வரலாற்று சுவடுகள்

அன்னை மணியம்மையார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு கழகத் தலைமைப் பொறுப்பை ஏற்று இயக்கத் தைச் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

"இராவணலீலா" நிகழ்ச்சியை நடத்திக்காட்டி, இனவுணர்வு வரலாற்றில் புதிய எழுச்சியை ஏற் படுத்தினார். ஆனாலும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நெருக்கடி நிலைக் காலத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உள்பட கழக முக்கியப் பொறுப்பாளர் கள் எல்லாம் 'மிசா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் குன்றிய நிலையிலும் இயக்கத் தைக் கட்டிக் காத்த அன்னையாருக்கு, வருமான வரித் துறையினர் கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றிற்கும் ஈடு கொடுத்தார்.

358 நாள்கள் சென்னை மத்திய சிறையில் 'மிசா' கொடுமையை அனுபவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள், 23.1.1977 அன்று காலை விடுதலை செய்யப்பட் டார்; மற்ற தோழர்களும் விடுதலையாயினர்.

22.12.1977 அன்று திடீர் நெஞ்சு வலிக்கு ஆளான அன்னை மணியம்மையார் உடனடி யாக சென்னை பொது மருத்துவமனையில் இரு தய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டார்.

இதற்கிடையே 25.12.1977 காலை 11 மணிக்கு, திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அன்னை மணியம்மையார் - மருத்துவர் களின் அனுமதியோடும், மருத்துவர்களின் துணை யோடும் மத்திய நிருவாகக் குழு கூட்டத்திற்கு வருகை தந்து, தலைமை தாங்கி சிறிது நேரம் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார். உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி, பொறுப்பிலி ருந்து தாம் விலகுவதாகவும், ஆசிரியர் வீரமணி அந்தப் பொறுப்புகளையும் ஏற்று. கழகத்தை நடத்த வேண்டும் என்று தாம் எழுதி வைத்திருந்த குறிப்பினைக் கூட்டத்தில் படித்தார். அதனைச் சற்றும் விரும்பாத, எதிர்பார்க்காத ஆசிரியர். அந்த கடிதத்தைச் சுக்கல் நூறாகக் கிழித்து எறிந்தார்.

தலைமையிலிருந்து விலகல் என்ற பேச் சுக்கே இடமில்லை என்று உறுதியாக ஆத்திரம் கொப்பளிக்க உரையாற்றினார் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி. அனைவரின் வற்புறுத்த லுக்கிடையே அந்த முடிவை அன்னை மணியம் மையார் மாற்றிக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் (எண் 10) வருமாறு:

"கழகத்தின் இந்தப் பொறுப்பான காலக்கட்டத் தில் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராக ஆசிரியர் கி.வீரமணி அவர்களே நீடிக்க வேண் டும் என்று, மத்திய நிருவாகக் குழுவினர், மாவட் டத் தலைவர்கள், செயலாளர்கள், கழக நிருவாகி களின் கூட்டம் ஒரு மனதாகத் தீர்மானித்து, இதற்கு வணக்கத்திற்குரிய கழகத் தலைவர் அம்மா அவர்கள் அருள்கூர்ந்து ஒப்புதல் அளிக் கப் பணிவன்புடன் ஒருமனதாக வேண்டுகிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன் னையார் அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஒப்பு தல் தந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தந்தார்.

29.09.1929 - குடிஅரசிலிருந்து...

ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர் களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு திரு. சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபச்சாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள். அவ்வு பச்சாரப் பத்திரங்களுக்குத் திரு.சவுந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே, இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமுகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளு வதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்விதக் கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமுகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும் படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக் கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்ய வேண்டும் என்றும் தனது சமுகத்தலைவரை அடிப்பணிந்து கேட்டுக் கொள்ளுவதாகவும் சொன்னார். அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதிதிராவிட மக்களை அந்தப் பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வுதாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

சென்னை, நவ.24  தமிழ கத்தில் ஜனவரி மாதம் நடை பெறவுள்ள தனித்தேர்வர்களுக் கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர் களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர் வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள் கிழமை முதல் டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை  இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மய்யங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-அய் பணமாக சேவை மய்யங்களில் நேரடி யாக செலுத்தலாம். முதல் முறையாக தேர் வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான் றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப் பிக்க வேண்டும்.

ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண் ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் சான்றி தழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண் டும். ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட் டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும். இந்தத் தேர்வுக்கான விரி வான தகவல்களை இணைய தளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 21.11.2018 அன்று நடைபெற்ற அய்யா மாரியப்பனார் சுந்தராம்பாள் அறக்கட்டளையின் 12ஆம் ஆண்டு அய்ம்பெருவிழாவில், புதுச்சேரி மாநில முதல்வர் வே.நாராயணசாமி அவர்கள் பங்கேற்று புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவர் சிவ.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி அ.ஜான்குமார், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேரா.மு.இராமதாசு, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, மாரியப்பனார் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் வி.முத்து ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

சென்னை, நவ.24  ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக செல்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு கூறினார்.

அவர் நேற்று அளித்த பேட்டி விவரம்:

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரயில்வே காவல்துறையின் சார்பில் புதிதாக ஜி.ஆர்.பி. ஹெல்ப் அப் என்ற செல்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பயணிகள், தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தச் செயலியில் ரயில் பயணிகள் புகார் அளித்தால், இரண்டு நிமிஷங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிக்கும் பயணி எந்த ரயிலில் இருக்கிறாரோ, அந்த ரயிலில் இருக்கும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை செய்வார்கள் என்றார் அவர்.

அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மய்யங்கள் திறக்க திட்டம்

புதுடில்லி, நவ.24  அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தலா ஒரு கடவுச்சீட்டு சேவை மய் யம் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரகத்தில் புதன்கிழமை கடவுச்சீட்டு சேவை மய்யத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தாய்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி கடவுச்சீட்டு பெறுவதற்கு எந்தவித சிரமத்தையும் இந்தியர்கள் எதிர்கொள்ளக் கூடாது. கடவுச்சீட்டு சேவைத் திட்டம், கடவுச்சீட்டுகளை வழங்குவதில் மிகப் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

புதிய முறைப்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதும், அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆன்லைனில் அறிந்து கொள்ளவும் முடியும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தலா ஒரு கடவுச்சீட்டு மய்யத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

அனைத்து தலைமை அஞ்சல் நிலையத்திலும் கடவுச்சீட்டு சேவை மய்யம் தொடங்கப்படும். இதனால், எந்தப் பகுதியில் இருப்பவர்களும் கடவுச்சீட்டு சேவைக்காக 50- - 60 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது, மாதந்தோறும் 10 லட்சம் விண்ணப்பங்கள் புதிய கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்கப்படுகின்றன என்று சிங் தெரிவித்தார்.

Banner
Banner