
சென்னை, மே 24- கேன் குடிநீர் தயாரிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 309 நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில் கேன் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என்ற புகாரின் பேரில், அனைத்து கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி மூன்று மாவட்டங்களில் 92 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதை கண்டித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர்....... மேலும்
24 மே 2013 16:46:04

சென்னை, மே 24- உயர் சிகிச்சை தேவைப் படும் நோயாளிகளை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப் பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மருத்துவர்களின் பரிந் துரையின் பேரில் கொண்டு செல்வது கடந்த ஆறு மாதத்தில் 4 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 108 அவசர ஆம்புலன்ஸ் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னையில் முதல் முதலாக 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் ஆரம்பிக்கப்பட் டது. தற்போது 630....... மேலும்
24 மே 2013 16:38:04

எல்.ஜி.நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 24- 1975ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெருக்கடி காலத்தில் என்னை மிசாவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, சிறையில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப் படுத்தியவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட....... மேலும்
24 மே 2013 16:34:04

இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 23- 1975ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam....... மேலும்
23 மே 2013 16:24:04

கோவை, மே 23-கோவை மாங்கரை, சோமையம்பாளையம், சோமையனூர், காளையனூர், தடாகம் ரோடு பகுதியில் 22 யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூன்று குழுவாக திரியும் இந்த யானைகள், வீடுகளை இடித்து, கதவை உடைத்து அரிசி சாப்பிடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் ரோட்டில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கல் சூளை வளாகத்திற்குள் யானைகள் புகுவதால் செங்கல் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகம் ரோடு அனுவாவி....... மேலும்
23 மே 2013 15:00:03

கேள்வி: பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஏடு களில் வந்த செய்தியைப் படித்தீர்களா? கலைஞர்: படித்தேன்; குறிப்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையையே படித்தேன். தலைப்பே, வாழ்த்துரை களை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்று வெளியிட் டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த பகுதி வருமாறு:- நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர், ஆறு மாதங் களுக்கு சஸ்பென்ட் செய் யப்பட்டனர். தி.மு.க........ மேலும்
23 மே 2013 14:51:02

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்
22 மே 2013 15:32:03

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்
22 மே 2013 15:28:03

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்
22 மே 2013 15:26:03

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்
22 மே 2013 15:22:03

கோவை, ஜூன் 30- தமிழக சிறைகளில் செல்போன்களின் செயல்பாடுகளை செயல் இழக்க செய்யும் ஜாமர்கருவி பொருத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டது என்று தமிழக கூடுதல் காவல்துறை டி.ஜி.பி.டோக்ரா கூறினார்.
கோவை சிறைக்குள் பார்சல் வீசப்பட்டது மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் சமீபத்தில் நடந்தேறியது. இதைத்தொடர்ந்து தமிழகக் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி.யும், சிறைத்துறை தலைவருமான எஸ்.கே.டோக்ரா கடந்த 2 நாள்களாக கோவை சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நேற்று காலையில் சிறை மைதானத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் சென்று அங்குள்ள சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களை ஆய்வு செய்துள்ளேன். பிற மாநில சிறைகளை ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள சிறைகள் கடந்த ஓராண்டு காலமாக மிகவும் அமைதியாகவும், எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் 58 பொதுத்தொலைபேசிகள் அமைக்க எல்காட் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுத்தொலைப்பேசி அமைக்கப்பட்ட பின்னர் கைதிகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு `ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். அதன் பின்னர் ஒரு கைதி ஒரு மாதத்திற்கு 30 நிமிடங்கள் வரை பேசிக் கொள்ளலாம். கைதிகள் யாருடன் பேச விரும்புகிறார்களோ அவர்களில் 3 பேர் பற்றிய விவரங்களை முன்கூட்டியே சிறைத்துறை நிருவாகத்திடம் வழங்க வேண்டும். இந்தத் திட்டம் அடுத்த மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வந்துவிடும்.
தமிழக சிறைகளில் செல்போன்களின் செயல்பாடுகளை செயல் இழக்க செய்யும் ஜாமர்கருவி பொருத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டது. அதற்காக வேறு மாநில சிறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள விவரம் சேகரிக்கப்பட்டது. அப்போது ஜாமர் கருவியால் சிறையின் அனைத்துப் பகுதிகளிலும் செல்போன்களின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த முடியவில்லை என தெரியவந்தது. எனவே சிறைகளில் ஜாமர் கருவி பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
அதே போல் சி.சி.டி.வி. கேமரா பொருத்தியும் கைதிகளை கண்காணிப்பது முடியாத ஒன்று. அவர்களுக்கு என்று சில உரிமைகள் உள்ளன. அதில் தலையிட முடியாது. அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
கோவை சிறைக்குள் பார்சல் தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வார்டர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.
சிறைக்குள் வீசப்பட்ட பார்சலை எடுத்துக் கொண்டு ஓடிய குண்டு வெடிப்பு கைதிகள் ஹக்கீம், அன்வர் மற்றும் இப்ராகிம் ஆகிய 3 கைதிகளும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
கோவை சிறையில் தண்டனைக் கைதிகளும், விசாரணைக் கைதிகளும் ஒன்று சேராமல் இருக்க தேவையான கட்டமைப்பு மற்றும் நிருவாக மாற்றங்கள் செய்யப்படும். இந்த மாற்ற அமைப்பு ஜூலை இறுதிக்குள் நிறைவேற்றப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.