முன்பு அடுத்து Page:

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 18- இரட்டைப் பதிவு களை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டு வந்த நிலை யில், இந்த ஆண்டு வரும் 31-இல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப் டம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லா விட்டாலோ, தவறாக இருந்தாலோ திருத்தங்கள் செய்ய....... மேலும்

18 ஜனவரி 2019 15:54:03

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு:  தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, ஜன. 18- பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகளை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 54,439 அங் கன்வாடி மய்யங்கள் செயல் பட்டு வரு கின்றன. இந்த மய்யங்களை அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர் கள் 6 வயது....... மேலும்

18 ஜனவரி 2019 15:51:03

முற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சதியே!

முற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை  அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சதியே!

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை சென்னை, ஜன. 18- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (18.1.2019) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: “பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் “2019 - 20 கல்வியாண் டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறு வனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தின ருக்கு 10 சதவீத....... மேலும்

18 ஜனவரி 2019 15:48:03

ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும்  பணியாற்ற அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.17  கல்வி யாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனு மதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென் னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடு நிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந் தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின்....... மேலும்

17 ஜனவரி 2019 15:46:03

மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்துச் செல்ல வசதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது…

சென்னை, ஜன.17 மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் ஒருவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின் றனர். இதுவரை தேர்வை நடத்தும் பல் கலைக்கழகம்....... மேலும்

17 ஜனவரி 2019 15:44:03

ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக கால வரையற்ற வேலைநிறுத்தம்

ராமேசுவரம், ஜன.17  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமை காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 4 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 46 விசைப்படகுகளை மீட்க அதிகாரிகள் குழு புதன்கிழமை இலங்கை சென்றது. ராமேவரத்தில் இருந்து கடந்த சனிக் கிழமை மீன்பிடிக்கச் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக் கப்பட்டனர். இதனைக் கண்டித்தும் உடனே படகுகள் மற்றும்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் ரோபோவை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். இடம்: வேப்பேரி. மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

காசநோய் பாதிப்பு 6-ஆம் இடத்தில் தமிழகம்

சென்னை, ஜன.17  கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4 லட்சம் பேருக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

நன்னடத்தை விதிகளை மீறிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது கல்வித்துறை

சென்னை, ஜன.17  அரசுப் பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப விண்ணப் பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், முதுநிலை ஆசிரியராக இருந்தால், 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மூலம்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

உயர்நீதிமன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை  ஏற்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.17 உயர்நீதி மன்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் என அரசு அதிகாரிகளுக்கு தலை மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர், தன்னுடைய விளை நிலத்துக்கு ஏற் கெனவே வழங்கப்பட்ட மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாகவும், மீண்டும் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துணைவேந்தர் நியமன ஊழலில் நடவடிக்கைகோரி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்

 

சென்னை, அக்.9 தமிழகத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்த தாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதன் அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரில் சந்தித்து வலியுறுத்த ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலை வருமான மு.க.ஸ்டாலின் நேற்று (8.9.2018) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்கள்: பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக் கிறாரே, அது குறித்து தங்கள் கருத்து?

மு.க. ஸ்டாலின்: பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண் டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் பலமுறை மனுக்கள் தந்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருக்கிறோம்.

அதையும் தாண்டி, நீதிமன்றத்திற்குச் சென்று இது தொடர்பாக வழக்கும் தொடுத்திருக்கின்றோம். வழக்கு நிலுவை யில் இருந்து கொண்டிருக்கிறது. விசா ரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஏற்கனவே நாங்கள் தமிழக ஆளுநரை சந்தித்த போது, பல் கலைக் கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பல மனுக்களை தந்திருக்கின்றோம். ஆனால், அதற்குஉரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது ஆளுநர், சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத் தில் பலகோடி ரூபாய் ஊழல் நடை பெற்றுள்ளது என்று அவரே பேசியிருப் பது வேடிக்கையை அல்ல  வேதனை யைத் தருகிறது.

எனவே, இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட நேரம் ஒதுக்கித் தருமாறு, நாங்கள் கேட்டிருக்கிறோம்.  தமிழக ஆளுநரே ஒப்புதல் தந்திருக்கிற சூழ்நிலையில், உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க வேண்டும் என்று நேரில் சென்று வலியுறுத்துவதற்கு நேரம் கேட்டிருக்கிறோம். நேரம் ஒதுக்கித் தந்த பிறகு, அதனை வலியுறுத்த இருக்கிறோம்.

செய்தியாளர்கள்: மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திருக் கிறார்களே, இது ஏற்கக்கூடியதா?

மு.க. ஸ்டாலின்:  இவ்விரு தொகுதி களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் களைச் சந்திப்பதற்கு ஆளுங்கட்சியாக இருக்கும்  அ.தி.மு.க. எந்தளவிற்கு பயந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி, சான்று தேவையில்லை. தலைமைச் செயலாளர், அ.தி.மு.க. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாள ராக மாறி, அவரே தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தந்திருக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner