முன்பு அடுத்து Page:

ஏழைகளுக்கு சிறப்பு உதவி நிதி ரூ.2,000 வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை, மார்ச் 22  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு உத வித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உயர்நீதிமன்றத் தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்கப்படும்....... மேலும்

22 மார்ச் 2019 14:55:02

தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு

சென்னை, மார்ச் 22  தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு  கண்டறி யப்பட்டுள்ளதாக தமிழக சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. அதன் பயனாக, காசநோய் பாதிப்பு குறித்த தொடர் விழிப் புணர்வு பிரசாரம் மேற்கொள்....... மேலும்

22 மார்ச் 2019 14:55:02

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி மனித உரிமை ஆணையம் தாக்கீது

சென்னை, மார்ச் 22- பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட் டது. ஆவடியை அடுத்த அயப் பாக்கத்தைச் சேர்ந்த தியாக ராஜனின் மனைவி பொம்மி. இவர், பிரசவத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் கிராமத்திலுள்ள தனது பெற் றோர் வீட்டுக்குச் சென்றார். பொம்மிக்கு புதன்கிழமை ....... மேலும்

22 மார்ச் 2019 14:45:02

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

ராமநாதபுரம், மார்ச் 22 நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ள தாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டி யிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆத ரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ....... மேலும்

22 மார்ச் 2019 14:08:02

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: வைகோ பேட்டி

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின்  பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: வைகோ பேட்டி

சென்னை, மார்ச் 22- இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடி யில் இருந்து நாட்டை மீட் போம். இந்த மாபெரும் வர லாற்றுக் கடமை ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு இருக் கின்றது. அந்தக் கடமையை நிறை வேற்றுவதற்கும், நாட்டின் மதச்சார்பற்ற தத்துவத்தை நிலை நிறுத்தவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்தில் முனைந்து செயல் ஆற்றவும், நாடாளுமன் றத்திலும் தீவிர பணியாற்றவும் உறுதி மேற்கொள்கின்றது என 20.3.2019 அன்று மதிமுக....... மேலும்

22 மார்ச் 2019 13:52:01

மத்திய பா.ஜ.க. ஆட்சி - மாநில அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தேர்தலை மக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த வே…

மத்திய பா.ஜ.க. ஆட்சி - மாநில அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தேர்தலை மக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

திருவாரூர், மார்ச் 21 நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மூலம் மோடி ஆட்சி மட்டுமல்ல, அதிமுக ஆட்சியும் அகற்றப்படும் நிலை வரும். எனவே மக்கள் இந்த தேர்தலை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கூறினார். திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற....... மேலும்

21 மார்ச் 2019 16:14:04

திமுக தேர்தல் அறிக்கை: வைகோ பாராட்டு

திமுக தேர்தல் அறிக்கை: வைகோ பாராட்டு

சென்னை, மார்ச்21, திராவிட இயக்க லட்சியங் களை முரசொலிக்கும் சூளுரை முழக்கமாக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. தேர்தல் அறிக்கை சிறப்புற அமைந்திட வழிகாட்டிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தயாரிப்புக் குழுவினரை பாராட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கை, திராவிட இயக்க லட்சியங்களை முரசொலிக்கும் சூளுரை முழக்கமாக ஒளிவீசுவது பாராட்டுக்கு உரியது........ மேலும்

21 மார்ச் 2019 16:08:04

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் திருத்தம்

சென்னை, மார்ச் 21 அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன் களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை (20.3.2019) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: விவசாயிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன் களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல்....... மேலும்

21 மார்ச் 2019 16:08:04

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (2)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (2)

சென்னை, மார்ச் 21 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி எனினும், இதனைச் சூழ்ந்துள்ள மர்மங்கள் விலகாத நிலையில் இன்றளவும் மக்களிடம் இதுகுறித்த கடும் அய் யங்கள் தீரவில்லை. எனவே, மத்திய....... மேலும்

21 மார்ச் 2019 15:48:03

"என்னிடம் பொறுப்பை கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைப்பேன்" டி.ஆர்.பாலு உறுதி

தாம்பரம், மார்ச் 21 சிறீபெரும் புதூர் நாடாளுமன்ற தொகுதி யில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட் பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம் பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ. கரு ணாநிதி ஆகியோர் வரவேற்றனர். இதில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான....... மேலும்

21 மார்ச் 2019 15:47:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜன. 11- அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

`மக்களிடம் செல்வோம்... மக்களி டம் சொல்வோம்... மக்களின் மனங் களை வெல்வோம்...’ என்ற முழக் கத்தை முன்வைத்து தி.மு.க. சார்பில் 12,671 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி யது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி வில்வனம்படுகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடரந்து, தஞ்சாவூர் மாவட் டம் நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி சபை கூட்டங்கில் கலந்து கொண்டார். இதையடுத்து, 2ஆம் நாளான நேற்று (10.1.2019), திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தை தொடங்கிவைத்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது: ஆரவாரத் தோடு, எழுச்சியோடு பெண்கள் அதி களவில் வந்திருப்பது எங்கள் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தமிழகத் தில் நடக்கும் அடிமை, அக்கிரம, அரா ஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் தொடக்கப்புள்ளியாக தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் திட்டமிட்டு தேர்தலை நடத்தவில்லை. ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் இருந்திருந்தால், உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், தி.மு.க. வெற்றி பெற்று விடும் என நினைத்து தேர்தலை நடத்தாமல் உள்ள னர். நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண் களுக்கான இடஒதுக்கீட்டை காரணம் காட்டி, குளறுபடி ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் உள்ளனர். தமிழகம் முழு வதும் பல்வேறு பிரச்சினைகள் உள் ளது. ஆனால், ஜெயலலிதாவால் உரு வாக்கப்பட்ட ஆட்சியை நடத்துபவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் கள். இனி ஆட்சிக்கு வர முடியாது என நினைத்து இருக்கும் வரை சுருட்டிக் கொள்ள திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத் தப்படும். தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுகிறார்கள். சுட்டுப்போட் டாலும் தாமரை மலர வாய்ப்பில்லை. இவ் வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பெண்கள் சொந்தக்காலில் நிற்க நடவடிக்கை எடுப்பேன்..

சீகம்பட்டி ஊராட்சி சபை கூட் டத்தை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு மணிகண்டம் ஒன்றியம் நவ லூர்குட்டப்பட்டு ஊராட்சி சபை கூட் டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண் டார். கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். பெண்கள் சலசலப்பின்றி அமர்ந்திருப்பதுதான் நமக்கு வெற்றி. 5 மாதத்தில் எம்.பி. தேர்தல் வருகிறது. அதனுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் நாடு உருப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மேம்படுத்தப் படும்.

அந்த பொறுப்பை நானே வைத்துக் கொண்டு பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner