எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்னை மணியம்மையார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு கழகத் தலைமைப் பொறுப்பை ஏற்று இயக்கத் தைச் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

"இராவணலீலா" நிகழ்ச்சியை நடத்திக்காட்டி, இனவுணர்வு வரலாற்றில் புதிய எழுச்சியை ஏற் படுத்தினார். ஆனாலும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நெருக்கடி நிலைக் காலத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உள்பட கழக முக்கியப் பொறுப்பாளர் கள் எல்லாம் 'மிசா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் குன்றிய நிலையிலும் இயக்கத் தைக் கட்டிக் காத்த அன்னையாருக்கு, வருமான வரித் துறையினர் கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றிற்கும் ஈடு கொடுத்தார்.

358 நாள்கள் சென்னை மத்திய சிறையில் 'மிசா' கொடுமையை அனுபவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள், 23.1.1977 அன்று காலை விடுதலை செய்யப்பட் டார்; மற்ற தோழர்களும் விடுதலையாயினர்.

22.12.1977 அன்று திடீர் நெஞ்சு வலிக்கு ஆளான அன்னை மணியம்மையார் உடனடி யாக சென்னை பொது மருத்துவமனையில் இரு தய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டார்.

இதற்கிடையே 25.12.1977 காலை 11 மணிக்கு, திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அன்னை மணியம்மையார் - மருத்துவர் களின் அனுமதியோடும், மருத்துவர்களின் துணை யோடும் மத்திய நிருவாகக் குழு கூட்டத்திற்கு வருகை தந்து, தலைமை தாங்கி சிறிது நேரம் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார். உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி, பொறுப்பிலி ருந்து தாம் விலகுவதாகவும், ஆசிரியர் வீரமணி அந்தப் பொறுப்புகளையும் ஏற்று. கழகத்தை நடத்த வேண்டும் என்று தாம் எழுதி வைத்திருந்த குறிப்பினைக் கூட்டத்தில் படித்தார். அதனைச் சற்றும் விரும்பாத, எதிர்பார்க்காத ஆசிரியர். அந்த கடிதத்தைச் சுக்கல் நூறாகக் கிழித்து எறிந்தார்.

தலைமையிலிருந்து விலகல் என்ற பேச் சுக்கே இடமில்லை என்று உறுதியாக ஆத்திரம் கொப்பளிக்க உரையாற்றினார் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி. அனைவரின் வற்புறுத்த லுக்கிடையே அந்த முடிவை அன்னை மணியம் மையார் மாற்றிக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் (எண் 10) வருமாறு:

"கழகத்தின் இந்தப் பொறுப்பான காலக்கட்டத் தில் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராக ஆசிரியர் கி.வீரமணி அவர்களே நீடிக்க வேண் டும் என்று, மத்திய நிருவாகக் குழுவினர், மாவட் டத் தலைவர்கள், செயலாளர்கள், கழக நிருவாகி களின் கூட்டம் ஒரு மனதாகத் தீர்மானித்து, இதற்கு வணக்கத்திற்குரிய கழகத் தலைவர் அம்மா அவர்கள் அருள்கூர்ந்து ஒப்புதல் அளிக் கப் பணிவன்புடன் ஒருமனதாக வேண்டுகிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன் னையார் அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஒப்பு தல் தந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தந்தார்.