Banner
முன்பு அடுத்து Page:

உங்கள் சுயமரியாதைக்கு உயிரைக் கொடுக்க தபசு இருங்கள்

உங்கள் சுயமரியாதைக்கு உயிரைக் கொடுக்க தபசு இருங்கள்

- தந்தை பெரியார் - இச்சங்கத்திற்குப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் எனப் பெயரிட்டிருப்பதே பார்ப்பனரல் லாதாராகிய நமது பிற்கால சேமத்தில் மிகுதியும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இன்றைய தினம் வாலிபர்களாயிருக்கிற உங்களில் இருந்துதான் புத்த பகவானும், மகாத்மா காந்தியும், நாயர் பெருமானும், தியாகராயரும் போன்றோர் தோன்ற வேண்டும். இவர்கள் எல்லாம் உங்களைப் போல் வாலிபர்களா யிருந்தவர்கள்தான். எந்தத் தேசமும் எந்தச் சமூகமும் பெரும்பாலும் அவ்வத் தேசத்தில் வாலிபர்களைக் கொண்டுதான் முன் வந்திருக்கிறதே அல்லாமல்....... மேலும்

17 செப்டம்பர் 2014 16:16:04

எவர் பெரியார்...? அவர் வாழ்க...!

எவர் பெரியார்...? அவர் வாழ்க...!

குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!தமிழன் முதலில் உலகினுக் களித்தஅமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளியஎண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துகஏதும் இனியும் செய்யற்க வெனும்விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.நல்குதல் வேள்வி என்பது நலியக்....... மேலும்

17 செப்டம்பர் 2014 16:15:04

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர் அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத்....... மேலும்

17 செப்டம்பர் 2014 16:04:04

நாம் யார்?

நாம் யார்?

சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டிக் கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதியிருக்கின்றார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அம் மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர் திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்பட....... மேலும்

17 செப்டம்பர் 2014 16:04:04

அயோத்தியா காண்டம்

எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி இதைப்பற்றி நாம் அயோத்தியா காண்டம் முதற் கட்டுரையிலே ஆராய்ந்துள்ளோம். இவ் விதமாக இராமன் அடிக்கடி இலக்குவனிடம் தனக்கு அரசாட்சியில் உண்மையில் பற்றில் லாதது போலப் பலதடவை பாசாங்கு செய்திருக்கிறான். அதனாலேயே இலக்குவன், உனக்கு நிலையில்லாத அரசாட்சியில் பற்றில்லையானால் நானே அரசாளு வேன் என்று கூறத்துணிகிறான். இராமன் இதைப் போலவே கைகேயியிடமும் கூறியதை முன் கட்டுரையில் கண்டோம். இராமன் மகா தந்திரசாலி. பின் வருவதையெல்லாம் நன்றாக முன்னாலேயே தேர்ந்தறியும் நுண்ணிய....... மேலும்

16 செப்டம்பர் 2014 17:40:05

பறக்கும் பூ அலிசியா!

பறக்கும் பூ அலிசியா!

ஃப்ளையிங் ஃப்ளவர் என்று சொன்னால் தடகள விளையாட்டுகளில் தெரியாதவர் இருக்க முடியாது. தலையில் மிகப் பெரிய டெய்சி பூவைச் சூடிக்கொண்டு அசுர வேகத்தில் ஓடுவதால் அலிசியாவுக்கு இந்தப் பெயர்! அமெரிக்காவைச் சேர்ந்த இவர், பல்வேறு தடகளப் பிரிவுகளில் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளைச் செய்திருக்கிறார். 7 மாத கர்ப்பிணியான அலிசியா, யாரும் இதுவரை செய்திராத ஒரு துணிச்சலான செயலைக் கடந்த ஜூன் மாதம் செய்தார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கலந்துகொண்டார்........ மேலும்

16 செப்டம்பர் 2014 16:04:04

என்னால் முடிந்தது... உங்களாலும் முடியும்!

என்னால் முடிந்தது... உங்களாலும் முடியும்!

நோபல் பரிசு பெற வேண்டும் என்ற லட்சி யத்துடன் ஆராய்ச்சி செய்தீர்களா? இப்படித் தான் எல்லோரும் கேட்கிறார்கள். நோபல் பரிசுக்காக யாராவது வேலை செய்ய இயலுமா? ஒருவேளை நோபல் பரிசு கிடைக்காவிட்டால் என்னுடைய ஆராய்ச்சி அர்த்த மற்றதாக மாறிவிடுமா? நான் மேற்கொண்ட ஆராய்ச்சி களும் கண்டுபிடிப்புகளும் மனித சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தவிர, எனக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை! இப்படி முழங்கியவர் கெர்ட்ரூடு எலியன் 1918இல்....... மேலும்

16 செப்டம்பர் 2014 16:04:04

காற்றில் கலந்த கூண்டுப் பறவை

காற்றில் கலந்த கூண்டுப் பறவை

இந்த வலிமையான வலி நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் மாயா ஏஞ்சலோ. கவிஞராகவும் எழுத்தாளராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்ட மாயா, கடந்த கால வரலாற்றின்  சாட்சியாக என்றென்றும் கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்! 1928 ஏப்ரல் 4 அன்று பிறந்தார் மாயா. இயற்பெயர் மார்குரைட் ஆன் ஜான்சன். அன்றைய காலகட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட அத்தனை துன்பங்களையும் ஒடுக்கு முறைகளையும் மாயாவின் குடும்பமும் சந்தித்தது. சிறுவயதிலேயே பெற்றோர் பிரிந்துவிட, இங்கும் அங்குமாக அவரது வாழ்க்கை....... மேலும்

16 செப்டம்பர் 2014 16:04:04

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்

திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூடநம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத் திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு: 1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா? 2) அது எது? 3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று? 4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்? 5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன? 6) அதற்கு ஆதாரம் யாது? 7) சைவம் என்பது....... மேலும்

15 செப்டம்பர் 2014 18:20:06

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கர்நாடக போலீசார் தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில், நான் கிருஷ்ணனாம்; நீ கோபிகையாம் என்ற வசனத்தை அடிக்கடி பக்தைகளிடம் சொல்லக் கூடியவர் நித்யானந்தா எனக் குறிப்பிட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை.

டவுட் தனபாலு: இது ஆபாசமா...? அப்போ, கர்ப்பப்பை இருக்கறதால தான், குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வருது; அதனால, பெண்கள் எல்லாம் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு உங்க பகுத்தறிவுப் பகலவன் சொன்னாரே.. அதுக்குப் பேர் என்னவாம்...?

- தினமலர் 19.7.2011

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே அது தினமலர் வாளுக்குத்தான் பொருந்தும். கேட்ட கேள்விக்கு என்ன பதில்? நித்யானந்தா சொன்னது ஆபாசமே இல்லையா?! வக்கிர துர்க்குணமா இல்லையா? பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் கோழைத்தனம் தானே தினமலரின் பதில்?

பிள்ளைப் பெறும் எந்திரம்தான் பெண்கள் என்று கருதப்படும் சமூக அமைப்பில் பெரியார் சொன்ன புரட்சி மொழிதான் கர்ப்பப்பையை எடுங்கள் என்பது. பெண்கள் உரிமை - முன்னேற்றம் - கிளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குக் கருத்து. அது - பெண்ணியல்வாதிகளால் வரவேற்கப்படும் கருத்து.

ஆனால் நித்யானந்தா பக்தைகளைப் பார்த்து நான் கிருஷ்ணன் - நீ கோபிகை! என்று சொன்னது ஆபாசமானது - இரண்டும் ஒன்றல்ல.
கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய காம வெறியாட்டம் தினமலர் கூட்டத்திற்கு லீலைகளாக இருக்கலாம்.

குளத்தில் கோபிகைகள் நீராட, அவர்களின் உடைகளைத் திருடிச் சென்று மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த ஒழுக்கக் கேடன் அவாளின் பார்வையில் உத்தமப் புத்திரக் கடவுளாக இருந்து தொலையட்டும்!

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்கிற சாத்திரத்தைக் கடைபிடிக்கும் பார்ப்பனர்களிடத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

ஆடைகளைத் தருமாறு கோபிகைகள் கெஞ்சிக் கூத்தாட, கரைக்கு வந்து இரு கைகளையும் தலைக்குமேல்  தூக்கிக் கும்பிட்டுக் கேட்டால் தான் கொடுப்பேன் என்ற நிபந்தனையை விதித்து, பெண்களின் முழு நிர்வாணத்தை ரசித்த காலிப் பயல் அவாளின் கண்ணிறைந்த கடவுளாகவே போய்த் தொலையட்டும்!

அதைப் போய் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார் அவர்கள் சிந்தனையோடு முடிச்சுப் போடுவது தினமலரின் சீரழிந்த, சீக்குப் பிடித்த வக்கிரப்புத்தியைத்தான் வெளிப்படுத்தும். இதே தினமலர் வார மலரில் (23.12.2007) சிதம்பரம் தீட்சதர்கள் வீட்டில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைப்பற்றி எழுதியதே - நினைவு இருக்கிறதா?

பல ஆண்டுகளாகவே சிதம்பரம் தீட்சதர்கள் தங்கள் பெண்களுக்கு ஏழு வயது ஆகும் முன்னரே திருமணம் செய்து விடுகின்றனர். மாப்பிள்ளைப் பையனுக்கு 12 வயதுக்குள்தான் இருக்கும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கிடையாது. வீட்டிலேயே வேத பாடங்கள் சொல்லித் தருகின்றனர்.

பால்ய விவாகத்தை 5 நாள் திருமணச் சடங்காக நடத்துகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் புகுந்த வீடு போய் விடுவார்கள். துள்ளித் திரிந்து விளையாடிய பெண், மாட்டுப் பெண்ணாகி வீட்டு வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

பெண்ணுக்கு அய்ந்து வயதில் திருமணமானாலும், மூன்று வயதில் திருமணமானாலும் அன்று முதல் அந்தப் பச்சைக் குழந்தைக்கு மடிசார் புடவை கட்டிவிடுகின்றனர். மாமன் மாமி கால்களில் விழுந்து கும்பிடவும் பழக்குகிறார்கள். 14 வயது ஆகும் திருமணமான ஒரு தீட்சதர் பெண்ணுக்கு மூன்று, நான்கு குழந்தைகள் கூடப் பிறந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர் உலகம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலையோ...

(தினமலர், வாரமலர் டிசம்பர் 23, 2007)

தீட்சதர் வீட்டு 14 வயது பெண் 4 குழந்தைகள் பெறும் நிலைக்கு என்ன பெயர்?

பிள்ளை பெறும் எந்திரமாகப் பெண் இருக்கிறாளே என்று தந்தை பெரியார் சொன்னது உண்மைதானே!

உங்காத்துப் பெண்ணுக்கும் சேர்த்துதானே பெரியார் குரல் கொடுத்தார், அதைக் கொச்சைப் படுத்துகிறாயே!

1928ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு  தினமலர் போல அப்பொழுது இந்து ஏடு முந்திரிக்கெட்டையாகத் துள்ளும். அதுபற்றிய ஒரு குறிப்பு இதோ: (திராவிடன் இதழில் (13.3.1928 பக்கம் 7)

இந்து பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்குக் கல்யாணத்துக்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ. இந்துவே! நீர்  சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே இந்தக் காலத்தில்கூட, 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதாவது விவாகச் சடங்கல்ல, அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால், ஓ, இந்துவா! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால், அந்த 10 அல்லது 12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாகப் பெயர் செய்து மொட்டையடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்கார வைப்பதேன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி போல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் 7).

அந்த இந்துவின் மறு அவதாரமாக தினமலர் திரிநூல் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது.

அன்று இந்து மறுமொழிகூட கூற முடியாமல் திணறியதுபோல், அனேகமாக ஒவ்வொரு நாளும் தினமலர் சவுக்கடி மட்டும் புத்தி கொள்முதல் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை!

பார்ப்பனர்களுக்கு மானமாவது! வெட்கமாவது!!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

அண்மைச் செயல்பாடுகள்