முன்பு அடுத்து Page:

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் ரயில் இயக்கம்

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் ரயில் இயக்கம்

சென்னை, ஏப்.24  சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதை யான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனை பயணிகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். சுற்றுவட்டப்பாதையில் இரு சர்க் குலர் ரயில்கள் எதிரெதிர் திசையில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என  தெற்கு....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:09:03

மதுரையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு விசாரணை அறிக்கை …

சென்னை, ஏப்.24  மதுரையில் வாக்கு எண்ணும் மய்யத்துக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மய்யத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அதிகாரி நுழைந்தது தொடர்பாக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:08:03

‘29ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

‘29ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது புயல்’  வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

சென்னை, ஏப்.24, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக் கினார் சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் புவியரசன். புவியரசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘வரும் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்........ மேலும்

24 ஏப்ரல் 2019 15:04:03

அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது நடவடிக்கை: கல்வித்துறை முடிவு

   அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது  நடவடிக்கை: கல்வித்துறை முடிவு

சென்னை, ஏப்.24  தமிழகத்தில் அங்கீகார மில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண் டும் என  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.    அதன்படி,  வட்டாரக் கல்வி....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:04:03

தமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஏப்.23 தமிழகத் தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிய மித்த அரசாணைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த யோகானந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பொது ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இதற்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:43:04

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்:  தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

நாமக்கல், ஏப்.23, தேர்தலில் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவ லர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பி யுள்ளனர். முதுகலைப் பட்டதாரி ஆசிரி யர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், தேர்தல் மற்றும் பயிற்சி பணிக்கான உழைப்பூதியம் குறைத்து வழங்கப்பட்டது குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31, ஏப்ரல் 7, 13, 17 ஆகிய....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:21:04

ஜூன் 20-இல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

 ஜூன் 20-இல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஏப்.23 அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி  தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது.   இந்த கல்வியாண்டு (2019- - 2020)  தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு  நடத் தப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையம் மூலம் கலந்தாய்வு நடத்தப்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:08:04

தரமான பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அறிமுகம்

தரமான பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அறிமுகம்

சென்னை  சில்க்ஸ் நிறுவனத்தின் பென்னி ஹில்ஸ் பிராண்ட் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடவர்களுக்கான உள்ளாடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில்  சென்னையில் உள்ள முன்னணி டீலர்கள் கே.விநாயகம், கே.மாணிக்கம், நந்தகோபால், வினீத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தயாரிப்புகள் அனைத்தும் தரமான பிசிஅய் பருத்தியால் தயாரிக்கப்பட்டது என்று நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.   மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

மல்ட்டி மீடியா உதவியுடன் பள்ளிக் கல்வித் திட்டம்

மல்ட்டி மீடியா உதவியுடன் பள்ளிக் கல்வித் திட்டம்

தருமபுரி, ஏப்.23  சிஎன்எச் இன்டஸ்டிரியல் சமுகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்நிறுவனத்தின் ஒரு பிராண்டான நியூ ஹாலண்ட் அக்ரிகல்ச்சர் அரசு உயாநிலைப் பள்ளி, இலக்கியம் பட்டி என்னும் பள்ளியில் நியூஹாலண்ட் டிஜிட்டல் கிளாஸ் ரூம் என்னும் மல்ட்டி மீடியா உதவியுடன் கூடிய பள்ளிக் கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு தருமபுரி மார்வெல் எண்டர் பிரைசஸ் லைன் என்ற முகவர் ஆதரவு கொடுக்கிறார்........ மேலும்

23 ஏப்ரல் 2019 15:20:03

40 ஆயிரம் பேரின் பெயர் நீக்கப்பட்டதால் குமரி தொகுதி வாக்குகளை எண்ணக்கூடாது

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீனவர்கள் மனு நாகர்கோவில், ஏப்.23 கன்னியா குமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண் டும் வாக்களிக்க வசதியாக, அடுத்த மாதம் நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மீனவ அமைப்புகள்  கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் மக்களவை தேர்த லுக்கான வாக்குப்பதிவு 18ஆம் தேதி நடைபெற்றது. இதற் கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:20:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.12 பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வேதனைக்குரியது என, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் நேற்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண விழாவில் அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றினார். அதன் விவரம்: “பிரதமர் மோடி நேற்று திருப்பூருக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்திலும், அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி அந்த நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு தேசிய கீதம் பாடும் முறை தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே, மதுரைக்கு வந்தபோதும், நேற்றைக்கு திருப்பூர் வந்தபோதும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, என்பது வேதனைக்குரிய ஒன்று. அதேநேரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசுகின்றார். தமிழில் சகோதர, சகோதரிகளே என்று சொல்கிறார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறளைச் சொல்லி பேசுகின்றார். மக்களை ஏமாற்று கின்ற நிலையில் இன்றைக்கு பிரதமர் மோடி இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை.

இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழல்களை எண்ணிப் பார்த்து வரக்கூடிய தேர்தலில் ஒரு நல்ல விடிவு காலத்தை தமிழகத்திற்கும், மத்தியிலும் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நிற்க வேண்டும்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner