முன்பு அடுத்து Page:

மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி

மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி

திருச்சி ஆத்மா மருத்துவமனை மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி 23.09.2018 அன்று நடைபெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மொத்தம் 52 பேர் கலந்துகொண்டு மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இம்மாரத்தான் போட்டியில் திருச்சியிலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலிருந்து  6500க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். இம்மாரத் தான் போட்டி நீதிமன்ற வளாகத்தின் அருகிலுள்ள....... மேலும்

25 செப்டம்பர் 2018 16:42:04

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் விளக்கம்

தூத்துக்குடி மாணவி சோபியா  மனித உரிமை ஆணையத்தில் விளக்கம்

திருநெல்வேலி, செப். 25- -நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட் கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடாஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த செப். 3ஆம் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது விமானத்தில் பாஜகவுக்கு எதிராக சோபியா....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:13:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் மனு

வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் மனு

சென்னை,  செப். 25- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். வரும் அக்டோபர் மாதம் முழுவதும் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம் பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:04:03

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்

சென்னை, செப்.25 தந்தை பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு ஆகியோர் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவை வருமாறு: வைகோ தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்திய உபகண்டத் துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய எச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல்,....... மேலும்

25 செப்டம்பர் 2018 14:43:02

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நாகர்கோவில், செப்.24கன்னியா குமரி மாவட்ட திராவிட மாண வர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தந்தைபெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று  அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் சங்க தலைவர் எழுத்தாளர்  பொன்னீலன்  அவர்கள்  விழா சிறப்புரையாற்றினார். தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத் தரங்கம்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:05:05

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அவதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு  வாகன ஓட்டிகள் அவதி

சென்னை, செப். 24- கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தின சரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டால ரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை யில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிக ளுக்கு....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:39:03

கடைமடைக்கு நீர் வராததால் பயிர்கள் கருகியதைக் கண்டு விவசாயி தற்கொலை

கடைமடைக்கு நீர் வராததால்  பயிர்கள் கருகியதைக் கண்டு  விவசாயி தற்கொலை

நாகை, செப். 24- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). விவசாயி. இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை  குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தார். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் கூடுதலாக நிலம் குத்தகைக்கு பிடித்து, 6 ஏக்கர் நிலத்தில் சம்பா  சாகுபடி செய் தார். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் 35 நாள் வயதுடைய பயிராக உள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:39:03

ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பேட்டி

தூத்துக்குடி, செப். 24- தூத்துக் குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் மனு அளித்துள்ளதாக, இது குறித்து நேரில் ஆய்வு மேற் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் கூறினார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர் வால் தலைமையிலான குழு வினர் தூத்துக்குடியில் இரண் டாவது நாளாக ஞாயிற்றுக்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:24:03

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர், தூயநெஞ்சக் கல்லூரி யின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர் மேற்கொண்ட ‘கள’ ஆய்வின்போது, நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சுந்தரம்பள்ளி கிராமத் தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வரலாற்று ஆவணமான சதி....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:56:04

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு விருது

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான  வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு விருது

சென்னை, செப்.22 நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வரும் 90 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களை ஊக்குவித்து கொண்டாடும் முயற்சியில் நீரிழிவின் மீது வெற்றி விருது என்ற இதன் வகையில் முதல்முறையாக வழங்கப்படும் விருதுவை டாக்டர். மோகன்ஸ் டயாபட்டிஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டர் தொடங்கி வைத்துள்ளது. இந்த விருது வழங்கு நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்களில் நீரிழிவு நோயுடன் சமச்சீரான வாழ்க்கைமுறை மூலம் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை 90 வயதுக்கும் கூடுதலாக நடத்தி....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:13:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை, நவ.12 நாங்கள் பெரியாரின் பிள்ளைகள், அம்பேத்கரின் வாரிசுகள் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளன்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்த போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரியையே தகராறு ஏற்பட்டது. இதில் தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றக் கூடிய அளவுக்கு வளரவில்லை என்ற போதிலும் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளங்குகிறது. விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவ தாலும், இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயத் தினர் மற்றும் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி கட்சிகளோடு நட்புறவோடு இருப்பதாலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளோடு மக்கள் பிரச்சினை களுக்காக கை கோர்ப்பதாலும்தான் பாஜக வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பிடிக்கவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் பெரியாரின் பிள்ளைகள்! அம்பேத்கரின் வாரிசுகள்! மாயாவதி உட்பட பல தலித் தலைவர்களை பாஜக வளைத்துப் போட்டு விட்டது. திருமாவளவனை அவர்களால் வளைக்க முடியவில்லை. அதனால் பாஜகவிற்கு நம் மீது காழ்ப்புணர்ச்சி! மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி வரிவிதிப்பை விமர்சனம் செய்துள்ளார்.

அதைவிட அதிகமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு. பணமதிப்பிழப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா தேசத்தை அதள பாதாளத்தில் தள்ளி விட்டது என விமர்சித்துள்ளார். விஜய்யை வளைத்துப் போட பிஜேபிக்கு ஆசை இருக்கலாம் என்று கூறினேன். ஆனால் அதற்கு நிலத்தை அபகரித்ததாகவும், கட்ட பஞ்சாயத்து செய்வதாகவும், ரவுடித்தனம் செய்வதாகவும் கூறி பாஜகவினர் பிரச்சி னையை பெரிதாக்கிவிட்டனர்.

தமிழகத்தில் பிஜேபி காலூன்ற நினைக்கிறது. இது பெரியார் பிறந்த மண். இங்கு மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை. எங்களது இலக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றுவதில்லை. அம்பேத்கர், பெரியார் கனவுகளை நன வாக்குவதுதான்.

அகில இந்திய அளவில் அம்பேத்கர் பேரை சொல்லி கட்சி நடத்தும் கட்சிகளில் பிஜேபியை எதிர்க்கும் ஒரே கட்சி விடுதலைச்சிறுத்தைகள் கட்சிதான். டிடிவி தினகரன் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டது அவரை பயமுறுத்துவதற்காக அல்ல. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துவதற்காகத்தான். கலைஞரை மோடி சந்தித்ததை தொடர்ந்து டிடிவி தினகரனும், எடப்பாடி பழனி சாமியும் இணைந்துவிடக்கூடாது என்பதற் காகத்தான் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல கழக தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன் மாவட்ட தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், குத் தாலம் ஒன்றிய துணைத் தலைவர் அ.முத்தையன் செயலாளர்   ம.பாலசுந்தரம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், சீர்காழி சபாபதி,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளுவன் செயலாளர் அ.சாமி துரை, செம்பை பகுதி அமைப்பாளர் எம்.ஜீவன்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள்தாஸ், மாணவரணி தலைவர் மூ.முகில்வேந்தன், செயலாளர் ச.மதியழகன், பி.எம்.ஜி.மணிவேல், முருக மங்கலம் இளங்கோவன், இளைஞரணி தோழர்கள் அ.விடுதலைராஜா, ரா.பிரவின்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner