முன்பு அடுத்து Page:

பொள்ளாச்சி அவலம்: மூடி மறைக்க அரசு முயலக் கூடாது தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 23    பொள்ளாச்சி அவலத்தை மூடி மறைக்கும் வேலையில் அரசு ஈடுபடக் கூடாது - குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். நேற்று (22.3.2019) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவ்விவரம் வருமாறு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைபற்றி... செய்தியாளர்: பொள்ளாச்சி....... மேலும்

23 மார்ச் 2019 16:36:04

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் இன்று சனிக்கிழமை (மார்ச் 23)  கடைப்பிடிக்கப்படுகிறது. இந் தாண்டு  சூரியன், பூமி மற்றும் வானிலை எனும்  கருப் பொருள் மய்யமாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப் படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கிய மானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத் துழைப்பும் தேவைப்படுகிறது. ஒரு  நாட்டின்....... மேலும்

23 மார்ச் 2019 15:15:03

திருப்பரங்குன்றம் தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 23  திருப்பரங்குன்றம் இடைத்தேர் தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது எனவும், அவர் வெற்றி பெற் றது செல்லாது எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப் பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற் றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட....... மேலும்

23 மார்ச் 2019 15:00:03

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல ஆட்சிக்கு வந்தால் சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் …

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல ஆட்சிக்கு வந்தால் சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்படும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சேலம், மார்ச் 23 திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல ஆட் சிக்கு வந்தால் சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் ரத்து செய்யப் படும் என்றார்  திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின். சேலம் மக்களவைத் தொகுதி வேட் பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து, சேலம் &கோட்டை மைதானத் தில் 22.3.2019 அன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:  திருவா ரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி மூன்றாவது நாளாக,....... மேலும்

23 மார்ச் 2019 15:00:03

ஏழைகளுக்கு சிறப்பு உதவி நிதி ரூ.2,000 வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை, மார்ச் 22  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு உத வித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உயர்நீதிமன்றத் தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்கப்படும்....... மேலும்

22 மார்ச் 2019 14:55:02

தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு

சென்னை, மார்ச் 22  தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு  கண்டறி யப்பட்டுள்ளதாக தமிழக சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. அதன் பயனாக, காசநோய் பாதிப்பு குறித்த தொடர் விழிப் புணர்வு பிரசாரம் மேற்கொள்....... மேலும்

22 மார்ச் 2019 14:55:02

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி மனித உரிமை ஆணையம் தாக்கீது

சென்னை, மார்ச் 22- பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட் டது. ஆவடியை அடுத்த அயப் பாக்கத்தைச் சேர்ந்த தியாக ராஜனின் மனைவி பொம்மி. இவர், பிரசவத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் கிராமத்திலுள்ள தனது பெற் றோர் வீட்டுக்குச் சென்றார். பொம்மிக்கு புதன்கிழமை ....... மேலும்

22 மார்ச் 2019 14:45:02

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

ராமநாதபுரம், மார்ச் 22 நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ள தாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டி யிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆத ரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ....... மேலும்

22 மார்ச் 2019 14:08:02

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: வைகோ பேட்டி

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின்  பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: வைகோ பேட்டி

சென்னை, மார்ச் 22- இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடி யில் இருந்து நாட்டை மீட் போம். இந்த மாபெரும் வர லாற்றுக் கடமை ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு இருக் கின்றது. அந்தக் கடமையை நிறை வேற்றுவதற்கும், நாட்டின் மதச்சார்பற்ற தத்துவத்தை நிலை நிறுத்தவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்தில் முனைந்து செயல் ஆற்றவும், நாடாளுமன் றத்திலும் தீவிர பணியாற்றவும் உறுதி மேற்கொள்கின்றது என 20.3.2019 அன்று மதிமுக....... மேலும்

22 மார்ச் 2019 13:52:01

மத்திய பா.ஜ.க. ஆட்சி - மாநில அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தேர்தலை மக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த வே…

மத்திய பா.ஜ.க. ஆட்சி - மாநில அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தேர்தலை மக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

திருவாரூர், மார்ச் 21 நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மூலம் மோடி ஆட்சி மட்டுமல்ல, அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் நிலை வரும். எனவே மக்கள் இந்த தேர்தலை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கூறினார். திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற....... மேலும்

21 மார்ச் 2019 16:14:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில்: தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

நாகர்கோவில், மார்ச் 14 நாகர்கோவிலில்  நடைபெற்ற மாபெரும்   தேர்தல்   பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்து' - ராம்' என்ற இரு வார்த்தை களைப் பயன்படுத்தியே வெற்றி பெற்ற மோடி, இன்றைக்கு  இந்து'ராமை கண்டு  மிரளுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரப்  பொதுக் கூட்டத்தில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்    அவர்கள்  ஆற்றிய  உரை வருமாறு:

இந்த  பொதுக்கூட்டத்திற்கு  வருகை  தந்து   சிறப்பித்துக்   கொண்டிருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய  தலைவர்  பெருமதிப்பிற்குரிய ராகுல்  காந்தி  அவர்களே,  திரா விடர் கழகத்தின்  தலைவர்  அய்யா  ஆசிரியர் அவர்களே,  மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  பொதுச் செயலாளர் அண்ணன்   வைகோ   அவர்களே, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  இயக்கத்தினுடைய  மாநிலச்  செயலாளர்  பால கிருஷ்ணன்  அவர்களே,  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியினுடைய  மாநிலச்  செயலாளர் முத்தரசன் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின்  தலைவர்  அன்பிற்குரிய  சகோதரர்  தொல்.  திருமாவளவன் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தினுடைய  தலைவர்  பேராசிரியர் காதர்  மொகிதீன்  அவர்களே,  மனித  நேயமக்கள்     கட்சியினுடைய     தலைவர் ஜவாஹிருல்லா   அவர்களே,   இந்திய ஜனநாயகக்  கட்சியினு டைய  தலைவர் பாரிவேந்தர்  அவர்களே  மற்றும்    மேடையில்    வீற்றிருக்கக்கூடிய    காங்கிரஸ் பேரியக்கத்தின்  முன்னோடிகளே,  தோழமைக்  கட்சிகளைச்  சார்ந்திருக்கக்  கூடிய தலைவர்களே,    பெரியோர்களே,    தாய்மார்களே,  என்  உயிரோடு  கலந்திருக்க கூடிய  தலைவர்  கலைஞர்  அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே,  உங்கள்  அனைவருக்கும்  என்னுடைய அன்பான வணக்கம்!

இமயம்   முதல்   குமரி   வரை   பரந்து விரிந்திருக்கக்கூடிய  இந்தியத்  துணைக்கண்டத்தினுடைய  அடிமுனையில்  கூடி இருக்கின்றோம்.  இந்திய  நாடு  தனக்கான ஒரு  புதிய  பிரதமரைத்  தேர்வு  செய்யக்கூடிய  ஜனநாயகக்  கடமை  இன்னும்  சில வாரங்களில்  நடைபெறவிருக்கின்றது. இந்தியா  யாரைப்  பிரதமராகத்  தேர்வு செய்யவிருக்கின் றதோ - அந்த இந்தியா வின்  இளம்  பிரதமர்  ராகுல்  அவர்கள் இந்த  மேடைக்கு  வந்திருக்கின்றார்கள்.

இன்னும் சில வாரங்களில் இந்தியப் பிரதமராக ராகுல்காந்தி!

இந்தியாவின்  பிரதமராக  ஆகவிருக்கும்  ராகுல்  அவர்களே,  திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  சார்பில்  மட்டுமல்ல;கூட்டணிக்  கட்சிகளின்  சார்பில்  மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பில் உங்களை  நான்  வருக!  வருக!  என வரவேற்க   விரும்புகின்றேன்.   உறுதியோடு  சொல்லுகின்றேன்,  இன்னும்  சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்தி அவர்கள் தான். உங்கள் கைகளில் இந்திய  தேசம்  பாதுகாப்பானதாக,  வளம் உள்ளதாக,  மதச்சார்பற்றதாக,  ஆரோக்கியமானதுமாக      இருக்கும்      என்ற நம்பிக்கை      எங்களுக்கெல்லாம் இருக்கிறது. அது  வெறும்  நம்பிக்கை  மட்டுமல்ல. எதிர்பார்ப்பும் ஆசையும் அதுவாகத் தான் இருக்கின்றது.  ஆசை  மட்டுமல்ல,  அது தான்  உண்மையாக  ஏற்படவிருக்கும் வரலாறு  என்பதை  இங்கு  நான்  பதிவு செய்ய  விரும்புகின்றேன்.  அதனால்தான்யாரும்  சொல்வதற்கு  முன்னால்,  நான் துணிச்சலோடு  சொன்னேன்,  அடுத்த பிரதமர் ராகுல் தான்! ராகுல் தான்! என்று.

இளந்தலைவர்  ராகுல்காந்தி  அவர்களே!

ஒளிமயமான  இந்தியாவை  தருக!

தனிப்பட்ட    ஸ்டாலினாக    அல்ல, 5  முறை  தமிழகத்தை  ஆண்ட  தி.மு.கழகத்தின்   தலைவராகவும்   இருந்த தலைவர்   கலைஞர்   அவர்களுடைய  மகனாக  நான்  அறிவித்திருக் கின்றேன். நேருவின்  மகளே  வருக!  நிலையான ஆட்சி  தருக!'' என்று  1980 இல்  அன்னை இந்திரா    காந்தி    அவர்களை    முன் மொழிந்த  தலைவர்  கலைஞர்  அவர்களின்    மகனாக நான்  சொல்லியிருக்கின்றேன்.

இந்திராவின் மருமகளே  வருக! இந்தியாவின் திருமகளே வெல்க! ''  என்று 2004 ஆம் ஆண்டு அன்னை சோனியாகாந்தியை            முன் மொழிந்த தலைவர் கலைஞரின்    மகனாக நான்          சொல் கிறேன்.  இளந்தலைவர்  ராகுல்  காந்தி அவர்களே வருக! ஒளிமயமான இந்தியாவைத்  தருக!''  என்று  நான்  உங்களை அழைக்கின்றேன். ஒளிமயமான இந்தியாவைத்  தாருங்கள்  என்று  சொல்லுகின்றபோது,  இந்தியா  இப்போது  இருள்மய மானதாக   இருக்கிறது   என்று   நமக்கெல்லாம்  நன்றாகத்  தெரி கின்றது.

நரேந்திர  மோடி  அவர்கள்  புதுப்புது உடைகளை  உடுத்திக் கொண்டு,  விதவிதமான    தொப்பிகளை    போட்டுக் கொண்டு  நாடு  நாடாக  சுற்றிக்  கொண்டிருக்கின்றார்.   அவர்தான் ஒளிர்ந்து கொண்டு  ஒளிமயமாக  மாறிக்  கொண்டிருக்கின்றாரே  தவிர,  இந்தியா  ஒளிமயமானதாக  இன்னமும்  மாறிடவில்லை. வளர்ச்சி - வளர்ச்சி - வளர்ச்சி என்று சொல்லி  மக்களை  ஏமாற்றி  ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால், இன்று இருக்கக் கூடிய  நிலை  என்னவென்று  கேட்டால், தளர்ச்சி  -  தளர்ச்சி  -  தளர்ச்சி  ஆகிய இந்த   மூன்றைத்தான்   இந்தியாவில் பார்க்கிறோம்.

நாட்டின்   பொருளாதார   வளர்ச்சி விகிதம்  என்பது  3 ஆவது  நிதியாண்டில்  6.6 சதவிகிதம்  குறைந்திருக்கின்றது.  மோடி வந்தால்    புதிய    திட்டங்கள்    வரும், நிறுவனங்கள்  திறக்கப்படும்,  வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இளைஞர்கள் நம்பினார்கள்.  ஆனால்  இருக்கக்கூடிய நிலை,  புதிய  திட்டங் களும்  வர வில்லை; புதிய    நிறுவனங்களும்    திறக்கப்படவில்லை;  புதிய  வேலை  வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை.

பிரதமர்  ஆவதற்கு  முன்னால்  அவர் தொடர்ந்து      சொன் னது,      கருப்புப்பணத்தை  ஒழிப்பதுதான்  என்னுடைய முதல்  வேலை  என்று!  இந்தியாவுக்கு வெளியே  90  லட்சம்  கோடி  ரூபாய் கருப்புப்பணம்  இருக்கிறது.  அதை  மீட்டு இந்தியாவில் இருக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும்  வங்கிகளில்  15  லட்சம் ரூபாய்  டெபாசிட்  செய்வேன்  என்று சொன்னார். தந்திருக்கிறாரா? 15 லட்சம் வேண்டாம்.  15  ஆயிரம்  ரூபாயாவது? நான்    இன்னும்    கேட்கின்றேன்.    15 ரூபாயாவது   இன்றைக்கு   டெபாசிட் செய்யப்பட்டிருக்கின்றதா?  இல்லை.

'துக்ளக்' தர்பார் நடத்தும் மோடி!

கருப்புப்பணம்  எந்த  நாட்டில்  எந்த வங்கியில்,  எவ்வளவு  இருக்கிறது  என்று மோடி  அவர்கள்  விளக்கியிருக்கின்றாரா?  இல்லை.  கண்கட்டி  வித்தைக்காரனைப்போல  கறுப்புப்  பணம்  இருக்கின்றது, இருக்கின்றது என்று பூச்சாண்டி காட்டினாரே   தவிர   அவர்   கறுப்புப்பணத்தை மீட்கவில்லை. எங்கே, கறுப்புப் பணம் என்று கேட்டதும், என்ன செய்தார் என்றால்,  நாட்டில்  உள்ள  நல்ல  பணம் எல்லாவற்றையும்  ஒழித்தார்.

ஒரு   திருடனைக்   கண்டு   பிடிக்க வேண்டுமென்று  சொன் னால்,  ஊரில் உள்ள  அனைவரையும்  கைது  செய்து சிறையில்  அடைத்து  வைத்து  அதில் இருந்து  திருடனைக்  கண்டுபிடிக்கக் கூடிய அதிபுத்திசாலி தான் இன்றைக்குப் பிரதமராக   இருக்கக்   கூடிய   மோடி அவர்கள்,  இப்படி  ஒரு  துக்ளக்  தர்பாரை இன்றைக்கு   நடத்திக்   கொண்டிருக்கின்றார்.

ஊழலே  இல்லாத  ஆட்சியைத்  தருவேன் என்று சொன் னார் மோடி அவர்கள். ரஃபேல்   ஊழல்   ஒன்று   போதாதா? ரபேல் ஊழல் அம்பலம் ஆனதும் என்ன சொன்னார்கள்? ஊழலே நடக்கவில்லை, பொய் சொல்லு கிறார்கள் என்றார்கள். 41 சதவிகிதம் அளவுக்கு விலையைக் கூட்டி வாங்கப்பட்டுள்ளது  என்பதை  ஆதாரத்துடன்  அம்பலப்படுத்தினார்  இந்து  ராம் அவர்கள்.

ஆவணங்கள்  அனைத்தையும்  திருடி விட்டார்கள்  என்று  சொல்கிறார்கள். இதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். ஆனால், இந்து ராம் மிரட்டலுக்குப் பயப்படவில்லை.  அதற்காக  நான்  திராவிட முன்னேற்றக்     கழகத்தின்     சார்பில் என்னுடைய   நெஞ்சார்ந்த   பாராட்டுகளைத்  தெரிவித்துக்  கொள்கின்றேன். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் - நான் உறுதியோடு சொல்லு கின்றேன்,       தி.மு.க மட்டுமல்ல;  இங்கு இருக்கக்கூடிய அனைத் துக்  கட்சிகளும்   இந்து   ராம்   அவர்களுக்குப் பக்கபலமாக  இருப்போம்,  கவலைப்பட வேண்டிய  அவசியம்  இல்லை.

மோடி    அவர்களே!    உங்களுக்கு எதிராக  இந்துவும்  மாறி விட்டது  -  நாடும் மாறிவிட்டது. இந்து - ராம் என்ற இரண்டு வார்த்தைகளை  வைத்துத்தான்  நீங்கள் வெற்றிபெற  நினைத் தீர்கள்.  ஆனால், அந்த     இரண்டு     வார்த்தைகளைப் பார்த்தே  இன்றைக்கு  நீங்கள்  பயப்படவேண்டிய  ஒரு  சூழ்நிலை  வந்திருக்கின்றது. மோடிக்கு  இப்போதுதான்  இந்தியாவின் நினைப்பு  வந்திருக்கிறது.

வெளிநாடு வாழ் பிரதமர் மோடி!

வெளிநாடு  வாழ்  பிரதமராக  இருக்கக்கூடிய  மோடி  அவர்கள்,  தேர்தல்  பிரச்சாரத்தை  தொடர்ந்து  நடத்தி  வருகின்றார். அதில்  வேடிக்கை  என்னவென்று  கேட்டீர்கள் என்றால், அந்த தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி  வைக்கும்  நேரத்தில்  அடிக்கல் நாட்டு  விழாவையும்  தொடர்ந்து  நடத்திக்காட்டிக் கொண் டிருக்கின்றார்.

யார்    ஆட்சிக்கு    வந்தாலும்,    யார் பதவிக்கு  வந்தாலும்  இரண்டு  ஆண்டுகளில் அடிக்கல் நாட்டு விழாவை நடத்திட வேண்டும். அதன்பிறகு 4 ஆவது, 5 ஆவது ஆண்டில்  அதற்குரிய  திறப்பு  விழாவை  நடத்திக்காட்டிட  வேண்டும்.  அப்பொழுதுதான் திறமை    இருக்கின்றது    என்று    நாம் எண்ணிட முடியும். ஆனால்,  கடந்த  சில  மாதங்களாக மோடி  அவர்கள்  செல்லக்கூடிய  பயணத்திட்டத்தைப்  பார்த்தால்,  அதை  NDTV தொலைக்காட்சி கூட  ஆதாரத்தோடு வெளியிட்டு  இருக் கிறார்கள்.  கடந்த  30 நாட்களில்  155  திட்டங்களுக்கு  பிரதமர் மோடி  அவர்கள்  அடிக்கல்  நாட்டியுள்ளார் என்று  ஆதாரத்தோடு  செய்தி  வெளியிட்டிருக்கின்றார்கள்.

`அயர்ன் பிரதமர் அல்ல; ஸ்டோன் பிரதமர்!

நரேந்திர  மோடி  பார்க்கும்  ஒரே  வேலை அடிக்கல்  நாட்டு  விழா  தான்.  அடிக்கல் நாட்டு  விழாவைத்  தான்  நடத்திக்  கொண்டிருக்கின்றார்.  எல்லோரும்  அவரை IRON PRIME MINISTER என்று  சொல்கின்றார்கள். அவர் IRON PRIME MINISTER அல்ல, அவர் ஒரு STONE PRIME MINISTER  இதுதான்  இன்றைக்கு  இருக்கக்கூடிய மோடியின் நிலை.

வெறும்  விளம்பரங்கள்தான்.  பக்கம் பக்கமாக  மக்களுடைய  வரிப்பணங்களில் கோடிக்கணக்கான  ரூபாய்க்கு  செலவு செய்து  தினம்தோறும்  பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வந்து கொண்டி ருக்கின்றது.அப்படிப்பட்ட  விளம்பரத்தை  தந்து  கொண்டிருக் கக்கூடிய மோடி    அவர்களுக்கு, இப்பொழுது    திடீரென    பெருந்தலைவர் காமராஜர்  அவர்களின்  நினைவு  வந்திருக் கின்றது.

1966 ஆம் ஆண்டு   பசுவதை   தடைச்சட்டத்தை  அமுல் படுத்த  வேண்டும்  என்று சொல்லி டெல்லியில், சங் பரிவார் அமைப்பைச்    சேர்ந்தவர்கள். ஊர்வலத்தை     நடத்தி னார்கள். அப்படி  நடத்திய  நேரத்தில்  வன்முறையைத் தூண்டி விட் டார்கள்.

அதிலும்  குறிப்பாக,     அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக  இருந்த  பெருந்தலைவர் காமராஜர்  வீட்டிற்குள்  நுழைந்து  தீ வைத்த கொடுமையைச்  செய்தவர்கள்  அவர்கள்.  அப்படிப்  பட்டவர்கள்  இன்றைக்கு  பெருந்தலைவர்  காமராஜர்  அவர்களைப்     பற்றிப்     பேசுவதற்கு     என்ன யோக்கியதை  இருக்கின்றது?  என்ன  தகுதி இருக்கின்றது?  என்ற  கேள்வியை  இன்றைக்கு நான் கேட்க விரும்பு கின்றேன்.

சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரைச் சூட்டிய கலைஞர்!

வி.பி.சிங்  அவர்கள்  பிரதமராக  இருந்த போது,  சென்னை  விமான  நிலையத்திற்கு காமராஜர்  அவர்களின்  பெயரை  வைக்க வேண்டும்  என்ற  கோரிக்கையை  வைத்த போது,  அதனை  நிறைவேற்ற  காரணமாக இருந்தவர்  முதல்வர்  கலைஞர்  அவர்கள். காமராஜர் பிறந்த ஜூலை 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி  நாளாக  அறிவித்து  ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும்  காமராஜருக்கு  விழா கொண்டாடிட  வேண்டும்  என்று  சட்டசபையில்  தீர்மானமாக  கொண்டுவந்து  நிறைவேற்றி,  அதற்கு  வழிவகுத்துத்  தந்தவர் தமிழக  முதல்வராக  இருந்த  தலைவர் கலைஞர்  அவர்கள்.  இப்படி  எதையாவது பெருந்தலைவர்  காமராஜர்  அவர்களுக்கு புகழ்  சேர்க்கக்கூடிய  வகையில்  மோடி செய்ததுண்டா?

மோடியைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது!

இப்பொழுது,  வடக்கே  படேல்  பெயரைச் சொல்லி  ஓட்டு  கேட்க  நினைக்கின்றார்கள். தெற்கே பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சொல்லி  ஓட்டுக்  கேட்க  முயற்சிக்கின்றார்கள். மோடியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.  காரணம்,  உங்களுக்கு  ஓட்டுவாங்க,  மக்களிடத்தில்  சென்று  ஆதரவு கேட்க,  உங்கள்  கட்சியில்  இருக்கக்கூடிய தலைவர்கள்   பெயரைச்   சொல்வதற்கு வக்கற்ற  நிலையில்  இன்றைக்கு  பாரதிய ஜனதா  கட்சி  இருக்கின்றது  என்று  எண்ணிப்    பார்க்கின்ற    போது    இதைவிட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது.

தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி!

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் மோடியின் எடுபிடி  ஆட்சியாக,  மோடியின்  பினாமி ஆட்சியாக  எடப்பாடி  பழனிசாமி  ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றது.

தலைமைச்    செயலகத்தில்    ரெய்டு செய்கின்றார்கள்.  அமைச்சர்கள்  வீட்டில் ரெய்டு நடக்கிறது. முதலமைச்சரின் பினாமி வீட்டில் ரெய்டு செய்கின்றார்கள். அமைச்சர்கள்  மீது  வழக்குப்  பதிவு  செய்தார்கள். அமைச்சர்களை அழைத்து கவர்னர் மிரட்டுகிறார்.  முதல்வரை  அழைத்து  பிரதமர் மிரட்டுகிறார்.  மொத்தத்தில்  தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த மாநில ஆட்சி என்பது கொத்தடிமை  ஆட்சியாக  இருக்கின்றது. கொலை  வழக்கு  என்று  மிரட்டி  ஈ.பி.எஸ் ஸையும்,  கொள்ளை  வழக்கு  என்று  மிரட்டி ஓ.பி.எஸ்ஸையும்   மிரட்டி   இன்றைக்கு பினாமி  ஆட்சியை  பி.ஜே.பி  நடத்திக் கொண்டிருக்கின்றது.    தொடர்ந்து இரண்டு    நாட்களாக    தொலைக்காட்சிகளில்  பத்திரிகைகளில்  ஒருகொடுமையான செய்தி வந்து கொண்டி ருக்கிறது.

பொள்ளாச்சியில்  நடந்திருக்கக் கூடிய ஒரு கொடுமை. 200-க்கும் மேற்பட்ட  பெண்கள்  பாலியல்  துன்பப்படுத்தப்பட்டு   என்னென்ன   கொடுமைகளுக்கு    எல்லாம்    ஆளாகியிருக் கின்றார்கள்  என்பதை  எல்லாம்  எண்ணிப்பார்க்கின்ற     போது     இப்பொழுது நடைபெறக்கூடிய  ஆட்சி  என்பது  வெறும் ஊழல் ஆட்சி மட்டுமல்ல; லஞ்ச லாவண்யம் உள்ள ஆட்சி மட்டுமல்ல; கொள்ளைக்கார ஆட்சி  மட்டுமல்ல;  கொலைகார  ஆட்சி மட்டுமல்ல;  பெண்கள்  எல்லாம்  பாலியல் கொடுமைக்கு  ஆளாக்கப்படக்கூடிய  ஒரு அநியாய  அக்கிரமமான  ஆட்சியை  இன்றைக்கு நடத்திக்  கொண்டிருக்கின்றார்கள்.

வெறும் தேர்தல் அல்ல, ஜனநாயகப் போர்!

அதனால்தான்  நான்  மேற்கு  வங்கத்திற்குச் சென்று கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில்  குறிப்பிட்டுச்  சொன்னேன். இந்தியாவுக்கான   இரண்டாவது   விடுதலைப்  போரை  சந்திக்க  வேண்டும்  என்று சொன்னேன்.  ஆகவே,  நாம்  சந்திக்க இருப்பது     வெறும்     தேர்தல்     அல்ல, ஜனநாயகப்  போர்!  வெறும்  ஆட்சி  மாற்றம் அல்ல, அதிகார மாற்றம்! ஆணவம் பிடித்த பாசிச   மோடியின்   கைகளில்   இருந்து ஆட்சியைப் பிடிக்கக்கூடிய இந்தப் போரில் ராகுல் காந்தியோடு நாம் கை கோப்போம்! என்ற உறுதி எடுக்க இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.

40 இடங்களிலும் வெற்றி பெற்று டில்லியில் உங்களைச் சந்திப்பேன்!

ராகுல்   காந்தி   அவர்களே,   2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலில்  40-க்கு  40  வாங்கிக் கொடுத்த  அணி  தான்  இந்த  மேடையில் இருக்கக்கூடிய  அணி.  இப்போது  2019 தேர்தலில்  40-க்கு  40  என்ற  வெற்றியைப் பெற்று  உங்களை  நான்  டில்லியில்  வந்து சந்திப்பேன்  என்ற  உறுதியை  இந்த  நேரத்தில் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்தியாவின் ஆட்சிச் சக்கரம் இன்னும் சில  வாரங்களில்  உங்கள்  கைக்கு  வரப்போகிறது.  ஏழையின்  சிரிப்பில்  இறை வனைக்  காண்போம்''  என்று  பேரறிஞர் அண்ணா  சொன்னார்.  உங்களது  ஆட்சி ஏழைகளுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி யாக அமைந்திட வேண்டும். நான்  சாமானியர்களுக்காக  ஆட்சி நடத்துகின்றேன்   என்று   சொன்னவர் தலைவர்  கலைஞர்  அவர்கள்.  அதேபோல், உங்கள்  ஆட்சி  சாமானியர் களுக்கான ஆட்சியாக  அமைய  வேண்டும்.  எனவே, நீங்கள்   அதை   வழங்குவீர்கள்   என்ற நம்பிக்கை   எங்களுக்கு   நிரம்ப   இருக்கின்றது. நாங்கள் உங் களை ஆதரிக்க ஒரே ஒரு காரணம், நீங்கள் மோடி அல்ல! நீங்கள் ராகுல் - ராகுல். அதனால்தான் உங்களை ஆதரிக் கின்றோம். இவ்வாறு  தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்  உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner