Banner
முன்பு அடுத்து Page:

தினம் ஒரு நெல்லிக்(கனி)காய்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல் வார்கள். இன்றைய விலைவாசியில் மருத்துவரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக் கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு. ''நெல்லிக்காயில் சிறப்பு என்று ஒரு விஷயத்தை....... மேலும்

22 டிசம்பர் 2014 16:34:04

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன. 50. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமானமின்மை மாறும். 51. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 52. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 53........ மேலும்

22 டிசம்பர் 2014 16:31:04

கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்

கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்

கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர்.  இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான  பூச்சிகளும் தென்னையைத் தாக்காது. கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால் தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி  என்று அழைக்கப் படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை....... மேலும்

22 டிசம்பர் 2014 16:30:04

குறளும் பக்தி நூல்களும்

குறளும் பக்தி நூல்களும்

- தந்தை பெரியார் இன்று குறள் மாநாடு என்னும் பேரால் இங்கு கூடியிருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் திராவிடர் கழகங்களுக்கும் அதன் கூட்டங் களுக்கும் எப்படி ஒரு செல்வாக்கும், மக்கள் கூட்டங்களும் வருகிறதோ அதுபோல் குறளுக்கு, குறள் கூட்டங்களுக்கும் செல்வாக்கும், பெரும் கூட்டங்களும் வருகின்றன. இல்லாவிட்டால் இந்தக் காலை நேரத்தில் விளம்பரம் இல்லாத இந்த மாநாட்டிற்கு, அதுவும் நான் இன்று இங்கு வருகிறேன் என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் இத்தனை பேர் இங்கு....... மேலும்

21 டிசம்பர் 2014 15:18:03

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ள தாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர்....... மேலும்

20 டிசம்பர் 2014 17:52:05

பெண் போலீஸ்

பெண் போலீஸ்

இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரீட்சார்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப் படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தி யோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்களென்பதே. போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும் என்று போலீஸ் தலைமை சூப்பிரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-01-1932 தேதி வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது. இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப்....... மேலும்

20 டிசம்பர் 2014 17:50:05

திரு.வல்லத்தரசு

புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக் கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ. பி. எல், அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக் கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்தததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள். ஆனால், அவரை விடுதலை செய்ய....... மேலும்

20 டிசம்பர் 2014 17:49:05

மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனம்

மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனம்

என் வயது 76 தான்! இந்தியக் குடிமக்கள் சராசரியாக 60 வயது வாழ்வதாகத் தகவல்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தரக்கூடியதுதானே? நல்ல பெற்றோர் தம் அன்பான அரவணைப்பில் மகிழ்ச்சியாக வளர்ந்தேன்! பகுத்தறிவு இரத்தத்தில் ஊறிப் பிறந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பாலோடு அருந்தி வளர்ந்தேன்! எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பன்முகப் பகுத் தறிவுக் களஞ்சியம் தந்தை பெரியாரின் அன்பான தலை மையில் வளர்ந்தேன். நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்!....... மேலும்

20 டிசம்பர் 2014 17:43:05

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!

மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது. எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம், உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே....... மேலும்

20 டிசம்பர் 2014 12:32:12

வசம் கெட்டது

குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்மடங்கட்டி வைத்ததினாலே - தம்பிவசம் கெட்டுப் போனது நமது நாடு - புரட்சிக்கவிஞர் கிறித்துவ மயக்கம் கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிறித்தவ மதப் போதகர்களே. 1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா....... மேலும்

19 டிசம்பர் 2014 16:51:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, மே 10- தமிழ்நாடு, கேரளா, கர் நாடகா மாநிலங்களில் தளம் அமைக்க, காட்டு பகுதிகளில் பாதை அமைக்கும் முயற்சியில் நக்சலைட்டுகள் ஈடுபட் டுள்ளனர். தென்மேற்கு மண்டல மாவோயிஸ்ட் பிரிவின் மேற்பார்வை யில் இது நடப்பதாக திடுக்கிடும் தகவல் வெளி யாகியுள்ளது.

வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட் டகாசம் அதிகரித்து வரும் நிலையில், தென் மாநிலங்களுக்கும் அவர்கள் தங்கள் ஆதிக் கத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள் ளனர்.

இது குறித்து மாநிலங் களவையில் மத்திய உள் துறை இணை அமைச் சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் திடீர் தாக்குதல் நடத்த வும், தளம் அமைக்கவும் மாவோயிஸ்டுகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத் துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

தென் மேற்கு மண்டல மாவோ யிஸ்ட் தீவிரவாத அமைப் பின் கண்காணிப்பின் கீழ் அவர்கள் இந்த தாக் குதலை நடத்த திட்ட மிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வனப்பகுதிகளில் தங்கள் முகாம்களை அமைக்க வும் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நக்ச லைட்டுகள் நடமாட் டம் அதிகம் உள்ளது. வயநாட்டில் இருந்து கர் நாடகாவின் மைசூருக்கு வனப்பகுதி வழியே பாதை அமைக்கும் முயற் சிகளிலும் அவர்கள் ஈடு பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் நக்சலைட் டுகள் படிப்படியாக தங் கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்ற னர்.

இது பற்றி கேரளா, கர்நாடகா, தமிழக அர சுகளை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக் கவும், அவர்களின் சதித் திட்டங்களை முறியடிக் கவும் தேவையான நட வடிக்கைகளை எடுக்கும் படி இம்மாநில அரசு கள் கேட்டு கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Banner

அண்மைச் செயல்பாடுகள்