Banner
முன்பு அடுத்து Page:

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர்கள் தேர்வு ரத்து

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர்கள் தேர்வு ரத்து

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர்கள் தேர்வு ரத்து புதுடில்லி, அக்.5- மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளி களில், பிரைமரி ஆசிரி யர்கள் (பி.ஆர்.டி.), பிரைமரி ஆசிரியர்கள் (இசை) ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் களை தேர்வு செய்வதற்காக நேற்று எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த தேர்வின் கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது. கேள்வித் தாளை ரகசியமாக படம் பிடித்து, வாட்ஸ் அப்பில்....... மேலும்

05 அக்டோபர் 2015 16:48:04

கிராமப் பகுதி மாணவர்களுக்கும்ஆங்கிலத்தில் பேச பயிற்சி ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்

கிராமப் பகுதி மாணவர்களுக்கும்ஆங்கிலத்தில் பேச பயிற்சி ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்

கிராமப் பகுதி மாணவர்களுக்கும்ஆங்கிலத்தில் பேச பயிற்சி ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்   சென்னை,  அக்.5- கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற் கான பயிற்சிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோ சய்யா வலியுறுத்தினார். கற்பித்தலின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்கிற திட்டத்தை சென் னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது: இன்றைய சூழலில் ஏராளமான இளைஞர்கள் ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு திறன்....... மேலும்

05 அக்டோபர் 2015 16:47:04

திராவிடர் இயக்கத்தை வீழ்த்த முடியாது :திமுக தலைவர் கலைஞர்

திராவிடர் இயக்கத்தை வீழ்த்த முடியாது :திமுக தலைவர் கலைஞர்

சென்னை, அக்.5 திராவிடர் இயக்கத்தை யாரும் வீழ்த்த முடியாது என்றார் திமுக தலைவர் கலைஞர். மதிமுகவிலிருந்து விலகி பலரும் திமுகவில் இணைந்த விழாவில் (4.10.2015) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: இது நம்முடைய இயக்கம், நம்முடைய தமிழர் களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம், அந்த இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட நேற்று வந்தவர் களையும் வாழ்த்துகிறேன், இன்றைக்கு வந்து சேர்ந்திருப்பவர்களையும், புதிதாக வந்து சேர்ந்தவர்கள் என்று எண்ணாமல், எப்போதும் இங்கே....... மேலும்

05 அக்டோபர் 2015 15:43:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 22 - மத்தியில் 3 ஆண்டு காலம் ஆட்சி செய்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பற்றி யும்,தமிழ்நாட்டில் ஓராண்டு நிறைவுசெய்த அ.தி.மு.க. ஆட்சி குறித் தும் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

செய்தியாளர் :- மத்திய அரசு இன்றோடு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றுசொல்லப்படு கிறதே,அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கலைஞர் :- மத்திய அரசின் சார்பில் தமி ழகத் திலே நிறைவேற்றப் படும் 15 நிலைத்த திட் டங்களுக்காக 2005-க்கும் 2010-க்கும் இடைப் பட்ட ஐந்தாண்டுகளில் தமிழகத்திற்காக மத்திய அரசு 36,688 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி யிருக்கிறது.மேலும் 2010 முதல் 2015 ஆம்  ஆண்டு களுக்காக 83,432 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், ஒதுக்க வும் உள்ளது என்ற நிலையில் மத்திய அரசி னால் தமிழக அரசு வஞ் சிக்கப்படுகிறது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

செய்தியாளர் :- குடியரசுத் தலைவர் வேட் பாளரைத் தேர்வு செய்வதற்காக 23 ஆம் தேதி டெல்லியில் நடை பெறும்அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு செல்கிறீர்களா?

கலைஞர் :- அதைப் பற்றி விவரம் தெரிய வில்லை.

செய்தியாளர் :- குடியரசுத் தலைவர் தேர் தலில் உங்கள் வேட்பா ளர் யார்?

கலைஞர் :- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் தி.மு.கழகம் இடம் பெற்றுள்ளது. எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட் பாளராக யார் நிறுத்தப் படுகிறாரோ, அவரை நாங்கள் ஆதரிப்போம்.

செய்தியாளர் :- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. உங்கள் ஆதர வைக் கேட்டால் கொடுப் பீர்களா?

கலைஞர் :- கேட் டால் பார்த்துக் கொள்ள லாம்.

செய்தியாளர் :- கர் நாடகத்தில் பெண்ணை யாற்றில் அணைக்கட் டுவது குறித்து காவேரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயல லிதா பிரதமருக்குக் கடி தம் எழுதியிருக் கிறாரே?

கலைஞர் :- காவேரி ஆணையம் அமைந்த போது, அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று இதே ஜெயலலி தாதான்கூறினார். காவேரி ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத் தையே இவர் தவிர்த்தார். ஆணையமே வேண் டாம் என்றார். இப் போது ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார். இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் முரணாகச் செயல்படு கிறார் என்றபோதிலும், காவேரி பிரச்சினையில் தமிழகத்தின்உரி மையைவிட்டுக் கொடுக்கநாங்கள் தயாராக இல்லை.
தமிழகத்தில் இப் போது நடைபெறுவது

``டம்பாச்சாரி ஆட்சி

செய்தியாளர் :- அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு நிறைவு என்ற பெயரால் பல கோடி ரூபாய் செலவில் விளம் பரங்கள் அரசு சார்பில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்களே?

கலைஞர் :- அந்தக் காலத்தில் ``டம்பாச்சாரி என்று ஒரு திரைப்படம் வந்தது. அதைப்போல இப்போது தமிழகத்தில் நடைபெறுவது ``டம் பாச் சாரி ஆட்சி.
-இவ்வாறு  கலைஞர் அவர்கள் பேட்டியளித் தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#1 tamilvanan 2012-05-24 02:34
மூன்று ஆண்டு நிறைவடைந்த மறுநாளே பெட்ரோல் விலையை 7 . 50 உயர்த்தி இருக்கிறதே மத்திய அரசு. இதை பற்றி ஒன்றும் கூறவில்லையா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்