வரலாற்று சுவடுகள்

இராஜீய உலகத்தில் பார்ப்பனர்களு டையவும் அவர்களது வால்களினுடைய வும் நாணயமும் யோக்கியதையும் அடி யோடு ஒழிந்து அவர்களின் அயோக்கி யத்தனம் வெளியாய்விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கி யதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய்முழு பார்ப் பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத் தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்ப னர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழை யாமைக்கு டில்லியில் உலை வைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்ட சபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப்பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூ. பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங் கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக் கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட் டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் குறைந்ததாக தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல் லது தமிழ்நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக் யதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித் தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச் சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனு தர்ம சாஸ்திரப் பிரச்சாரம் செய்யத் துணிந் தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத் தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய்க் கொடுத்ததான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமூகத் தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூல மாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப் பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட் கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத்துழை யாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத்தன்மை முதலியவைகள் ஆகிவிடுகின்றன.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறு நன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசீய அயோக்கியத் தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய்இருக்கும் போது இரும்பு என்ன செய்யும் என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அது போல் பார்ப்பனரல் லாதாரிலே உள்ள கோடலிக் காம்புகளை நினைக்கும் போது ஸ்ரீராஜகோபாலாச் சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரி யமாகத் தோன்றவில்லை.

- குடி அரசு, தலையங்கம் - 01.04.1928

சுயராஜ்யம் என்றால் என்ன?

நமது மகாத்மா காந்தியடிகள் தமது சுயராஜ்யத் திற்கு இன்னும் அர்த்தம் சொல்லவில்லை. ராஜப் பிரதிநிதி கேட்டபோது கூட அவர் சொல்லவில்ணீலை. சுயராஜ்யம் கிடைத்தால் அதை அடைய யோக்கி யதை வேண்டுமென்றுதான் நிர்மாணத் திட்டத் தையே சுயராஜ்யம் என்று சொன்னார். அதை விட்டுவிட்டு உத்தியோகம் அடைவதை சுயராஜ்யம் என்று உங்களை பிராமணர்கள் ஏமாற்றுகிறார்கள். நாம் உண்மையை உணர வேண்டும்; உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்; உண்மையை எடுத்துச் சொல்லுவதில் என்ன வந்தாலும் பொறுத்துக் கொள் ளத்தான் வேண்டும். நம் பயித்தியக்காரத்தனம் நீங்கவேண்டும். இப்போது நாளுக்கு நாள் மகாத்மா காந்தி யென்பவர் ஒருவர் இருந்தார் என்று சொல் லும் ஸ்திதிக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது நமது யோக்கியதை என்ன என்பதுதான் நமது கவலை. நாம் இத்தனை கஷ்டப்பட்ட ஒத்து ழையாமைக் காங்கிர ஸின் பலனை சுயநலக்காரர்கள் உபயோகப்படுத்திக்கொள்ள விடுவதா என்பதுதான் எனது கவலை.

- குடிஅரசு, 27.6.1926

சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரண காரிய தத்துவ உணர்ச்சியையும் காரணகாரிய விசா ரணையையும் உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற் றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடு கின்றது. இயற்கையையே ஆராயத்தலைப்பட்டாய் விட்டது. விபரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத் தின் தத்துவமே அதுதான். எந்தக்காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டு விடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங் களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பது தான் சுதந்திரமாகும். சுதந்தரத்திற்கும் சுயமரியாதைக் கும் அதிக தூரமில்லை. இன்றைய சுதந்திரவாதிகள் சுதந்திரத்திற்காகச் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரி யாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரி யாதை அற்றவர்களுக்கு - சுயமரியாதை இல்லாதவர் களுக்குச் சுதந்திரமேது என்பதுதான் சரியான வார்த் தையாகும்.
சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் - சுதந்தரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்குச் சுயமரியாதை தேவைப்படாது. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத்தக்கதாய் இருக்குமென்றும், சுதந் திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்த தாக மாத்திரம் இருக்கும்.

- குடிஅரசு, 18.7.1937

வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சிமுறை ஒழிய வழி

நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சுயமரி யாதைக்கும் பார்ப்பனர்களே ஜன்ம விரோதிகள் என்றும், அவர்களாலேயே நமது நாடு அடிக்கடி அந்நிய ஆதிக்கத்திற்கும் கொடுங்கோல் அரசு முறைக்கும் ஆளாகி வந்துக் கொண்டிருக்கின்றது என்றும், பார்ப்பன அயோக்கியத்தனம் வீழ்ந்த அன்றே வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சி முறை பட்டு மாய்ந்து விடும் என்றும் நாம் விப ரம் தெரிந்த காலம் முதல் தொண்டை கிழியக் கத்தியும் வருகின்றோம், கை நோக எழுதியும் வருகின்றோம்.

ஆனாலும், வேறு வழியில் வயிறு வளர்க்க முடியாத இழிமக்கள் தங்கள் வாழ்வுக்காக பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி சிலர் கடவு ளுக்கு வக்காலத்து பேசுவது போல் இவர்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து பேசி நமது முயற்சியைக் கெடுக்க வந்து விடுகின்றார்கள்.

பொதுஜனங்களும் முக்கியமாய் பாமர மக்க ளும் இவ்விஷயத்தில் கவலை இல்லாமலும் தங்கள் பகுத்தறிவை சரியாய்உபயோகிக்காமலும் கவலை அற்ற முறையில் பார்ப்பானைக் குற்றம் சொல்லாத முறையில் நமது வேலை நடக்கக் கூடாதா என்போர்களும் பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்கள் தானே, அவர்கள் நமக்கு ஒரு எதிரிகளா? என்று தர்மம் பேசுவோர்களும், மற்றும் பலவிதமாக அர்த்தமில்லாத சமாதானம் சொல்வோர்களுமாக இருந்து வருகிறார்கள்.

என்றைக்காவது நமது நாடு யோக்கியமான முன்னேற்றமும் சுயமரியாதையும் பெறவேண்டு மானால் பார்ப்பன அயோக்கியத்தனமும், சூழ்ச் சியும், ஆதிக்கமும் ஒழிந்த பிறகுதான் சாத்தியப் படக்கூடிய விஷயமேயல்லாமல் பார்ப்பனீய ஆதிக்கம் அடியோடு அழிபடாமல் ஒரு நாளும் முடியாது என்று கோபுரத்தின் மீதிருந்தும் கூவு வோம்.

- குடிஅரசு, 11.3.1928

நாளைய தினம் சுயராஜ்யம் வந்து விட்டதாகவோ, அல்லது வெள்ளைக்காரர் கள் பெண்டு, பிள்ளை, துப்பாக்கி மருந்து முதலியவைகளுடன் ஓடி விட்டதாகவோ வைத்துக் கொள்ளுவோம். அதன் பிறகு நடப்பது எந்த தேசிய ராஜ்யம் என்று தான் தேசிய வீரர்களைக் கேட்கின்றோம்? திரு வாங்கூர் சமஸ்தானத்தைப் போல் ஜாதி யைக் காப்பாற்றும், சனாதன தர்மமும், ராமராஜ்யமும் நடைபெறு வதைத் தவிர வேறு வழியிருக்கின்றதா என்றுதான் மறு படியும் கேட்கின்றோம். அல்லது வக்கீல் ராஜ்யமானால் அது பகற் கொள்ளை ராஜ் யமல்லவா? என்று கேட்கின்றோம். அல் லது வியாபாரிகள் முதலாளிகள் ராஜ்யமா னால் அது இப்போதைப் போலவே வழிப் பறிக் கொள்ளை ராஜ்யமா அல்லவா என்று கேட்கின்றோம்.

எந்தக் காரணத் தாலாவது பார்ப்பன ராஜ்யமும், வக்கீல் ராஜ்யமும், முதலாளி ராஜ்யமும் ஒழியும்படியான திட்டம் கொண்ட சுயராஜ்யமோ, தேசிய ராஜ் யமோ ஏற்படுத்த இப்போது நம் நாட்டில் ஏதாவது இயக்கம் இருக்கின்றதா? என்று கேட்கின்றோம். பார்ப்பனர் மோட்சத்தின் பேராலும், காலிகள் ஆதிக்கத்தின் பேரா லும், வக்கீல்கள் நீதிவாதத்தின் பேராலும், பண்டிதர்கள் சமயத்தின் பேராலும் வயிறு வளர்ப்பதுபோல் சில போலிகளும், போக் கற்றவர்களும் இப்போது சுயராஜ்யத்தின் பேராலும், தேசியத்தின் பேராலும், சுயேச் சையின் பேராலும் வாழ நினைத்துப் பாமர மக்களை ஏய்த்துப் பிழைப்ப தல்லாமல் மற்றபடி இவற்றில் கடுகளவா வது உண்மை இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

தாடியில் நெருப்புப் பிடித்து எரியும் போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்பு கேட்கும் கொடிய கிராதகர் களைப்போல் நாடு மானமிழந்து, அறி விழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து, கொடுங் கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கிச் சாகக் கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம், மானம், வெட்கம், மனிதத்தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக் கொண்டு சுயராஜ்யம், ராமராஜ்யம், தேசி யம், புராணம், சமயம், கலைகள், ஆத்தீகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற் றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட மக்களையுடைய நாடு மானமுடையநாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா என்றுங் கேட்கின்றோம்.

குழந்தையைத் துராக்கிருகப் புணர்ச்சி செய்ய வேண்டாமென்றால் ஒரு கூட்டம் மதம் போச்சு என்கின்றதும், பணத்தைப் பாழாக்காதே, கோயிலை விபச்சார விடுதி யாக்காதே என்றால் மற்றொரு கூட்டம் கடவுள் போச்சு என்கின்றதும், பொய்யும் புளுகும் ஜாதி மதத்துவேஷமும் கொண்ட புஸ்தகங்களைப் படியாதே என்றால், மற் றொரு கூட்டம் கலை போச்சு என்கின் றதும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கையா ளாக இருக்க வேண்டாமென்றால் இன் னொரு கூட்டம் தேசியம் போச்சுது என் கின்றதும். ஏழைகளைக் காட்டிக் கொடுத்து ஏழைகள் வயிறெரிய வரி வசூலிக்க உள் உளவாயிருந்து மாதம் 1000, 2000, 5000 ரூபாய் உத்தியோகத்திற்கு ஆசைப் படாதே! அதுவும் பிள்ளைக்குட்டிகளே கொள்ளை கொள்ள வேண்டுமென்று கரு தாதே என்றால் ஒரு தனிக்கூட்டம் தேசத் துரோகமென்கின்றதும், மனிதனை மனி தன் தொட்டால் தீட்டு, தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் இறங்கக்கூடாது, பக்கத்தில் வரக் கூடாது என்று சொல்லுவது அக்கிரமம், மானக்கேடு, கொடுமை என்று சொன்னால் அதே கூட்டம் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம், பிராமணத் துவேஷம் என் கின்றதுமாயிருக்கின்றன.

இவ்வளவும் போதாமல் இப்போது திருவாங்கூர் ராஜ்யம் ஜாதி வித்தியா சத்தை ஒழிக்க வேண்டுமென்கின்றவர் களைத் தனது நாட்டுக்குள்ளாகவே வரக் கூடாது என்கின்றது. எனவே இந்தியாவின் தேசபக்திக்கும், சுயராஜ்யக் கிளர்ச்சிக்கும், தேசிய உணர்ச்சிக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

- குடிஅரசு - தலையங்கம் - 14.07.1929

ஆரியரின் அடிமைகள்

ஆரியக்கொடுமையில் இருந்து, ஆரியர் சூழ்ச்சி யில் இருந்து, ஆரிய  ஆதிக்கத்திலிருந்து தமிழன் மீள்வதே சுயராஜ்யம் என்று, நாம் சுமார் 15 வருஷ காலமாகப் பேசியும் எழுதியும் வருகிறோம். திரா விடப் பெரியார்கள் பலர், இதற்காக, சுமார் 1500, 2000 வருஷத்துக்கு முன்பிருந்தே முயற்சித்து வந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது.

இந்நாட்டிற்கு ஆரியர் வருவதற்கு முன் தமிழர் கள் என்ன நிலையில் இருந்தார்கள், எவ்வளவு சுதந்திரமும் வீரமும் நாகரிகமும் பெற்று இருந்தார் கள் என்பதும், ஆரியர்கள் வந்தபிறகு தமிழர்களை (திராவிடர்களை) அவர்கள் எவ்வளவு கொடுமையும் சூழ்ச்சியும் செய்து ஆதிக்கம் பெற்றார்கள் என்பதும், ஆரியர்களும் மற்றும் தமிழர்கள் அல்லாத அந்நிய மாகாணத்தவர்களும் அய்ரோப்பிய நாட்டு ஆராய்ச்சி வல்லார்களும் எழுதி வைத்திருக்கும் அநேக ஆராய்ச்சி நூல்களில் இன்றும் காணலாம்.

இந்தப் படியாக ஏமாற்றி இழிவு படுத்தி அடிமைப் படுத்தப்பட்ட திராவிட மக்கள் ஆரியர்களைவிட ஜனத்தொகை 33 பங்கு அதிகமாக இருந்தும் இன் றைய வரையிலும் கூட ஏன் ஆரியர்கள் கொடுமை யில் இருந்தும் ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட வில்லை என்றால் இதற்கு ஒரு காரணம்தான் கூறலாம் என்று தோன்றுகின்றது.

ஆரியர் ஆதிக்கத்திற்கு வந்தவுடன் திராவிடர் களின் கலைகளை அழித்து விட்டதும், திராவிடர் களைக் கல்வி அறிவில்லாமல் செய்ததும், மீறிப் படித்தவர்களைக் கொடுமைப்படுத்தி அழித்தும், அழிபடாதவர்களைத் தங்களுக்கு அடிமைப்படுத்தி தங்கள் சமயங்களையும் கலைகளையும் தங்கள் உயர்வுக் கதைகளையுமே தமிழ் பாஷையில் மொழி பெயர்த்து எழுதச்செய்து, அதிலேயே அவர்களது பிழைப்பையும் பெருமையையும் கட்டுப்படுத்தி ஆரியக் கூலிப்பிரச்சாரகராய் ஆக்கிக்கொண்டதால், படிப்பு வாசனையற்ற தமிழ் மக்கள் இந்தத் துரோகி களும் வஞ்சகர்களுமான இழிமக்களை நம்பி, தமிழ் மக்கள் பூராவும் ஆரியர் அடிமைகளாகவும், ஆரி யர் இன்பத்திற்கும் போக போக்கியத்துக்குமாகவே தமிழர்கள் வாழவேண்டியவர்களாகவும் ஆக்கப் பட்டு விட்டார்கள்.

- குடிஅரசு, 5.11.1939

பிழைக்க வந்தவர்கள்

பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குச் சுமார் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பிழைக்கவந்தவர்கள்; வந்ததும் இந்த நாட்டு வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாமல் இந்த நாட்டுவளப்பத்தை அனுபவிக்கத் துவங்கி விட்டார்கள்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால்தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யாவிட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடுகட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகளை அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எங்காவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கின்றாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி, நாம் முன்னேற வேண்டுமென்றுதான் கேட்கிறோம்.

- தந்தை பெரியார், விடுதலை, 31.7.1951

(16.09.1934- பகுத்தறிவு - சொற்பொழிவிலிருந்து)

தோழர்களே! சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். நாடகம் என்பது ஒரு விஷயத்தைத் தத்ரூபமாக நடித்துக்காட்டுவது என்ப தோடு, அது பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டி யாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன்படுத் தப்படு கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை, மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப் பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.

தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மையாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கும் விளங்க வேண்டும். அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலட்சேபசபை போலவும், விகட சபை போலவும் நகைகள், உடுப்புகள், காட்சி சாலைகள் போலவும், விஷயங் களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுகளை அடுக்கி பேசும் பேச்சு வாத சபை போலவும் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விசேஷ சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்த மற்றது என்பது நமது அபிப்பிராயம்.

உதாரணமாக நெருப்பு பிடித்து விட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா?  அல்லது தாளம், சுருதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவற்றுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய்க் கருதப்படமுடியுமா?

மேல் நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்ராமாக்களில், பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷ யத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்ராமா என்று சொல்ல மாட்டார்கள். இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடை யைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடக அபிமான மும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர் திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமை யைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவை களைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படு கின்றதே ஒழிய வேறில்லை. அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத் துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது.

ஜாதி வித்தியாசம் தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கியிருக்கிறது. அதுபோலவே நந்தன் கதையிலும், ஆள்நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை.

ராமாயணமும் சீதையைப்படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும். இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது. இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித் திறம், சுயமரியாதை ஆகியவை விளங்கின தோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ்மாறுதலாகவும், கடின வார்த்தை யாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப் பம் ஏற்பட்டு அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக் காது. ஆரிய புராணங்களில் ஆரி யர்களால்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராட்சதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக் கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நிற்க. இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராசன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது. அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்குச் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன். நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், என்.எ. ஆனந்தம், அழகப்பா முதலியவர்களுக்கும் நன்றி கூறு கிறேன். சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலிய வைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன். இந்தப் புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித்ததற்கும், நாடக பாத்திரங்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் என் நன்றி செலுத்துகிறேன்.

(இரணியன் நாடகத்தில் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

(02.12.1934 - பகுத்தறிவிலிருந்து)

நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது கஷ்டப்பட்டு இரண்டு அல்லது ஒரு சந்தாதாரரை யாவது சேர்த்து 8 அணாவாவது அட்வான்ஸ் வாங்கி விலாசத்துடன் நமக்கு அனுப்பிக் கொடுங்கள்.

ஏன்? பகுத்தறிவு ஒரு தனிமனிதனுடைய சுய நலத்துக்கோ ஒரு தனி வகுப்பாருடைய நன்மைக் கோ நடைபெறுவதல்ல.

ஆனால் இன்று ஆதிக்கத்திலிருக்கும் வகுப்பாரு டைய விஷமமும் சூழ்ச்சியும் நிறைந்த எவ்வளவோ எதிர்ப்பு களையும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழ்மைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்காகவும் நடை பெறுகின்ற பத்திரிகை. இந்த வருஷத்தில் மாத்திரம் 3 தடவை  நிறுத்தப்பட்டு விட்டதாலும், 2,3 தடவை ஜாமீன் கட்டும்படி உத்தரவு செய்யப்பட்டதாலும், பத்திரிகை விஷயமாய் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் விதிக் கப்பட்டதாலும், கேசுகளை எதிர்வழக் காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்களேற்பட்டதோடு பத்திரிகை சந்தா எண்ணிக் கையும் குறையத் தலைப்பட்டுவிட்டது. ஏஜண்டுகள் பெரும் பாலோர் அதாவது இயக்கத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் - இயக்கத்தில் உள்ளவர்களால் - இயக்க நன்மைக்காகப் பாடுபட் டவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எங்கெங்கு ஏஜண்டாயிருந்தார்களோ அவர்களது பாக்கிகள் 100க்கு 90 ரூபாய்வீதம் வசூலாகாமல் போய் விட்டதுடன் கண்டித்து கேட்கப் பட்டதனால் அவர்களது விரோதத்துக்கும், ஆளாக நேரிட்டு விட்டது.
மற்ற பொது ஏஜண்டுகளும் சிலர் ஒழுங்காய் நடந்து கொள்ளாததால் எலக்ஷனுக்குப் பிறகு பத்தி ரிகை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தாகி விட்டது. ஆதலால் பகுத்தறிவுக்கு தோழர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கருதுகின்ற ஒவ் வொருவரும் தயவு செய்து இரண்டு சந்தாதாரர் களையாவது சேர்த்துக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவர் களாகி விட்டார்கள்.

இதைச் சிறிது முக்கியமானதாய்க் கருத வேண் டுமாய் வேண்டுகிறேன்.

ஆசிரியர்கள் மகாநாடு: பிள்ளைகளைப் பற்றிய கவலை இல்லை(23.12.1934 - பகுத்தறிவிலிருந்து)

எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் மகாநாடுகள் கூட்டப் படுவதும், ஆசிரியர்களின் சம்பளங்கள் போதாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப் படுவதும், மந்திரிகள் முதலிய பெரிய சம்பளக்காரர்களும், செல்வ வான் களும் ஆசிரியர்களை வாழ்த்தி ஆசீர் வதிப்பது மாகவே இருந்து வருகின்றதே ஒழிய, பிள்ளைகள் சம்பளம் கொடுக்கச் சக்தி இல்லாமல் பள்ளிக்குப் போக முடியாமல் கல்விப்பட்டினிகளாய் இருந்து தற் குறிகளாகி 100-க்கு 92பேர் எழுத்து வாசனை அற்ற குருடர்களாக இருந்து இந்திய நாட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்களே என்ற கவலை ஒருவரிடத்திலாவது  வோ, இதற்காக ஒரு மகாநாடாவது கூட்டப் பட்டதாகவோ, ஒரு மந்திரியாவது ஒரு பிரபுவாவது, ஒரு ஆச்சாரிய சுவாமி களாவது கவலைப் பட்டதாகவோ தெரிய வேயில்லை.

இந்தக் காலம் செல்வவான்கள் காலமானதால் பணம் சம்பாதிப்பதைப் பற்றியே உலக நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் செலவிட வேண்டியவர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் ஆன காரியம் நடக்கின்றது.

இதற்காக யார் என்ன செய் யக்கூடும்? எல்லாம் பகவான் செயல் அல்லவா?


(23.12.1934 - பகுத்தறிவிலிருந்து)

எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் மகா நாடுகள் கூட்டப் படுவதும், ஆசிரியர்களின் சம்பளங்கள் போதாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும், மந்திரிகள் முதலிய பெரிய சம்பளக்காரர்களும், செல்வவான்களும் ஆசிரியர்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பது மாகவே இருந்து வருகின்றதே ஒழிய, பிள்ளைகள் சம்பளம் கொடுக்கச் சக்தி இல்லாமல் பள்ளிக்குப் போக முடியாமல் கல்விப்பட்டினிகளாய் இருந்து தற்குறிகளாகி 100-க்கு 92பேர் எழுத்து வாசனை அற்ற குருடர்களாக இருந்து இந்திய நாட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்களே என்ற கவலை ஒருவரிடத்திலாவது இருந்த தாகவோ, இதற்காக ஒரு மகா நாடாவது கூட்டப்பட்டதாகவோ, ஒரு மந்திரியாவது ஒரு பிரபுவாவது, ஒரு ஆச்சாரிய சுவாமிகளாவது கவலைப்பட்ட தாகவோ தெரியவேயில்லை.
இந்தக் காலம் செல்வவான்கள் காலமான தால் பணம் சம்பாதிப்பதைப் பற்றியே உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் செலவிட வேண்டியவர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப் படாமல் இருக்கவும் ஆன காரியம் நடக் கின்றது. இதற்காக யார் என்ன செய்யக்கூடும்? எல்லாம் பகவான் செயல் அல்லவா?

இரணியன் நாடகம்  (16.09.1934- பகுத்தறிவு - சொற்பொழிவிலிருந்து)  

தோழர்களே!


சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். நாடகம் என்பது ஒரு விஷயத்தைத் தத்ரூபமாக நடித்துக்காட்டுவது என்ப தோடு, அது பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டி யாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படு கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை, மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப் பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.

தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மையாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கும் விளங்க வேண்டும். அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலட்சேபசபை போலவும், விகட சபை போலவும் நகைகள், உடுப்புகள், காட்சி சாலைகள் போலவும், விஷயங் களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுகளை அடுக்கி பேசும் பேச்சு வாத சபை போலவும் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விசேஷ சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்த மற்றது என்பது நமது அபிப்பிராயம்.

உதாரணமாக நெருப்பு பிடித்து விட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா?  அல்லது தாளம், சுருதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவற்றுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய்க் கருதப்படமுடியுமா?

மேல் நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்ராமாக்களில், பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்ராமா என்று சொல்ல மாட்டார்கள். இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடக அபிமான மும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவை களைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை. அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது.

ஜாதி வித்தியாசம் தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கியிருக்கிறது. அதுபோலவே நந்தன் கதையிலும், ஆள்நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை.

ராமாயணமும் சீதையைப்படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும். இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.

இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித்திறம், சுயமரியாதை ஆகியவை விளங்கின தோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ்மாறுதலாகவும், கடின வார்த்தை யாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப் பம் ஏற்பட்டு அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக் காது. ஆரிய புராணங்களில் ஆரியர்களால்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராட்சதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நிற்க. இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராசன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது. அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்குச் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன். நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், என்.எ. ஆனந்தம், அழகப்பா முதலியவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன். இந்தப் புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித்ததற்கும், நாடக பாத்திரங்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் என் நன்றி செலுத்துகிறேன்.

(இரணியன் நாடகத்தில் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)


இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள் எதற்காகத் தெரியுமா?

(02.12.1934 - பகுத்தறிவிலிருந்து)

நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது கஷ்டப்பட்டு இரண்டு அல்லது ஒரு சந்தாதாரரையாவது சேர்த்து 8 அணாவாவது அட்வான்ஸ் வாங்கி விலாசத்துடன் நமக்கு அனுப்பிக் கொடுங்கள்.

ஏன்?

பகுத்தறிவு ஒரு தனிமனிதனுடைய சுயநலத்துக்கோ ஒரு தனி வகுப்பாருடைய நன்மைக்கோ நடைபெறுவதல்ல.

ஆனால் இன்று ஆதிக்கத்திலிருக்கும் வகுப்பாருடைய விஷமமும் சூழ்ச்சியும் நிறைந்த எவ்வளவோ எதிர்ப்பு களையும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழ்மைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பின்தள்ளப்பட்ட மக்களுக்காகவும் நடை பெறுகின்ற பத்திரிகை. இந்த வருஷத்தில் மாத்திரம் 3 தடவை  நிறுத்தப்பட்டு விட்டதாலும், 2,3 தடவை ஜாமீன் கட்டும்படி உத்தரவு செய்யப்பட்டதாலும், பத்திரிகை விஷயமாய் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் விதிக் கப்பட்டதாலும், கேசுகளை எதிர்வழக் காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்களேற்பட்டதோடு பத்திரிகை சந்தா எண்ணிக்கையும் குறையத் தலைப்பட்டுவிட்டது. ஏஜண்டுகள் பெரும் பாலோர் அதாவது இயக்கத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் - இயக்கத்தில் உள்ளவர்களால் - இயக்க நன்மைக்காகப் பாடுபட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எங்கெங்கு ஏஜண்டாயிருந் தார்களோ அவர்களது பாக்கி கள் 100க்கு 90 ரூபாய்வீதம் வசூலாகாமல் போய் விட்டதுடன் கண்டித்து கேட்கப் பட்டதனால் அவர்களது விரோதத் துக்கும், ஆளாக நேரிட்டுவிட்டது. மற்ற பொது ஏஜண்டுகளும் சிலர் ஒழுங்காய் நடந்து கொள்ளாததால் எலக்ஷனுக்குப் பிறகு பத்திரிகை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆதலால் பகுத்தறிவுக்கு தோழர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கருதுகின்ற ஒவ்வொருவரும் தயவு செய்து இரண்டு சந்தாதாரர்களையாவது சேர்த்துக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவர்களாகி விட்டார்கள்.
இதைச் சிறிது முக்கியமானதாய்க் கருத வேண்டுமாய் வேண்டுகிறேன்.

Banner
Banner