மருத்துவம்

பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?

பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா?

தோல்கள் என்றாலே அவை தேவை யற்றவை என்று நாம் மனதில் பதிந்து போன தன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத் துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங் களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும்.

ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசி யம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக் களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளி களுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால் தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதி கரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க் கரை உடனே அதிகரிக்கும் தீமையையும் ஏற்படுத்தும்.

தோலுள்ள ஆப்பிளில் உள்ள சத்துக்கள் விவரம்: நார்ச்சத்து 5 கி., கால்சியம் 13 மி.கி., பொட்டாசியம் 239 மி.கி.; தோல் நீக்கப்பட்ட பழத்தில் உள்ள சத்துக்கள்: நார்ச்சத்து 3 கி., கால்சியம் 11 மி.கி. பொட்டாசியம் 194 மி.கி.

கொய்யாப் பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படு கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக் கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு.

சப்போட்டா பழத் தோலில் உடலில் காயங் களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப் பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குண மும் இவற்றுக்கு உண்டு. எனவே, உடலில் ஆறாத புண் உள்ளவர்கள் இதைத் தினமும் சாப்பிட்டுவந்தால் புண்கள் விரைவில் ஆறும். நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்து வரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.

வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிக ரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டு பண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப் படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப் பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம்.

இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற் றும் கால்சியம் சத்துக்கள் மிகுந் துள்ளன. எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக் காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட் சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதி லுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக் கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்து விடும்.

தவிர பழங்களைச் சாறாக்கி, பால், சர்க் கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல் பையே குலைத்துவிடும். செரிமானக் கோளா றையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங் களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதே நேரம், எந்தப் பழம் என்றாலும் தண் ணீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த பிறகே சாப்பிடவும் சமைக்கவும் செய்ய வேண்டும்.

ஆர்கானிக் பழங்களே நல்லவை!

இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டுப் பழங்களானாலும் சரி, வெளிநாட்டுப் பழங் களானாலும் சரி, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப் படுகின்றன. இப்பழங்களில் இந்த வேதி நச்சுகள் இறங்கிவிடுகின்றன. மேலும், இவை சந்தையில் விற்பனைக்கு வரும்போது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும், சில பழங்கள் விரைவில் பழுத்துவிடாமல் இருக் கவும், பழங்களின் தோலில் பலதரப்பட்ட வேதிப்பொருட்களைத் தடவுகிறார்கள்.

இவை நம் ஆரோக்கியத்துக்குக் கேடு செய்கின்றன. இவற்றைக் கழுவினாலும் இந்த வேதிப்பொருட்கள் முழுவதுமாக நீங்க வழியில்லை என்றே அறிவியலாளர்கள் கருது கிறார்கள். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிட விரும்புபவர்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் வகைப் பழங்களைப் பருவத்துக்கு ஏற்பச் சாப்பிடு வதே நல்லது.

நல்ல உணவு நாள்தோறும் வேண்டும்!

அக்ரூட் பருப்பு, அவகேடா பழம் என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், விற்கிற விலைவாசியில் இதையெல்லாம் சாப்பிட முடியுமா என்ன ? அதேபோல், இன்றைய அவசர வாழ்வில் கார்போஹைட்ரேட் இவ்வளவு, புரதம் இவ்வளவு என்று அட்டவணை போட்டுத்தான் பின்பற்ற முடியுமா? இருக்கிற நிலைமையில் எது சாத்தியமான ஊட்டச்சத்து உணவு? உணவியல் நிபுணர் ஜோட்ஸ்னாவிடம் கேட்டோம்.

உண்ணும் உணவே நீங்கள் என்று பழமொழி ஒன்று இருக்கிறது. அந்த அளவுக்கு உணவுதான் நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் தீர்மானிக்கிறது. உணவு

முறையை ஒழுங்காகப் பின்பற்றாதவர்களே அதிகமாக நோய்த் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. அப்படி என்றால், நம் உணவு பேலன்ஸ்டாக இருக்க வேண்டும். பேலன்ஸ்ட் டயட் என்பதற்கு சில கணக்கு இருக்கிறது. மாவுப்பொருளின் மூலம் 60 சதவிகித கலோரி களையும், புரதத்தில் இருந்து 15 சதவிகிதத்தையும், கொழுப்பில் இருந்து 30 சதவிகிதத்தையும் வழங்க வேண்டும்.

இதற்காக அட்டவணை தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. கலோரி என்பது ஓர் எண்ணிக்கை அவ்வளவுதான். நமக்குத் தேவையான இந்த கலோரிகளை எந்த உணவில் இருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எந்த வயதில் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால் போதும். காய்கறிதான் நல்லது, பழங்கள் மட்டுமே சாப்பிட்டால் போதும் என்றும் மிகைப்படுத்திக் கூற வேண்டியதில்லை. பொதுவாக உணவில் ஒரு கப் சாதம் எடுத்துக்கொண்டால் காய்கறிகளை சிறிதளவே எடுத்துக் கொள்கிறோம். இது தவறு.

ஒரு கப் சாதத்துக்கு இரண்டு கப் காய்கறிகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு இருப்பதால் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. தேங்காய் எண்ணெய் பயன்பாட்டைப் பற்றி பயம் கொள்ளத் தேவை இல்லை. மற்ற எண்ணெய்கள் கூட கொதிக்க வைக்கும்போது தன்மை மாறிவிடும் குணம் கொண்டது. ஆனால், தேங்காய் எண்ணெய் கொதிநிலையிலும் மாறாத தன்மை கொண்டது என்பதால் சமையலுக்கு தாராளமாகப் பயன்படுத்தலாம். அத்துடன் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று மற்ற எண்ணெய்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்துவது நல்லது.

முக்கியமாக, எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும்என்றவர், தற்போது நம் மக்களுக்குப் பிடித்தமான உணவாக எது இருக்கிறது என ஒரு சிறு ஆய்வு நடத்தியதையும் குறிப்பிடுகிறார்.பள்ளி குழந்தைகளிடம் உங்களது பிடித்தமான உணவு எது என கேட்டபோது, அவர்கள் ஆரோக்கியமான உணவு எதையும் சொல்லவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

உருளைக்கிழங்கில் செய்யும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பீட்சா, பர்கர், சைனீஸ் உணவுகள் என இன்றைக்கு நடைமுறையில் உள்ள உணவுகளையே அடுக்கினார்கள்.

இந்த பதிலையே கல்லூரி மாணவர்களிடமும், பெரியவர் களிடமும் எதிர்கொண்டோம். இதனை வைத்துப் பார்க்கும்போது பெற்றோரிடம் இருந்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது புரிந்தது. அதனால், உணவுப்பழக்கத்தை பெற்றோர்கள் முதலில் மாற்ற வேண்டும் என்கிறார். அப்படியானால் எந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்?நாள் முழுக்க ஒரே உணவை சாப்பிடக்கூடாது. காலையில் அரிசி உணவான இட்லி, தோசை என்றால், மதிய உணவில் கோதுமை, கேழ்வரகு வேறு ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பழமோ, குளிர்ந்த மோரோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பையில் நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் பழங்களை வைத்து அனுப்பும் பழக்கத்தையும் பெற்றோர் பின்பற்ற வேண்டும். பழங்களை உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவு நேரத்துக்கு இடைவெளியில் சாப்பிடுவது பலன் தரும். அதுவும் கடித்து சாப்பிடும்போது பழத்தின் நார்ச்சத்துகள் உட்பட எல்லா சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும். மாலை வேளையில் அதிகமாக பசிக்கும். இந்த நேரத்தில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடாமல் கேழ்வரகு, கோதுமை அடை என காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.

இரவு உணவில் புரதம் முக்கியம். எனவே, ஒரு காய்கறி சூப் செய்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பின்னர் பருப்புக் கூட்டுடன் சாமை, திணை, கேழ்வரகு இவற்றில் ஏதாவது ஒன்றின் உணவை சேர்த்துக் கொள்வதும் வேண்டும்.

அதேபோல், சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் 3 வகையான நிறம்கொண்டதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் பொதுவான உணவுமுறை. முக்கியமாக அவசர வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான். அதற்காக நம் பாரம்பரிய உணவுகளை மறந்துவிடக்கூடாது. அதுதான் நமக்கு எப்போதும் ஆரோக்கியமான உணவு என்கிறார்.

வாசியுங்கள்...வாழ்நாள் அதிகரிக்கும்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! சிக்மண்ட் ஃப்ராய்ட் கிட்டத்தட்ட எல்லாருக் குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகள், அக் கறைகள், ஆர்வங்கள் என  எல்லாம் தங்களைச் சுற்றியே அமைகின்றன. யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை.

இதனா லேயே பல நடைமுறைச் சிக்கல்கள். இப்படித் தோன்றும் சிக்கல்களையும் பிரச்னைகளை யும் சரிவரக் கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்க்க வேண் டும். அதற்கான மாற்று வழிதான் வாசிப்புப் பழக்கம். புத்தகம் வாசித்தால் உங்கள் அறிவு வளர்கிறதோ இல்லையோ ஆயுள் வளர்வது நிச்சயம் என்கிறது ஆராய்ச்சி.

ஆமாம்... சமீபத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாசித்த லுக்கும், ஆயுளுக்கும் உண்டான நெருக் கத்தை  தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட வர்களில் சுமார் 3700 பேரிடம் அவர்களது வாழ்வியல் முறை, படிக்கும் பழக்கம் என்ற ரீதியில் ஆய்வினை மேற்கொண்டனர்.

காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளைப் படிப்பதே அவதார நோக்கமாக, முகத்தை மூடிக்கொள்பவர்கள் எனக்கு ஆயுள் கெட்டி என்று கர்வப்பட்டுக் கொள்ள வேண்டாம். செய்தித்தாள் அல்லாது பல்வேறு புத்தகங் களை படிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள் என சமூக அறிவியல் மற்றும் மருத்துவப் பத்திரிகையில் ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை நம்மிடம் இருந்தாலும் சில நேரங்களில் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்பாக்ஸில் வந்து விழும் இமெயில்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டே, ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்த்து லைக்ஸ் கொடுப்போம்.

அதேநேரத்தில் ஹெட்செட் டில் பாடல் களையும் கேட்டுக் கொண்டி ருப்போம். இவற்றையெல்லாம் முழுக்கவனத் தோடு செய்கிறோமா என்றால், இல்லை. எல்லாம் கடமைக்கே. ஆனால், அமைதியான இடத்தில் அமர்ந்து  5 நிமிடங்கள் புத்தகம் படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி, கவனத்தை  வளர்த்துக்கொள்ளக்கூடிய நீண்டகால பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். நல்ல வாசிப்பிற்கு கவனம் முக்கியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல் களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது.

இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம் பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். மனதிற்குப் பிடித்த புத்தகத்தை படிக்கும் போது முதல் 6 நிமிடங்களுக்குள்ளாகவே 68 சதவிகித மன அழுத்தம் குறைந்துவிடுவதாக ஆய்வு கூறுகிறது. ஓர் இசையைக் கேட்பதாலும், நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் குறையும் மனஅழுத்ததைக் காட்டிலும் படிப்பதால் மன அழுத்தம் அதிகம் குறையும்.

நீலக்கதிர்களைக் கக்கும் மொபைல், லேப்டாப், டேப்லெட், டி.வி எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாக ஒரு புத்தகத்தை படி யுங்கள். அப்புறம் பாருங்கள்... தூக்கம் கண் களைத் தழுவும் மாயத்தை! தூக்க மாத் திரையின் அவசியமே இருக்காது. வாசிப்பின் மீது நேசம் வைத்து வளருங்கள்... உங்கள் சந்ததிக்கே அது நிழல் தரும்.

நோய் காட்டும் கண்ணாடி

சிறுநீர் என்பது ஒரு நோய் காட்டும் கண்ணாடி என்றால் மிகையில்லை. இதைப் பரிசோதிப்பதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் கண்டறிய முடியும். இந்த வாரம் மேலும் சில பரிசோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

யூரோபிலினோஜன் பரிசோதனை

கல்லீரலில் சுரக்கும் பித்தநீரின் ஒரு பகுதி ரத்த ஓட்டத் தில் கலந்து, சிறுநீரகத்தை அடையும். அங்கு யூரோபி லினோஜனாக மாற்றப்பட்டுச் சிறுநீரில் வெளிப்படும். அடுத்து இது யூரோபிலின் எனும் வேதிப்பொருளாக மாறும். இதுதான் சிறுநீருக்குக் கொஞ்சம் மஞ்சள் நிறத்தைத் தருகிறது. எனவே, இது குறிப்பிட்ட அளவில் சிறுநீரில் இருக்கும்.

இது சிறுநீரில் இல்லவே இல்லை என்றால், பித்தநீர்ப் பாதை அடைத்துக்கொண்டுள்ளது என்பதைத் தெரி விக்கும் முக்கியமான தடயம் அது. எப்படியெனில், இந்த நோயின்போது பித்தநீரானது சிறுநீரகத்துக்குச் செல்ல முடியாது. அதனால், சிறுநீரில் இது வெளியேறாது. உதாரணத்துக்கு, பித்தப்பை கல், கணையப் புற்றுநோய் போன்றவற்றைச் சொல்லலாம்.

மாறாக யூரோபிலினோஜன் அளவு சிறுநீரில் மிக அதிகமாக இருந்தால் உடலில் கல்லீரல் பாதிப்பு, மலேரியா, அதீத ரத்த அணுக்கள் சிதைவு எனும் பாதிப்பு போன்றவற்றில் ஒன்று இருப்பதாகக் கொள்ளலாம்.

கீட்டோன் பரிசோதனை

முதலில் கீட்டோன் என்றால் என்ன? ரத்தத்தில் சர்க்கரை கட்டுமீறி அதிகரிக்கும்போது, உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ‘கீட்டோன்’ எனும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும். இது ஆரோக்கியத்தைக் கெடுக்கிற அமிலக்கூறு. இதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும்போது, நீரிழிவு நோய் இன்னும் கடுமையாகும். பாதிக்கப்பட்ட நபருக்குக் குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வேகமாக மூச்சு விடுதல், மூச்சுக் காற்றில் அழுகிய பழநாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

நிலைமை மோசமாகும்போது சிறுநீரகமும் மூளையும் பாதிக்கப்படும். நோயாளிக்கு கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கம் வரும். அப்படிப் பட்டவர்களுக்குச் சிறுநீரில் கீட்டோன் வெளிப்படும். இதைச் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உறுதிசெய்வது வழக்கம். ஆரோக்கியமாக உள்ளவர்களின் சிறுநீரில் கீட்டோன் வெளியேறாது.

யாருக்கு இது அவசியம்?

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ரொம்பவே அலட்சியமாக இருப்பவர்கள், கடுமையான நீரிழிவு நோய் இருப்பவர்கள்,  நீரிழிவு நோயுள்ள குழந்தைகள், கர்ப் பிணிகள், கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், நீண்ட காலம் சாப்பிட முடியாமல் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள்.

சிறுநீரில் ரத்தம் - என்ன காரணம்?

ஆரோக்கியமாக உள்ளவர் களுக்குச் சிறுநீரில் ரத்தம் வெளிப்படாது. அப்படி வெளிப்பட்டால் அது சாதாரண நோய்த்தொற்றிலிருந்து புற்றுநோய்வரை எந்த நோயின் காரணமாகவும் இருக்கலாம்.

சில முக்கியமான காரணங்கள்:

சிறுநீரகத்திலும் சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப் பை எனச் சிறுநீர் வெளியேறும் பாதையிலும் நோய்த்தொற்று இருப்பது, சிறுநீரகக் கல் இருப்பது, புராஸ்டேட் வீக்கம் அல்லது புற்றுநோய் இருப்பது, சிறுநீரகத்தில் உள்ள வடிப்பான் களில் அழற்சி ஏற்பட்டிருப்பது, சிறுநீரகத்தில் காசநோய் இருப்பது, சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப் பையில் புற்றுநோய் இருப்பது, சிக்கில் செல் ரத்தசோகை போன்ற பரம்பரை நோய் இருப்பது, விபத்தின்போது சிறுநீரகத்தில் அடிபடுவது,

சிறுநீர் கசடுகள்

சில நோய்நிலைகளில் சிறுநீருடன் பல வேதிப் பொருள்களும் துகள்களும் ரத்த அணுக்களும் சீழ் செல்களும் கலந்து வரும். அவை சிறுநீர்க் கசடுகள் எனப்படுகின்றன. அவற்றை நுண்ணோக்கியில் ஆராய்ந்து தெரிந்துகொள்வதன் மூலம், அந்த நோய்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். அவை:

1. சிறுநீரகக் கல் வகையைக் கண்டறியும் பரிசோதனை:

சிலருக்குச் சிறுநீரகக் கல் தோன்றி இருக்கலாம் அல்லது அவை தோன்ற வாய்ப்புகள் இருக்கலாம். அப் போது அவர்களின் சிறுநீரில் அந்தக் கற்களின் துகள்கள் வெளியேறும். இவற்றை நுண்ணோக்கியில் காணலாம். சிறுநீரகக் கல்லில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம், ஸ்டுரூவைட் கற்கள், சிஸ்டின் எனப் பல வகைகள் உள்ளன. அவற்றின் வடிவத்தையும் தோற்றத்தையும் வைத்து, அவை எந்த வகைக் கற்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

என்ன பலன்?

ஒருவருக்கு இந்தத் தொல்லை மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள கல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருந்துகளைச் சாப்பிடுவதும் உணவு முறையை மாற்றிக்கொள்வதும், மீண்டும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்க உதவும்.

2. ரத்தச் சிவப்பணுக்கள்

சிறுநீரில் ரத்தம் வெளிப்படுவதற்குக் காரணமான நோய்களின் ஆரம்ப நிலையில், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், ரத்தச் சிவப்பணுக்கள் மிகச் சிறிய அளவில் வெளியேறத் தொடங்கும். இதைக் கண்டறிந்து அந்த நோய்கள் தீவிரமடையாமல் தடுத்துவிடலாம்.

3. ரத்த வெள்ளையணுக்கள்

சிறுநீரில் ரத்த வெள்ளையணுக்கள் வெளியேறுவதை நுண்ணோக்கியில் காண முடியும். சிறுநீரகத்தில் சீழ் பிடித்திருந்தால், வேறு ஏதேனும் அழற்சி ஏற்பட்டிருந்தால் இவ்வகை அணுக்கள் சிறுநீரில் வெளியேறும். சிறுநீர்ப் பையில் நோய்த்தொற்று இருந்தாலும் சிறுநீரில் ரத்த வெள்ளையணுக்கள் வெளியேறும்.

4. சீழ் செல்கள்

சிறுநீரில் சீழ் செல்கள் வெளியேறுமானால், சிறுநீரக நோய்த்தொற்று தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

என்ன காரணம்?

சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்ப் புறவழி ஆகிய இடங்களில் நோய்த்தொற்று காரணமாகப் புண் உண்டாவது,  சிறுநீரகத்தில் காசநோய் ஏற்படுவது, பால்வினை நோய்கள் இருப்பது, புராஸ்டேட் சுரப்பியில் நோய்த்தொற்று உண்டாவது, ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களின் பக்க விளைவு, சிறுநீரகப் புற்றுநோய்,

சிறுநீர் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனை

சிறுநீரில் சீழ் தெரிந்தால், சீழில் உள்ள கிருமிகளின் வகை, அவற்றை அழிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. சிறுநீரை ஆய்வுக்கூடத்தில் ஊட்டச்சத்துப் பொருளில் வைத்து வளர்த்து, அதில் எவ்வகை நுண்கிருமிகள் வளர்கின்றன என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. மேலும் அக்கிருமிகள் எந்த மருந்துக்குக் கட்டுப்படும் என்பதையும் இது துல்லியமாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் நோய்க் கிருமிகளையும் சரியாகக் கண்டுபிடிக்கலாம்; அவற்றுக்குச் சரியான மருந்து கொடுத்து நோயையும் முழுவதுமாகக் குணப்படுத்திவிடலாம்.

சளிப்பரிசோதனை:

உடலில் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய மூன்று இடங்களில் சளி சேரும். இவற்றில் நுரையீரல் சளி முக்கியமானது. காசநோய் ஏற்பட்டவர்களுக்கு நுரை யீரலில் அதிகச் சளி கட்டும். அப்போது அந்த நோயை உறுதி செய்யச் சளிப் பரிசோதனை  செய்யப்படும்.

அதிகாலையில் ஆழமாக இருமி எடுக்கப்படும் சளிதான் பரிசோதனைக்கு உகந்தது. ஆய்வுக் கூடத்தில் கொடுக்கப்படும் குப்பியில் சளியைச் சேகரித்து, உடனே பரிசோதனைக்குக் கொடுத்துவிட வேண்டும்.

ஆய்வுக்கூடத்தில் அதைப் பக்குவப்படுத்தி, நுண்ணோக்கியில் ஆராய்வார்கள். சளியில் காசநோய்க் கிருமிகள் காணப்பட்டால் பாசிட்டிவ் என்று முடிவு தருவார்கள். இது காசநோயை உறுதி செய்ய உதவும். இந்த நோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு, மீண்டும் சளியைப் பரிசோதிப்பார்கள். இதில் காசநோய்க் கிருமிகள் இல்லை என்று தெரிந்தால், நெகட்டிவ் என்று முடிவு தருவார்கள். அப்போது சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.

சிலருக்கு இப்பரிசோதனையில் காசநோய்க் கிருமிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சளித் தொந்தரவு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்குக் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனையை செய்ய வேண்டும்.   காசநோய் தவிர நிமோனியா, நுரையீரல் பூஞ்சை நோய் போன்றவற்றுக்குக் காரணமான கிருமிகளையும் சளிப் பரிசோதனையில் காண முடியும்.

மூளைக்கும் வேண்டும் பயிற்சி

தம்முடைய 20, 30களில் ஏகப்பட்ட விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்த ஒருவருக்கு, 40, 50களில் கண்முன்னே கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களில் கூட தொடர்ந்து கவனம் செலுத்த முடிவதில்லை. ஒருவரிடம் பேசும்போது அவரின் பெயர் நினைவில்லாமல், பேசி முடித்து, வீட்டுக்கு வந்தும் அவரது பெயரை நினைவுபடுத்திப் பார்ப்பார்கள்.

சில நேரங்களில் அவரது பெயர் நினைவுக்கு வராமலேயே போய் விடும். அதற்காக எல்லா ஞாபக மறதியும் அல்சைமரின் அறிகுறி இல்லை! உடலை உறுதியாக்க உடற்பயிற்சி செய்வது போலவே, மூளைக்கு அளிக்கப்படும் பயிற்சிகளும் நினைவுத்திறனை வலுப் படுத்துபவை.

நினைவுத்திறனை அதிகப்படுத்தக்கூடிய பயிற்சிகளையே ஆராய்ச்சிகளும்  வலியுறுத்துகின்றன. எந்த வேலையும் இல்லாமல் தனிமையில் அமர்ந்திருக்கும் போது எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டிருப்பதற்கு மாற்றாக, இசைக்கருவி வாசிக்க கற்றுக் கொள்ளலாம்... பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டிகளை முயற்சிக்கலாம். தோட்டப் பராமரிப்பு, பறவைகள் வளர்ப்பது, கைவேலை கற்றுக்கொள்வது என ஏதேனும் பொழுது போக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

நட்பு வட்டங்களை அதிகப்படுத்தி, அவர்களுடனான அரட்டை களில் உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம்.  புத்தகம் படிக்கும் பழக்கம் ஒருவரின் மூளையை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளும் போது எப்பொழுதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் நேர்மறையான சிந்தனைகள் பெருகி நினைவாற்றல் வளரும்.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்பது, அடிக்கடி பயன் படுத்தும் பொருட்கள் அல்லது வார்த்தைகளைக்கூட மறந்து போவது, நன்றாகத் தெரிந்த இடத்துக்குச் செல்லும் வழியை மறப்பது, நம் வீட்டுக்குச் செல்லும் வழியையே மறப்பது மற்றும் இடக் குழப்பம் போன்ற ஒருவரின் நடவடிக்கைகள் உச்சக்கட்ட மறதியின் அறிகுறிகள். இவை அசாதாரணமானவை.

வயதானவர்கள் பிற நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள், கீழே விழுவதால் தலையில் அடிபடுதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்றவற்றால் அசாதாரண மறதி ஏற்படுகிறது.

மருத்துவரை அணுகி ஞாபகமறதி நோய்() இல்லை என்பதை  உறுதி செய்துகொண்டு, சரியான காரணத்தை கண்டுபிடித்து  அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அல்சைமர் நம்மை  அண்டாது!

Banner
Banner