
சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் -....... மேலும்
19 மே 2013 14:51:02

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார். விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்....... மேலும்
19 மே 2013 14:05:02

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 9 அணிகளில் உள்ள வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட் டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டுள்ளது....... மேலும்
19 மே 2013 13:51:01

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்
18 மே 2013 18:22:06

சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்
18 மே 2013 17:57:05

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்
17 மே 2013 17:22:05

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்
17 மே 2013 17:13:05

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்
17 மே 2013 16:17:04

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்
17 மே 2013 15:20:03

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்
16 மே 2013 16:56:04

சென்னை, மே 21- ரூ.1.25 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்துவிட்டதாக திரும்ப திரும்ப சொல்வது தவறு என்று கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தத்தில் கடுமையான இழப்பை எய்தியுள்ளள'' என்று தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கோடு நடத்தப்படுவதல்ல.
அ.தி.மு.க. ஆட்சியிலேயும் எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தோடு இயங்கவில்லை. கட்டணங்களை கடுமையாக உயர்த்தி- விலையை தாறுமாறாக அதிகரித்து மக்களைக் கசக்கிப்பிழிந்தால், பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தோடு நடத்திட முடியும். ஆனால் அது ஒரு மக்கள் நலச் சர்க்காரின் இலக்கணமல்ல! யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டணங்களை உயர்த்தினால் லாபம் ஏற்படத்தான் செய்யும்.
முதலமைச்சர் ஜெயலலிதா தனது 20.11.2011 நாளிட்ட அறிக்கையில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கக் காரணம், கடந்தகால தி.மு.க. ஆட்சிதான் என்று சொல்லியிருக்கிறார். அதை அப்படியே காப்பி அடித்துத்தான், தற்போது நிதித்துறை அமைச்சரும் கூறியிருக்கிறார்.
சில உதாரணங்களைக் கூறுகிறேன்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சிப்காட்.
2001-2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 11.76 கோடி ரூபாய் இழப்பு.
2002-2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 29.15 கோடி ரூபாய் இழப்பு.
2006-2007 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி காலத்தில் 56.69 கோடி ரூபாய் லாபம்.
2007-2008 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி காலத்தில் 96.54 கோடி ரூபாய் லாபம்.
2008-2009 ஆம் ஆண்டு 90.38 கோடி ரூபாய் லாபம்.
2009-2010 ஆம் ஆண்டு, தணிக்கைக்கு முன்பு 93.11 கோடி ரூபாய் லாபம்.
தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.கழக அரசு ஏற்றி வைத்து விட்டதாக திரும்பத் திரும்பச் சொல்வது தவறு.
31.3.2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த அய்ந்தாண்டு காலத்திற்கு பிறகு; தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும். இது ஜெயலலிதா, தி.மு.கழக அரசின் மீது ஏற்றி வைத்து விட்டுச் சென்ற கடன் சுமை.
அந்த கடன் சுமையைக் குறைக்க தி.மு.கழக அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள்ளாகவே சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரிகளைச் சுமத்திவிட்டு, பால் விலையை உயர்த்திவிட்டு, பேருந்து கட்டணத்தை அதிகரித்துவிட்டு, மின் கட்டணத்தை ஏற்றி விட்டு கடந்த கால அரசைக் குறை கூறுவதில் நியாயம் என்ன இருக்கிறது?
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது நீண்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை இருந்தது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் 536.54 கோடி ரூபாய் அளவுக்கு பெரு முயற்சி செய்து வருவாய் உபரியாக ஆக்கியதைப் போலவும் சொல்லியிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. பதவியேற்பதற்கு முன்பு 5.2.2011 அன்று தி.மு.கழக அரசின் சார்பாக இடைக்கால நிதி நிலை அறிக்கை பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த நிதி நிலை அறிக்கையின் 2011-2012 ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய் பற்றாக்குறை நீங்கி ரூபாய் 439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கழகம் ஆட்சியில் இருந்தபோதே தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலேயே 439 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் உபரி இருக்கக் கூடிய அளவிற்கு நிலைமை இருந்தது என்பதை அமைச்சர் பன்னீர் செல்வம் வசதியாக மறைத்து விட்டு, கழக ஆட்சியிலே வருவாய் பற்றாக்குறையாகத்தான் இருந்ததைப் போலவும், அ.தி.மு.க. ஆட்சியிலேதான் வருவாய் உபரி, அவர்களின் திறமையினால் தான் செய்யப்பட்டதைப் போலவும் பீற்றிக்கொண்டிருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!
பன்னீர்செல்வம் அண்மையில் படித்த நிதிநிலை அறிக்கையில்,
2012-2013 ஆம் ஆண்டின் இறுதியில் மாநிலத்தின் மொத்தக்கடன் 1,35,060.47 கோடி ரூபாயாக இருக்கும். எனினும், இது பதின்மூன்றாவது நிதிக்குழு அனுமதித்துள்ள அளவான, மாநில உற்பத்தி மதிப்பில் கடனின் விகிதாச்சார அளவு 24.8 சதவிகிதம் என்பதை விட குறைவாக, 19.6 சதவிகித அளவிலேயே இருக்கும்'' என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தே; தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிக்குறியீட்டில் எந்தத் தவறையும் கழக ஆட்சி செய்துவிடவில்லை என்பதை அறியலாம். ஆனாலும் தி.மு.கழக அரசு கடன் சுமையை வைத்துவிட்டதாக அமைச்சர் தனது அறிக்கையிலே சொல்லி இருக்கிறார்.
கழக ஆட்சி வாங்கி வைத்துவிட்டுப்போன கடன் சுமையை எல்லாம் தாங்கள் குறைக்க வேண்டியதாக உள்ளது என்று சொல்கிறார்களே,
ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறதே; எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்?
கடனை அடைக்க வேண்டாம், வாங்காமலாவது இருந்தார்களா? நிதிநிலை அறிக்கையிலேயே 12,873.81 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடப்பாண்டில் கடன் பெற்றிருப்பதாக பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதுமாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப்போகும் கடன் அளவை 18,387.47 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த லட்சணத்தில்தான் ஆட்சிக்கு வந்தவுடன்- 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு அய்ந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது அ.தி.மு.க. அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதையே மறந்து விட்டு, கழக அரசு கடன் சுமையை வைத்து விட்டுப்போனதாக திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள். நிதி அமைச்சர் தணிக்கை துறை அறிக்கையில் காணப்பட்ட சில புள்ளி விவரங்களை முன் வைத்து கழக அரசின் மீது சேறுவாரி வீச முற்படுகிறார்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.