
இந்தியாவின் பாதுகாப்பை அதிகபட்சம் நிர்ணயிக்கும் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கப்பல்படை, எல்லையோர ராணுவப் படை போன்றவற்றில் ஆண் விண்ணப்பதாரர்களை வரும் ஜனவரி 2014 முதல் பயிற்சியளிக்கும் டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி.,-118) பிரிவுக்கு ஆண் பாலினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இந்திய ராணுவத்தின் சார்பாக டி.ஏ.வி.பி., அறிவித் துள்ள இந்தப் பதவியில் சிவில் பிரிவில் 15 இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 இடங்களும், ஆட்டோமொபைல்....... மேலும்
22 மே 2013 15:35:03

இந்தியாவின் பிரசித்தி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் என்.அய்.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முக்கிய இடத்தில் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. தமிழகத்தின் திருச்சியில் இதன் கிளை உள்ளது. புகழ் பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்ப வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.எஸ்.சி., பி.சி.ஏ.,....... மேலும்
22 மே 2013 15:32:03
டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., அடிப் படையில் ராணுவம் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1958இல் டெக்னிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட், டெக்னிகல் டெவலப்மெண்ட் - புரொடக்சன், டிபன்ஸ் சயின்ஸ் ஆர்கனைசேஷன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. முதலில் சிறிய நிறுவனமா கவும், 10 ஆராய்ச்சி மய்யங்களையும் கொண்டதாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு தற்போது பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது........ மேலும்
22 மே 2013 15:30:03

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக் கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந் தைகள் என யாரும் இதற்கு விதி விலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர பிரச்சினைகளில் ஒன்று சிறுநீரகக் கோளாறு. சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டால், வாழ்க் கையின் கடைசி நிமிடம் வரை சிகிச் சைகள் அவசியம். ஆனால், அந்த சிகிச் சைக்கு செலவு செய்ய வசதியில்லாம லேயே பலர் உயிரிழப்பதுதான் மிகப் பெரிய அவலம்.......... மேலும்
21 மே 2013 15:34:03

சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார். 14 வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஜீனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர், இந்த வளர்ச்சியை அவ்வளவு சுலபத்தில் அடையவில்லை என்பது தான் முக்கியம். பிறந்தது படிப்பது எல்லாம் சென்னையில் தான். அப்பா முகுந்தகுமார் எலெக்ட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி........ மேலும்
21 மே 2013 15:32:03
மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர். - தினமலர் செய்தி ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச்....... மேலும்
21 மே 2013 15:15:03

மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக் கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவுகோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக....... மேலும்
20 மே 2013 15:33:03

நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக் கொள்ளும்பூ, வாழைப்பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ள வையே. வாழைப்பூவின் துவர்ப்புச்சுவை நாம் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பை போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக்கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள். துவர்ப்பு இருந்தால் சுவைஇருக்காது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடலுக்கு....... மேலும்
20 மே 2013 15:29:03

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவி யல் பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இப்படி, கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக் கிறது. இருப்பினும் ஒருவர் எத்தனை முறை கொட் டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறு கிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உட லின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி....... மேலும்
20 மே 2013 15:29:03

- தந்தை பெரியார் சிந்தனையாளர் சங்கம் இப்போது தான் ஏற்படுகிறதென்றும், இதற்கு முன் இருந்தவை சிந்தனையற்ற மிருகங்களின் சங்கம் என்பதே பொருளாகும். உலகில் மனிதன் ஒருவனுக்குத் தான் சிந்தனா சக்தி உண்டு. மற்ற எந்த ஜீவனுக்கும் சிந்தனா சக்தி மாற்றிக் கொள்ளத் தெரியாது; மனிதன் ஒருவன் தான் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவும், நலனுக்கேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியான அறிவினைப் பெற்றி ருக்கின்றான். மிருகங்களோடு மிருகங்களாக கண்டதைப் புசித்துக் கொண்டு குகையில் வாழ்ந்து கொண்டிருந்தவன்,....... மேலும்
19 மே 2013 15:20:03
மும்பை, மே 10- மற்ற நகரங்களுடன் ஒப் பிடும்போது, இரவு நேரத்தில் பணியாற்றும் பெண் களுக்கு மும்பை நகரம் பாதுகாப்பானது என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் அய்டி, அய்.டெக்ஸ், பிபிஓ, விமானப் போக்குவரத்து, மருத்துவத்துறை, ஓட்டல் மற்றும் சுற்றுலாத் துறை, ஆடை அலங்காரத் துறை ஆகிய துறைகளில் இரவு நேரங்களில் ஏராளமான பெண்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் பாது காப்பு குறித்து சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டு மல்ல, அவர்களின் குடும்பத்தினரும் சமூக ஆர்வ லர்களும் பெரிதும் கவலைப்படுகிறார்கள்.
இது குறித்து அசோசம் என்ற சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் மற்ற நகரங் களுடன் ஒப்பிடும் போது இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மும்பை நகரம் பாதுகாப்பானது என்று தெரிய வந்துள்ளது. இரவில் பணிபுரியும் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மும்பையைச் சேர்ந்த 26 சதவிகித பெண்களே தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். பெங்க ளூருவில் 48 சதவிகிதப் பெண்கள் அச்சம் தெரிவித் தனர். டில்லியில் 34 சதவிகிதம், சென்னையில் 28 சதவிகிதம் பெண்களும் அச்சம் தெரிவித்தனர்.
இரவில் சிறிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களில் 50 சதவிகிதமும், நடுத்தர நிறுவனங் களில் வேலை பார்க்கும் பெண்களில் 28 சதவிகித மும், பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களில் 23 சதவிகிதமும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இரவு நேரத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் அந்த வேலையை விரும்புவதாகவும் பல பெண்கள் தெரிவித்தனர். தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் தங்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பல்வேறு பொருட்களுக்கு வரிச்சலுகைகள்!
புதுடில்லி, மே 10- பல்வேறு பொருட்களுக்கு மத்திய நிதி அமைச் சர் பிரணாப் முகர்ஜி வரிச்சலு கைகளை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2012-2013ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சர்வதேச அளவில் கச்சா எண் ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது கவலை அளிக்கிறது. மத்திய அரசு, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால், நம்மால் செய்யத் தக்க விதத்தில் இதற்கு வழிவகை காண முடியும். எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச் சினைக்கு ஒரு தீர்வு காண முடியும்.
விலை உயர்வின் ஒரு பகுதியை பொதுமக்கள் மீதுதான் ஏற்ற வேண்டி உள்ளது. ஒரு பகுதியை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு பகுதி மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் இதற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள்.
வணிகப்பயன்பாட்டு வாகனங் களின் அடிச்சட்டங்கள் (சேசிஸ்), பால்பாயிண்ட் பேனா மை, பாலி யஸ்டர் இழைகள், குறிப்பிட்ட சில காலணியின் பாகங்கள் ஆகியவற் றுக்கும் மத்திய உற்பத்தி வரி சலுகை வழங்கப்படும்.
சுங்க வரியைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி மின்திட்டத்தை உருவாக் குவதற்கு தேவையான பல்புகள், பொருட்கள் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். சோலார் பேட்டரிகள் உருவாக்கத் தேவை யான சில பொருட்களுக்கும் சுங்க வரிச்சலுகை உண்டு.
இந்த மாற்றங்களுக்கான அறி விக்கை விரைவில் வெளியிடப்படும். இந்த சபையிலும் வைக்கப்படும். இவற்றுடன் இன்னும் சில சின்னச் சின்ன மாற்றங்களும் வரும். இது குறித்த தகவல்களும் அறிவிக்கையில் இடம் பெறும். இவ்வாறு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
நிதி அமைச்சர் பதில் அளித்த தைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தில் நிதி மசோதா நிறைவேறியது.