகியன போகும். பல்வேறு வகையான காய்ச்சலோடு அது தொடர்பான தொல்லைகளையும் காத தூரம் ஓட்டிவிடும்.

* குழந்தைகளின் வயிறு தொடர்பான கோளாறுகள், மண்ணீரல் வீக்கம், சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்றுநோய்கள் ஆகிய பிரச்சினை களுக்கும் தீர்வு தருகிறது நிலவேம்பு.

* நிலவேம்பு மனித சமூகத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் எச்.அய்.வி. என்ற மூன் றெழுத்தால் குறிப்பிடப் பெறும் மிக மோசமான உடலையும் உள்ளத்தையும் கெடுத்து உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பால்வினை நோய்க்கு பலமான எதிரியாகச் செயல்பட்டு எதிர்த்து நின்று போராடி குணம் தரவல்லது.

* டெங்கு காய்ச்சல் மனித உடலில் உள்ள தட்டணுக்களை குறைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கிறது. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை காத்து உடலிலுள்ள நீர்சத்து குறைபாட்டை சரிசெய்து உடலை காக்கிறது.

* பொதுவாக நாம் பயன்படுத்தும் நிலவேம்பு குடிநீர்   என்ற நீர்ம வடிவத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலின் செயல்பாடுகள் மாறாமல் நோயிலிருந்து காத்து உடலை நல்ல நிலையில் வைப்பது இதன் சிறப்பம்சம்.

* நிலவேம்பினால் மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பதெல்லாம் எந்தவித ஆதார மும் இல்லாத வதந்திதான். நிலவேம்புக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கிளப்பும் வீண்வம்பு அது. அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த பிறகே நிலவேம் பினை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அச்ச மின்றி பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரைப் பயன் படுத்தலாம்.

எலும்பை பலப்படுத்தும்

பிரண்டை

பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. எலும்பு பலவீனமான வர்கள், எலும்பு முறிவு உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தலாம். வாய்வு பிடிப்பு, கை கால் குடைச்சல் உள்ளவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படும் போது பிரண்டையை சூப்பாக செய்து சாப்பிட்டால், அந்த பிரச்சினையைத் தீர்க்கும் தக்க மருந்தாக அமையும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. பிரண்டையில் உடலுக்குத் தேவையான முழுமையான கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. இது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

Banner
Banner