முன்பு அடுத்து Page:

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தன்னார்வ அமைப்பு மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

மேகதாது விவகாரம்:  மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை  ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை, டிச.15 சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது, திமுக நாடாளு மன்ற குழு தலைவர் கனி மொழிக்கு நேற்று முன்தினம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி, டில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். சென்னை வந்த கனி மொழிக்கு, திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சிறப் பான வரவேற்பு அளித்தனர். பின் னர் அவர்,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.15 மாற்றுத் திறனாளி மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட் டத்தில் 2018 - -2019ஆம் நிதியாண்டில் கல்விபயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி, இதுவரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மட்டும் மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்கலாம்

அண்ணா பல்கலை. பதிவாளர் தகவல் சென்னை, டிச.15 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ), அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்த போதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ் களைக் கொடுக்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரிய ருக்கு  அண்ணா  பல்கலைக்கழ கத்தின் குரோம்பேட்டை எம். அய். டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்புப் பணிகள் ஜனவரியில் முடியும்: கல்வித் த…

சென்னை, டிச.15 தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்பு களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி யமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி - குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச. 15 கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவி லில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஷ்வரி முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றினார். நகர இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் வரவேற்றார். ப.க. மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:34:02

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை

சென்னை, டிச.15  கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆயிஷாவுக்கு செய்துள்ளது. இச்சிறுமிக்கு ஏற்பட்ட வில்சன்ஸ் நோய் காரணமாக கல்லீரல் அழற்சி  ஏற்பட்டது. இதற்கு கல்லீ ரலை மாற்றுவது ஒன்றுதான் ஒரே வழியாகும். இதையடுத்து மருத்துவர்கள் 8 மணி நேரம்  தொடர்ந்து அறுவை சிகிச்சை நடத்தி ஆயிஷாவுக்கு வெற்றிகரமாக கல்லீரலை மாற்றி உயிரைக்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:25:02

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

கழகத் தலைவர் நேரில் மரியாதை சென்னை, டிச.14 திருமதி ராஜம் அம்மையார் மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் (வயது 71) 12.12.2018 அன்று மாலை உடல் நிலை நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார். திருமதி ராஜம் அம்மையாரின்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்:  தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

மாநில தேர்தல் ஆணையமே ஒப்புதல் சென்னை,டிச.14 உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்குத் தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று கமுக்கமாக இருந்த தமிழக அதிமுக அரசு, இப்போது மாநிலத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டதால் அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே, நகராட்சிகள் வார்டு மறுவரையறை....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

புள்ளியியல் ஆய்வாளர், உதவி நூலகர் பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்

சென்னை, டிச.14  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கஜா புயல்  காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வு, வரும் 23ஆம் தேதி நடக்கிறது,  சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வர்கள் புதிய நுழைவு சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும், 23.12.2018 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, டிச.5 திருச்சியில் நேற்று (4.12.2018) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-

1957-இல் நங்கவரம் போராட்டத்தில் விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளு டன் தலைவர் கலைஞர், முன்னெடுத்து போராட்டம் நடத்தினார். திருச்சியில் இருந்த குளித்தலையில் தான் நங்கவரம் போராட்டம் விவசாயிகளுக்காக கலை ஞரால் நடத்தப்பட்டது.

உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி, நங்கவரம் பாதி என்று விவசாயிகளுக்காக கலைஞர் முழக்கமிட்டார். அப்போது திருச்சியில் இருந்த குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற் றதும் முதன் முதலாக சட்ட சபைக்குள் கலைஞர் நுழைந்து தனது கன்னிப்பேச்சில் நங்கவரம் போராட்டம் குறித்து பேசினார்.

உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், அதுதான் என்நோக்கம் என்று கூறினார். இன்று அதேபோன்று விவசாயிகளின் கண்ணீரை துடைக்க திரண்டுள் ளோம். தீரர்கள் நிறைந்த கோட்டமாம், திருச்சியை தேர்வு செய்து போராடுகிறோம். இது அரசியலுக்காக இல்லை.

உழவனின் கண்ணீரை

துடைப்பதற்கு

தேர்தலை எதிர்நோக்குவதற்காக இல்லை. தலைவர் கலைஞர் கூறியபடி உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக நடைபெறும் போராட்டம் இது. கஜா புயலில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே தமிழகம் கண்ணீரில் தத் தளிக்கிறது. இந்த நிலையில் மேகதாது அணையை கட்டப் போகிறோம் என மத்திய அரசும், கருநாடக அரசும் கூறுகிறது.

இயற்கை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மத்திய அரசும், மத்திய மோடி அரசும், கருநாடக அரசும், தமிழகத்தை வஞ்சிக்கிறது. காவிரி ஆறு கருநாடகாவில் தோன்றினாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இந்த நிலையில் அங்கு புதிதாக மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.

தடை உத்தரவு பெற முடிந்ததா?

இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந் போதும் பிறகு, ஓ.பி.எஸ். இருந்தபோதும், பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், இதில் தடை உத்தரவு பெற முடிந்ததா?

அரசு படுதோல்வி

இந்த விசயத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு படுதோல்வி அடைந்து விட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தபோது இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கருநாடக அரசு இப்படி துணிந்து செய்திருக்காது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறையில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இதில் உயர்நீதி மன்றமும் முகாந்திரம் உள்ளது, எனவே சி.பி.அய். விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

உடனே எடப்பாடி பழனிசாமி உச்சநீதி மன்றம் சென்று தடை உத்தரவு பெற்றார். ஆனால் காவிரி பிரச்சினையில இடைக் கால உத்தரவு பெற முடியவில்லை.

மேகதாது அணை பிரச்சினை தொடர் பாக தடையை பெற உரிய மனுவை தாக்கல் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி அரசு தூங்கி கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் கருத்தை

கேட்டிருக்க வேண்டும்

இதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி அரசு தான. கருநாடக அரசு ஒரு திட்டத்திற்கு அனுமதி கோரினால் தமிழகத்தின் கருத்தை முறையாக கேட்டி ருக்க வேண்டும். மேகதாது அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பதை தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே தான் நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினோம். தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண் டும் என்று கூறினோம். தமிழகத்திற்கு வரும் இந்த ஆபத்தை தடுக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இங்கு கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

நியாயமாக இந்த போராட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கஜா புயலால் அங்கு பாதிப்பு ஏற்பட்டதால் திருச்சியில் நடத்துகிறோம்.

தமிழகத்தை பா.ஜனதா

வஞ்சித்து வருகிறது

திருச்சியிலும் டெல்டா உள்ளது. எனவேதான் இங்கு நடத்துகிறோம். தமிழகத்தை பா.ஜனதா அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தவறு. மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். மற்ற மாநிலத்தில் இது போன்ற பேரிடர் நடந்திருந்தால் பிரதமர் செல்லாமல் இருந்திருப்பாரா?

போதுமான நிதி

வழங்கப்படவில்லை

ஆனால் அவர் தமிழகத்திற்கு வரவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் அவர் வந்திருப்பார். இப்போதும் தமிழ கத்திற்கு எதிர்பார்த்த நிவாரண தொகையை மத்திய அரசு வழங்குமா என்பது சந்தேகம் தான். பேரிடர் மேலாண்மை குழு தலை வராக பிரதமர் இருக்கிறார். முதல்வரும் அதில் உறுப்பினராக உள்ளார். ஆனால் தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்கப் படவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட புயல்களால் பாதிக் கப்பட்ட மொத்த தொகை ரூ.60 ஆயிரம் கோடி. ஆனால் மத்திய அரசு வெறும் 3 ஆயிரம் கோடிதான வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் ஆணையம் திட்டக்கமிஷன் இருந்து என்ன பயன்?

தமிழக மக்கள் எதற்காக மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்க தோன்றுகிறது. இப்படி இருந்து கொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என்கிறார்கள். புற்களே முளைக்காத போது தாமரை எப்படி மலரும். எனவே இதுபோன்ற நிலையை மத்திய அரசு தொடர்ந்தால் வைகோ, ஆசிரியர் அய்யா  ஆகியோர் கூறியது போல் தமிழகத்திற்கு நரேந்திர மோடி வரமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேகதாது அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் தமிழகத்திற்கு எந்தநாளும் மோடி வர முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner