Banner

மருத்துவம்

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் -ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

இந்த -ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் -ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த -ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சினைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளி யிடப்பட்டுள்ளது.

பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.

சர்வதேச கல்வித் தேர்வுகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக் காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர் களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பொஸ்டன் கல்லூரியால் நடத்தப் பட்ட இந்த ஆய்வில் அமெரிக்கா விலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக் கிறது.

அங்கு 9 முதல் 10 வயது வரையி லான குழந்தைகளில் 73 சதவீதத் தினருக்கு ஒழுங்கான தூக்கம் கிடையாது என்றும், 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் 80 சதவீதத்தினருக்கு தூக்கம் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

உலக சராசரியைவிட இது மிகவும் அதிகமாகும்

இதேபோன்று நியூசிலாந்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.

நல்ல தூக்கம் இருப்பதால், கணிதம், விஞ்ஞானத்தில் அதிக பெறுபேறு களைப் பெறும் மாணவர் களை கொண்ட நாடுகளாக அஜர்பைஜான், கசகஸ் தான், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் திகழு கின்றன.

ஆசிய மாணவர்கள் இந்த கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறனில் முன்னணியில் திகழ்கின்றனர்.

சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவு களை கடைப்பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.

தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விசயங்களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்வாளர்கள் கூறு கிறார்கள்.

கணினியில் விழித்திருத்தல், நண்பர் களுக்கு அதிகமாக மெசேஜ்களை அனுப்புபவர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள்.

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட.  வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று.

மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு காரணம் கால்சியம் குறைபாடு.. ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன. மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

6 ,3 ,1.5 கொழுப்பு உள்ள பால் கிடைப்பதால் நமக்குத் தேவையான கொழுப்பு அளவின்படி நாம் எடுத்துக் கொள்ள வேண் டும். பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது. பாலில் 70 தண்ணீர் இருப்பதால் பாலில் தண் ணீர் கண்டிப்பாக சேர்க்க வேண்டாம்.

கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால், கொழுப்பு குறைவாக உள்ள பாலை பயன்படுத்த வேண்டுமே தவிர தண்ணீர் ஊற்றிக் காய்ச்சக் கூடாது. இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சுண்ணாம்பு சத்து பாலில் அதிகளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சி குழந்தை மற்றும் இளம் பருவத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப் பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பால் மிகமிக முக்கியமானது. இவை தவிர இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பால் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊற வைக்கும் சுவை கொண்டது மட்டு மல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸி டென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சி கரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக் கொள் கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கருவுற்ற பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத் துடன் ரத்த சோகை உள்ளவர் களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப் பிடலாம் என்பது குறித்து மருத் துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர் களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத் திற்கும் உதவுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டை யிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

தயிர் சூடு ஆனா, மோர் குளிர்ச்சி, மாம்பழம் சூடு ஆனா மாம்பழ மில்க் சேக் குளிர்ச்சி, பப்பாளியும் பலாப்பழமும் வெயில் நேரத்தில் வேண்டவே வேண்டாம். எக்கச்சக்க சூடு.
இப்படி உணவு விஷயத்தில் தமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் சேர்த்துக் குழப்பி, இப்படி சில தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் எப்போதும் உலவுவதுண்டு. யாரோ ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் போனதால், குறிப்பிட்ட அந்த உணவு, எல்லாருக்கும் பிரச்சினை தருவதில்லை.

வெயிலின் உக்கிரத்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வறண்டு கொண்டே இருக்கும். அதை சரிசெய்ய, இழந்த நீர்ச்சத்தை உடலுக்குத் திருப்பித் தர வேண்டும். நீர்ச்சத்து என்றதும், பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்பது பலரது விருப்பம். பழச்சாறு என்றில்லாமல், எல்லா திரவ உணவுகளும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.

நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் முடிந்த போதெல்லாம், ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள். உடலின் நீர்ச்சத்து இழக்கப்படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ சாறு எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது! பழச்சாறாக எடுக்கும்போது, அவற்றிலுள்ள நார்ச்சத்து பறிபோவதுடன், சுவைக்கு சர்க்கரை வேறு சேர்த்துக் கொள்கிறோம்.

வாய்ப்பே இல்லை பழச்சாறாக தான் குடிப்பேன் என அடம் பிடிக்கிறவர்கள், பழத்தின் கசப்பான தோல் பகுதியையும், விதைகளையும் நீக்கிவிட்டு, சர்க்கரை சேர்க்காமல், அப்படியே மிக்சியில் அரைத்து கெட்டியாகக் குடிக்கலாம். நீர்மோர் தாகத்துக்கு மிக நல்லது. கூடுதல் சுவைக்கு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்துக் குடிக்கலாம்.

பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு, அதே பாலை லேசாகக் குளிர வைத்து, அதை ரோஸ் மில்க் காகவோ, பாதாம் மில்க்காகவோ மாற்றிக் கொடுக்கலாம்.

அண்மைச் செயல்பாடுகள்