முன்பு அடுத்து Page:

பெரியார் திரை போட்டியில் முதல் பரிசு பெறும் குறும்படத்திற்கு ரூ.50,000, தங்க நாணயம் பரிசு

பெரியார் திரை போட்டியில் முதல் பரிசு பெறும் குறும்படத்திற்கு ரூ.50,000, தங்க நாணயம் பரிசு

தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி இராமநாதன் அறிவிப்பு! சென்னை, ஏப். 22 பெரியார் திரை - குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெறும் குறும்படத்திற்கு என் சார்பாக ரூ. 50,000 பரிசும், ஒரு பவுன் தங்க மெடலும் அறி விக்கிறேன் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி இராம நாதன் பேசுகையில் குறிப்பிட்டார். உலகப்புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 20 (நேற்று) முதல் 24 வரையிலான அய்ந்து  நாட்களில்....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:40:04

புதுக்கோட்டை, அரியலூரில் விசமிகளால் மோதல்: இரண்டு மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு

பொன்னமராவதி: ஏப். 22 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் சில விஷமிகளால் மோதல் ஏற்பட்டு இரண்டு மாவட்டங்களிலும் வன்முறை தொடர்ந்து நீடிக்கிறது. பொன்னமராவதியில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, கார், லாரி உள்பட பல்வேறு வாக னங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் போக் குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடை கள் அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையை கண்டித்தும் விசமிகளை கைது செய்யக்கோரியும் பல இடங்களில் மறியல்நடந்து வருகிறது.  புதுக்கோட்டை....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் தேர்தல்ஆணையத்தின் அடிமைகளா?

க.மீனாட்சிசுந்தரம் கேள்வி! சென்னை, ஏப். 22 சட்டமன்ற மேலவை ஆசிரியர் தொகுதி மேனாள் உறுப்பினர் க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தேர்தல் ஆணையத்தின் ஆணைகள் எதையும் புறக்கணிக்கக்கூடாது என்ற பொது விதியை தவறாமல் பின்பற்று பவர்கள் தமிழ்நாட்டு ஆசிரியர், -அரசு ஊழியர்கள்! ஆனால், தேர்தல் ஆணையம் அவர்களை அடிமைகளாகக் கருதுகிறதோ என்ற அய்யப்பாடு தோன்றும் வகையில் தன் நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளது வருந்துதற்குரியது! தேர்தல் பயிற்சி வகுப்புகளை....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

பாமகவினரால் தாக்கப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

தர்மபுரி,ஏப்.22, பொம்மிடி அருகே தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி அலுவலர் மீது தாக்குதல் நடத்திய பாமக வினர்மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் வழக்குபதிவு செய்யாமல் பஞ்சாயத்து செய்யவே, பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் தனது மனுவை போட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே குக்கல்மலை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (42). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வருகிறார்........ மேலும்

22 ஏப்ரல் 2019 15:22:03

கூடங்குளம் அணு உலைகளின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்: வைகோ

கூடங்குளம் அணு உலைகளின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்: வைகோ

சென்னை, ஏப்.22 கூடங் குளத்தில் அணு உலைகளின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செய லாளர் வைகோ வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு 2013-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் அலகு 2017-ஆம்....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:19:03

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.22 தமிழகத்தில் வரும்  ஜூன் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள் செவ்வாய்,  புதன் ஆகிய இரு நாள்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு, சிறப்பு துணை பொதுத் தேர்வு வரும்  ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.  இதில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஏப். 8 முதல்  12 வரை  விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது. இந்த காலத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தத்கல்....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:19:03

10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரை : தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை, ஏப்.22  தமிழகத்தில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஞாயிற்றுக்கிழமை கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் பொதுப் பார்வையா ளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள் ளனர்........ மேலும்

22 ஏப்ரல் 2019 15:09:03

அஞ்சல் ஓட்டுக்களுக்கு பாதுகாப்பு இல்லை மார்க்சிஸ்ட் வேட்பாளர் புகார்

மதுரை,ஏப்.22, மதுரை மக்களவைத் தொகுதியில் வாக் குச்சாவடி பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறையினர் தங்களது ஓட்டுகளை அஞ்சல் ஓட்டுகளாக போட்டு வருகின்றனர். இப்படி பதி வாகும் அஞ்சல் ஓட்டுகள் ஆட் சியர் அலுவலகத்தில் கணக்குப் பிரிவு அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு  ஒரு  துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முதல் நாள்....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:09:03

வாக்குகள் பதிவான ஓட்டு இயந்திரம் உள்ள அறையில் புகுந்த அதிகாரிகள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண…

வாக்குகள் பதிவான ஓட்டு இயந்திரம் உள்ள அறையில் புகுந்த அதிகாரிகள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஏப்.22, ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக் குள் புகுந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத் தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மய் யத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:09:03

பாமகவினரை கைது செய்யக்கோரி மறியல்

அரியலூர், ஏப்.21 அரியலூரில் தாக்குதலில் ஈடுபட்ட பாமகவினர் அனைவரையும் கைது செய்யக்கோரி  ஜெயங்கொண்டம் - அரியலூர் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்  சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன் 75க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்

21 ஏப்ரல் 2019 17:35:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சொன்ன கருத்தையே ஆளுநர் மறுப்பது

ஊழல்வாதிகளைக் காப்பாற்ற முயற்சியா?

சென்னை, அக்.10 - “தமிழக முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன் என்றும் ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா என்றும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.10.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் களுக்கு கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது” என்று அக்டோபர் 6ஆம் தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மூன்று நாட்கள் கழித்து திடீரென்று, “ஊழல் நடந்ததாக நான் எதுவும் கூறவில்லை” என்று கூறியிருப்பது அதிர்ச்சி யளிக்கிறது.

உள்நோக்கம் எதிரொலிக்கிறது!

மாநிலத்தின் உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் அவர்கள் “துணை வேந்தர் நியமனங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது. அதனால் துணை வேந்தர் நியமன நடைமுறையில் மாறுதல் கொண்டு வர முடிவு செய்தேன்” என்று பேசியது வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும், பத்திரி கைகளிலும் வெளிவந்தது. அப்போதெல்லாம் அமைதி காத்த ஆளுநர் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன்? ஊழல் அ.தி.மு.க அரசையும், இந்த துணை வேந்தர் நியமனங் களைச் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற உள்நோக்கம் அந்த மறுப்பறிக்கையில் எதிரொலிக்கிறது.

“ஆளுநர் பதவியில் உண்மையாக இருப்பேன்” (யீணீவீtலீயீuறீறீஹ் மீஜ்மீநீutமீ tலீமீ ஷீயீயீவீநீமீ ஷீயீ tலீமீ நிஷீஸ்மீக்ஷீஸீஷீக்ஷீ) என்று அரசியல் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளவர் இப்போது ஊழல்வாதிகளை காப்பாற்ற மறுப்பறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டது “முதல்வர் - பிரதமர் சந்திப்பிற்கான” கைமாறா? என்ற மிகப்பெரிய சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆளுநரின் இரட்டை நிலைப்பாடு!

“ஊழல் நடக்கிறது” என்று தகவல் வந்தாலே அதன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் ஆளுநர் பதவியில் இருப்போரின் கண்ணியத்திற்கு அடையாளம். இந்த விஷயத்தில் கல்வியாளர்கள் தன்னிடம் துணை வேந்தர் பதவி நியமனங்களுக்கு ஊழல் நடக்கிறது என்று கூறியதாக ஆளுநரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் “துணை வேந்தர் நியமன ஊழல்” பற்றி முதலமைச்சர் பிரதமரை சந்திப்பதற்கு முன்னும் பின்னுமாக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆளுநர் பதவியின் மீது வைத்துள்ள மாண்பை, மரியாதையை சிறுமைப்படுத்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியொரு நெருக்கடி எங்கிருந்து ஆளுநருக்கு வந்தது?

ஊழல் அ.தி.மு.க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கி விட்டு இன்னொரு பக்கம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் ஆளுநரும், அ.தி.மு.க அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்கள். “அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி எடுத்துள்ள ஆளுநர் அதன் கீழ் வழங்கப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில், நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை விமான நிலையத்தில் இடைமறித்து கைது செய்ய வைத்ததை நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்து பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள “எடுபிடி” அரசு நீடித்தால் பா.ஜ.க.வின் அஜெண் டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அந்த அரசால் ஆட்டுவிக்கப்படும் ஆளுநரும் நினைத்தால் தமிழ்நாட்டு மண் அதற்கு ஒருபோதும் இடம் தராது என்பது மட்டுமல்ல - ஜனநாயக ரீதியாக மக்களின் கடும் கோபத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஊழல் புகார்கள் மீது

நடவடிக்கை எடுத்திடுக!

ஊழல் அ.தி.மு.க அமைச்சர்களையும், முதலமைச் சரையும், துணை வேந்தர் பதவிக்கு கோடிகளைப் பெற்றவர்களையும் காப்பாற்றும் முனைப்பிலிருந்து விலகி, அ.தி.மு.க அரசின் மீது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழல் புகார்கள் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் பிரதமரை சந்தித்து விட்டார் என்பதற்காக அ.தி.மு.க அரசின் ஊழல்களை மூடி மறைக்கும் நோக்கத்தில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டு விடாமல் தடுத்து தன் பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் மாண்புமிகு ஆளுநர் அவர் களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner