முன்பு அடுத்து Page:

பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை, அக்.21 சென்னை மாநகர மக்களின் தாகம் தணிக் கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி திகழ்ந்து வருகிறது. அதனால் இந்த ஏரியில் இருந்து இணைப் புக் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகும். தற்போதைய நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் ....... மேலும்

21 அக்டோபர் 2018 15:00:03

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

சென்னை, அக்.21 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் அளிக்கப்பட உள்ளன. அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு பயிற்சிகள் வாரந்தோறும் இரண்டு நாள்கள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாட்டை பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில்... மத்திய மனிதவள....... மேலும்

21 அக்டோபர் 2018 15:00:03

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க துணைக்குழு

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க துணைக்குழு

சென்னை, அக்.21 முல் லைப்பெரியாறு அணையைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட துணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அண்மையில் கனமழை வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து முல் லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்சநீதி மன்றத்தை அணு கியது.  அப்போது முல்லைப்....... மேலும்

21 அக்டோபர் 2018 15:00:03

மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை, அக்.21 மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதி களுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது. அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள மக்களவைத் தேர்த லில் காங்கிரசு, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முசு லிம் லீக் உள்ளிட்ட கட்சி களுடன்இணைந்து போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகு....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது

ஆண்டிபட்டி,  அக்.21   ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய அய்ந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத் துக்கும் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நிரம்பியது. அதைத்தொடர்ந்து, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 55 அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது: ஆர்.நல்லகண்ணு குற்றச்சாட்டு

மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது: ஆர்.நல்லகண்ணு குற்றச்சாட்டு

திருத்துறைப்பூண்டி, அக்.21  சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா ஆர்.நல்லகண்ணு குற்றம் சாட்டினார். திருத்துறைப்பூண்டியில் நேற்று அவர் செய்தியாளாகளிடம் கூறுகையில், கேரளத் தில் மாநில அரசுக்கு எதிராக சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது. எனவே, சபரிமலை கோயிலுக்கு செல்பவர்களை தடுக்கக் கூடாது, அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் மீது,....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மய்யத்தை தொடங்கி வைத்தார்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மய்யத்தை தொடங்கி வைத்தார்

சென்னை, அக். 21-- கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மருத்துவ முகாம்கள், அங்கன் வாடி மய்யம்  ஆகியவற்றை தொடங்கி வைத்தார். திமுக தலைவரும், கொளத் தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், நேற்று (அக். 20) காலை தனது தொகுதியில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, பெர வள்ளூர் ஜிகேஎம் காலனி 25ஆவது தெரு, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில் மருத்துவ....... மேலும்

21 அக்டோபர் 2018 13:49:01

பெண்களை சாட்டையால் அடித்து "பேய்" விரட்டும் காட்டுமிராண்டித்தனம்

பெண்களை சாட்டையால் அடித்து

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் காட்டுமிராண்டித் தன நிகழ்ச்சி. அரசு இதை தடுத்து நிறுத்துமா? தசரா கொண்டாட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல் பாட்னா, அக். 21- பீகாரில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளம் பெண்கள் மீது, பிளேடு உள்ளிட்ட கூரான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய அடையாள தெரியாத நபர்களை,....... மேலும்

21 அக்டோபர் 2018 13:35:01

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமுகப் பணித்துறை மாணவர்கள் நடத்திய ‘மா…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  சமுகப் பணித்துறை மாணவர்கள் நடத்திய  ‘மாற்றம் தம் கையில்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காடுவெளி, அக்.20 பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவன சமூகப்பணித்துறை மற்றும் நிலா மனநல மறுவாழ்வு மய்யம் இணைந்து நடத்திய மாற்றம் நம் கையில் எனும் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி திருவையாறு அடுத்து காடுவெளியில் உள்ள சிறீ வெங்கடேஷ்வரா ஆதரவற் றோர் இல்லத்தில் நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறீவெங் கடேஷ்வரா ஆதரவற்றோர் இல்லத்தின் குழந்தைகள் நல அலுவலர் இ.அம்சலட்சுமி  அறிமுக உரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருவை யாறு....... மேலும்

20 அக்டோபர் 2018 15:34:03

குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள்: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள்:  அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை, அக்.20 குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப் பிடிப்பதில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, புதுச்சேரி யைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு விவரம்: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எனது கணவர் ரமேஷ், காலாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தின் சட்ட நடவடிக்கைகளை முறை யாக பின்பற்றாமல், எனது கணவர் மீது இந்தச் சட்டத்தின்கீழ்....... மேலும்

20 அக்டோபர் 2018 15:24:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேரவையில் துணைக் கேள்வி இல்லை: அவைத் தலைவருடன் திமுக வாக்குவாதம்

சென்னை, ஜூன் 13 சட்டப் பேரவையில் (12.6.2018)  செவ்வாய்க் கிழமை கேள்வி நேரமானது பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்வி யுடன் தொடங்கியது.

அப்போது, கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் தங்கம் தென்ன ரசுக்கு மட்டும் பேரவைத் தலைவர் தனபால் வாய்ப்பு அளித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த கேள்விக்குச் சென்றார்.

இதுகுறித்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், துணைக் கேள்விக்கு அனுமதி தந்தால் நீண்ட நேரம் கேள்வி நேரத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், பேரவை கூட்டத் தொடரை மாலை 5 மணி வரை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், துணை வினாக்கள் எழுப்ப வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் எனது அறைக்கு வந்து அதனை உரிமையாகக் கோருகிறார்கள். இதனால், மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனாலேயே, இந்த முயற்சியை இன்று செய்து பார்த்தேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த துரைமுருகன், உங்களது இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ள தலைவர்களுடன் விவாதித்து முடிவு செய்திருக்கலாம் என்றார். துரைமுருகனின் இந்தக் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் வழிமொழிந்தார். இது தொடர்பாகக், கலந்தா லோசித்து முடிவெடுப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் உறுதி அளித்தார்.

சுய உதவிக் குழுக்களுக்கு

ரூ.11,000 கோடி கடன்

சுய உதவிக் குழுக்களுக்கு நிகழாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110இன் கீழ், அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை: கடந்த ஏழு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41,180 கோடி வங்கிக் கடனாக அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், ரூ.7,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டபோதும் ரூ.8,332 கோடி கடனுதவி அளிக்கப் பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் ரூ.11,000 கோடி வங்கிக் கடன் அளிக்கப்படும்.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 45 ஆயிரத்து 594 வீடுகள் பழுதடைந்துள்ளன. அவற்றில் தலா ஒரு வீட்டுக்கு ரூ.50,000 வீதம் பழுது நீக்க நிதியாக அளிக்கப்படும்.

தமிழகத்தில்

25 புதிய துணை மின் நிலையங்கள்

தமிழகத்தில் புதிதாக 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110இன் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக் கொணர்வதற்காக சமூகரங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் ரூ.600 கோடியில் அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம் கோந்தகை, கோவை பரலி ஆகிய இடங்களில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் ரூ.1,669 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

உடன்குடி ஒன்றாவது அலகில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், இந்த் பாரத் அனல் மின் நிலை யத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக் கொணரவும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ரூ.1,039 கோடியில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

இயற்கை வேளாண்மையைப்

பரவலாக்க ரூ.5.5 கோடி

ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்குப் பதில் அளித்து அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள்:

விவசாயிகளின் பங்கேற்புடன் நடப்பாண்டில் எம்ஜிஆர் 100 நெல் ரகம் 1.19 கோடி மதிப்பீட்டில் பிரபலப்படுத்தப்படும். மண்ணின் வளத்தினை மேம்படுத்த 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பாண்டில் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்ய ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இயற்கை வேளாண் மண்டலமாக அறிவித்து, முற்றிலும் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க நடப்பாண்டில் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தரமான விதைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு வசதி 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த நடப்பாண்டில் ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner