எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.24  ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக செல்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு கூறினார்.

அவர் நேற்று அளித்த பேட்டி விவரம்:

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரயில்வே காவல்துறையின் சார்பில் புதிதாக ஜி.ஆர்.பி. ஹெல்ப் அப் என்ற செல்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பயணிகள், தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தச் செயலியில் ரயில் பயணிகள் புகார் அளித்தால், இரண்டு நிமிஷங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிக்கும் பயணி எந்த ரயிலில் இருக்கிறாரோ, அந்த ரயிலில் இருக்கும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை செய்வார்கள் என்றார் அவர்.

அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மய்யங்கள் திறக்க திட்டம்

புதுடில்லி, நவ.24  அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தலா ஒரு கடவுச்சீட்டு சேவை மய் யம் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரகத்தில் புதன்கிழமை கடவுச்சீட்டு சேவை மய்யத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தாய்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி கடவுச்சீட்டு பெறுவதற்கு எந்தவித சிரமத்தையும் இந்தியர்கள் எதிர்கொள்ளக் கூடாது. கடவுச்சீட்டு சேவைத் திட்டம், கடவுச்சீட்டுகளை வழங்குவதில் மிகப் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

புதிய முறைப்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதும், அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆன்லைனில் அறிந்து கொள்ளவும் முடியும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தலா ஒரு கடவுச்சீட்டு மய்யத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

அனைத்து தலைமை அஞ்சல் நிலையத்திலும் கடவுச்சீட்டு சேவை மய்யம் தொடங்கப்படும். இதனால், எந்தப் பகுதியில் இருப்பவர்களும் கடவுச்சீட்டு சேவைக்காக 50- - 60 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது, மாதந்தோறும் 10 லட்சம் விண்ணப்பங்கள் புதிய கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்கப்படுகின்றன என்று சிங் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner