மருத்துவம்

காது குடைய பட்ஸ் பயன்படுத்தலாமா?

தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது எனக்குக் காது சரியாகக் கேட்ப தில்லை. `பட்ஸ் கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது. இப்படி அடிக்கடி காதை குடைவது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இது தவறு என்கிறாள் என் தோழி. இது சரியா? உங்கள் தோழி சொல்வது சரிதான்.

காதுக்குள் குரும்பி இருக்கும்போது, அதில் தண்ணீர் இறங்கிவிட்டால் குரும்பி உப்பிவிடும். இது காது சவ்வை அடைத்துக்கொள்ளும். இதனால் காது சரியாகக் கேட்காது. குரும்பியை அகற்றிவிட்டால் காது அடைப்பு சரியாகிவிடும். குரும்பியை `பட்ஸ் கொண்டு அகற்றுவதைவிட மருத்துவர் உதவியுடன் அகற்றுவதுதான் சரி.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர்- பின், தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகி விடுகிறது. ஆனால், இது ஆபத்தானது.

பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்குத் தள்ளி விடுவதுதான் நடக்கும்.

அப்போது செவிப்பறை பாதிக்கப் படும். தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ் பட்டு கிழித்து விட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸைக் கொண்டு காது குடை வதைத் தவிர்ப்பதே நல்லது.

காது குரும்பியை அகற்ற

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் செருமினஸ் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியைச் சுரந்து, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதிக் காதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயைக் காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் குரும்பி ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

அந்நியப் பொருள் நுழைந்துவிட்டால்?

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது.

காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையைச் சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக் குள் ஊற்றக் கூடாது. அப்படிச் செய்தால், காது கடுமையாகப் பாதிக்கப்படும்.

காதில் சீழ் வடிந்தால்?

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம் தான். இதன் தொடக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். அந்த நிலையிலாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள் மூக்கின் பின்பக்கத்தில் இருக்கும் ஈஸ்டாக்கியன் குழல்' வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும்.

பிறகு  அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக்கொண்டு வெளிக்காது வழி யாகச் சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். பட்ஸைப் பயன்படுத்திச் சுயமாகக் காதைத் துப்புரவு செய்து கொண்டு காலம் கடத்தினால், அறுவை சிகிச்சையில் கொண்டு போய் விட்டுவிடும். எச்சரிக்கை அவசியம்.

உப்பு அதிகம் உள்ள உணவைச் சாப்பிட்டால் தப்பா?

ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உப்பு அதிகம் உள்ள உணவைச் சாப்பிட்டால், அது தப்பு என்று கூறு கிறார்கள். இது உண்மையா? உண்மைதான்.

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி 20 கிராம்வரை உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இது மிகப் பெரிய தப்புதான். எப்படி எனப் பார்ப்போம்:

சமையல் உப்பு என்பது 40 சதவீதம் சோடியத்தாலும் 60 சதவீதம் குளோரைடாலும் ஆனது. நாளொன்றுக்கு நமக்குத் தேவையான சோடியம் அளவு 4 மி.கி. மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் உப்பில் 2.3 மி.கி. சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். ஏற்கெனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும்.

சிறுநீரகமும் ரத்த அழுத்தமும்

உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத் துக்கு அதிகப் பங்கு உண்டு. ரெனின்-ஆஞ்சியோடென்சின் - ஆல்டோஸ்டீரான் அமைப்பு என்று ஒரு அமைப்பு நம் உடலில் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. இதில் ரெனின், ஆஞ் சியோடென்சினைச் சிறுநீரகம் உற்பத்தி செய்கிறது.

இந்த இரண்டும் உடலில் ரத்தக் குழாய்களைச் சுருங்கி விரியச் செய்கின்றன. இவை சரியாகச் சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும்; அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கிவிடும். இப்படிச் சுருங்கிப் போன ரத்தக் குழாயில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலில் அதிகமானால், அதிலுள்ள சோடியம் ரெனின், ஆஞ்சியோ டென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும்.

இதனால் ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும். அடுத்த காரணம், உப்பு அதிகரிக்கும் போது, அதிலுள்ள அதீத சோடியம் உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்குக் கொண்டுவந்துவிடும். இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன்னும் பல வழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவேதான் உப்பு அதிகம் சாப்பிட்டால் தப்பு.

வேண்டவே வேண்டாம்

உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், புளித்த மோர், பாலாடைக்கட்டி, சேவு, சீவல், சாக்லேட், முந்திரிப் பருப்பு போன்ற நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

இரைப்பைப் புண்ணுக்குத் தரப்படும் சில அமில எதிர்ப்பு திரவ மருந்துகளில் () சோடியம் உள்ளது. இவற்றை மருத்துவர் சொல்லாமல் நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது. அப்படி உட்கொண்டால், சோடியம் அதிகரித்து ரத்த அழுத்தமும் அதிகரித்துவிடும்.

எதிரிக்கு எதிரி நண்பன்

நமக்கு சோடியம் தேவைதான். ஆனால், நமக்குத் தேவையான சோடியம் இயற்கைக் காய்கறிகளில் இருந்தே கிடைத்துவிடும். தனியாக உப்பு எனும் பெயரில் சோடியம் தேவையில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல் வதைப் போல், சோடியம் ரத்தஅழுத்தத்தை அதிகப்படுத்து கிறது என்றால் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதனால் இந்தச் சத்துகள் உள்ள உணவை அதிகப்படுத்திக் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். தினமும் பால் குடிக்கலாம். இதில் கால்சியம் உள்ளது.

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப் பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர், மீன் உணவு ஆகியவற்றில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வல்லம், ஜன. 1- பெரியார் பாலிடெக் னிக்கில் தேசிய மாணவர் படை அமைப்பின் கீழ் குருதி கொடை முகாம் மற்றும் மது ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை தொடங்கி வைத்து துவக்க உரையாற்றிய இக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அவர்கள் மதுவினால் உண்டாகும் தீமைகளையும், அத னால் ஏற்படுகின்ற சமுதாய சீரழி வினையும் விரிவாக எடுத்துரைத் தார்.

மேலும் தனி மனித ஒழுக்கத் திற்கு தடையாக இருப்பது மது வென்றும், அம்மதுவினை ஒழிப்ப தன் மூலம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வும் ஏற்படுகின்ற பாதிப்பினை நிச் சயமாக தடுக்க முடியுமென கூறி னார். எனவே மாணவர்கள் அனைவ ரும் மதுவினால் ஏற்படுகின்ற கொடிய பாதிப்புகளை உணர்ந்து இச்சமு தாயத்தில் நிகழ்வுகின்ற கொடிய போதை பழக்கமான மதுவினை ஒழிப்பதில் தங்களை ஈடுபத்திக் கொண்டு ஆரோக்கியமான சமுதா யத்தை உருவாக்க பாடுபட வேண் டுமென கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து உரையாற் றிய இக்கல்லூரி துணைமுதல்வர் டாக்டர் உபர்வீன் அவர்கள் மது வினால் அன்றாடம் ஏற்படுகின்ற விபத்துகளையும், வாழ்நாள் பாதிப் பினையும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனை தொடந்து உரையாற்றிய இக்கல்லூரி முதன்மையர் டாக்டர் அ.ஹேமலதா அவர்கள் பசி, பட்டி னியால் ஏற்படுகின்ற உயிரிழப் பினை விட மதுவினால் ஏற்படு கின்ற உயிரிழப்பே அதிகமென குறிப்பிட்டார்.

இவ்விழாவில் துறைத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Banner
Banner