முன்பு அடுத்து Page:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

சென்னை, மே 24 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் எனவும், இதில் 60,000 வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே. வேல், செயலர் செல்ல.ராசாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நடத்திய போ ராட்டத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக துப்பாக்கி....... மேலும்

24 மே 2018 16:14:04

வழக்கு என்ன பெரிய வழக்கு என் மீது துப்பாக்கி சூடு கூட நடத்துங்கள் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்

வழக்கு என்ன பெரிய வழக்கு  என் மீது துப்பாக்கி சூடு கூட நடத்துங்கள் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, மே 24- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் அலு வல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து உள்ளன. பின்னர் தலைமைசெயலக வளாகத் தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சிய ரையும், காவல்துறை கண்காணிப்பாள ரையும் பணியிட மாற்றம் செய்துள்ள னர். பலர் உயிரிழந்ததற்கு பொறுப் பேற்று முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமி விலக வேண்டும் என....... மேலும்

24 மே 2018 15:15:03

தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து - மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக தமிழக…

தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து - மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக  தமிழகத்தில் நாளை முழு அடைப்பு!

அனைத்துக் கட்சித் தலைவர்கள் அறிவிப்பு! சென்னை, மே 24- தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பாக நாளை (25.5.2018) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக கழகச் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரசு தலைவர் க.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச்....... மேலும்

24 மே 2018 15:15:03

எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்க மறுத்தார் முதல் அமைச்சர்

எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை  சந்திக்க மறுத்தார் முதல் அமைச்சர்

சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது சென்னை, மே 24- சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திமுக உறுப்பினர்கள், காங் கிரஸ் எம்.எல்.ஏக்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைமுன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்க ணித்த பின், தர்ணாவில் ஈடுபட்டார். மு.க.ஸ்டாலின் தலைமையில்....... மேலும்

24 மே 2018 15:15:03

தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தூத்துக்குடி, மே 24- தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந் துள்ளது. காவல்துறை துப்பாக்கிச்சூட் டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத் துக்குடியில் நேற்று முன்தினம் தொடங் கிய கலவரம் 2ஆவது நாளாக நேற்றும் நீடித்தது. இணையதள சேவை துண்டிக் கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய....... மேலும்

24 மே 2018 14:53:02

பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனை!

பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனை!

திருச்சி, மே 23:  நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன. திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று,  வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய 495 மாணவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே தோல்வியுற்றார். திருச்சி, மே 23: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன. திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று, வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய....... மேலும்

23 மே 2018 16:57:04

தமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது

தமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது

ஆர்.எஸ்.எஸ்.காரர்களே உங்கள் துப்பாக்கித் தோட்டாக்களால், ராகுல் காந்தி கர்ச்சனை! தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதியவிட்ட அகில இந்திய காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளதாவது: தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது, தமிழ் சகோதர சகோதரிகளே! நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கி றோம் என்று தமிழில் அவரது....... மேலும்

23 மே 2018 16:40:04

தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் வெட…

தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம்  வெட்கக்கேடானது : தளபதி மு.க.ஸ்டாலின்  பேட்டி

சென்னை, மே 23 திராவிட முன்னேற் றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின்   தூத்துக்குடி யில் பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தது தொடர் பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்திய நாதனை நேற்று (22-.5.-2018) தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை....... மேலும்

23 மே 2018 16:08:04

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100ஆவது நாள் போராட்டத்தில் பயங்கரம் : துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  100ஆவது நாள் போராட்டத்தில் பயங்கரம் : துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி

தூத்துக்குடி, மே 23 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி  144 தடை உத்தரவை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலக கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு சூறையாடப் பட்டது. அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும்....... மேலும்

23 மே 2018 16:08:04

தமிழர் தலைவர் கண்டனம்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் துப்பாக்கிச் சூட்டுக்கு அய்வர் பலி! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களில் அய்வர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக் கின்றன - கட்சிகளையெல்லாம் கடந்து மக்களின் தன் னெழுச்சிப் போராட்டமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த உணர்வை மத்திய -....... மேலும்

22 மே 2018 16:28:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப். 9- திருச்சி மாநகரில் நேற்று (8.9.2017 மாலை, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 2ஆவது கட்டமாக வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவித்தார். அவரது உரை வருமாறு:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

நீட் பற்றி யாரும் பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே, பொதுக்கூட்டம் நடக்குமா? தடை விதித்துள்ளதே என்ற செய்தி வந்ததும் அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தினோம். அப்போது திருச்சி காவல்துறை ஆணையர் அருண் துணிச்சலோடு அங்கு வந்தார். அவர் கையோடு கொண்டு வந்த ஆணையை கொடுத்தார். அதில், நீட் தேர்வு தொடர் பாக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படு கிறது எனக் கூறப்பட்டிருந்தது. உச்சநீதி மன்ற உத்தரவு வழங்கிய நகல் இருக் கிறதா என்று கேட்டோம். அவர் தன் னிடம் இல்லை என்றார். ஒரு வேளை அனுமதியில்லையென்றாலும் நாங்கள் அதை மீற நாங்கள் முடிவு செய்துள் ளோம் என்றோம். இதற்கிடையே டில்லி, சென்னையிலிருந்து மூத்த வழக் குரைஞர்கள் என்னை தொடர்பு கொண்டு பொதுக்கூட்டம் நடத்த தடையில்லை என்ற உண்மை நிலையை விளக்கினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி சட்டம் ஒழுங்கு சீரழியாமல் கண்காணிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என்றனர். எனவே இது உச்சநீதிமன்ற தடை அல்ல. மாநில, மாநகர காவல் துறை தடை போட்டுள்ளது. இங்குள்ள பாஜ தலைவர்கள் புகாரை ஏற்று திட்டமிட்டு சதிவேலை செய்துள்ளனர். அதை சுக்குநூறாக்கிவிட்டு இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். 2, 3 நாட்களில் நீட் தேர்வுக்கு எதிராக இங்கு கூடியிருக்கிறீர்கள். சமூக நீதியை காப்பாற்ற, மாணவர்களை காப்பாற்ற, தமிழகத்தைக் காப்பாற்ற மாநில அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாம் இங்கு கூடியிருக்கிறோம். மத்திய, மாநில அரசு நாடகத்தால் அனிதாவை நாம் இழந்துள்ளோம். தமிழகத்தில் உள்ள பா.ஜ தலைவர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாக படித்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் நீட் தேர்வா எழுதி வந்தார்கள்? அமெரிக்கா, இந்திய அளவில் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்போல் எங்கும் இல்லை. இங்கு திறமையான மருத்து வர்கள் பணியாற்றி வருகின்றனர். முதல் பெண் மருத்துவரை உருவாக்கிய தமிழகத்திற்கு எதற்கு நீட் தேர்வு? எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில்  பா.ஜ சார்பில் அதன் மாநில தலைவர் இதே இடத்தில் போட்டி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த போட்டி கூட் டத்தில் தலைவர்கள் கேட்ட கேள்விக் கும் நான் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும். சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானத்தையும் ஏன் கண்டுகொள்ளவில்லை? அதனை எந்த டேபிளில் பூட்டிவைத்திருக்கிறீர் கள்? குடியரசுத் தலைவருக்கே அனுப்ப வில்லை என்று செய்தி வருகிறதே. இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு வருட விலக்கு என்று மத்திய அமைச்சர் அறிவித்து நாடகமாடி நம்ப வைத்து கழுத்த அறுத்தீர்களே.

மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர உரிமையுள்ளது என்று உச்சநீதிமன் றத்தில் தெரிவித்துவிட்டு பின்பு மாற்றி பேசினீர்களே இதற்கு பதில் சொல்ல வேண்டும். மாட்டுக்கறி விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வந்து நிறை வேற்றிய நீங்கள் நீட் தேர்வு விவகாரத் தில் அவசர சட்டம் கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களை ஏன் காப் பாற்றவில்லை, இதற்கு பதில் செல்லுங் கள்.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறை யில் மோடியை சந்தித்து கடிதம் எழு தினால் பதில் இல்லை. விவசாயிகள் பிரச்சினையில் அனைத்து கட்சி தலை வர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானங்கள் போட்டு அதனை பிரதமரிடம் அளிக்க அனுமதி கேட்டோம் அதற்கும் அனு மதியில்லை. இதற்கு பதில் செல்ல வேண்டும். நீங்கள் பதில் சொல்லும் போது மனசாட்சிப்படி மனதில் கை வைத்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 2ஆவது கட்டமாக வரும் 13ஆம் தேதி அனைத்து கட்சியினரும் இணைந்து தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் குதிரை பேரம் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டு வோம். நாளை கூட்டணி கட்சியினரு டன் ஆளுநரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின் போது இது தான் கடைசி சந்திப்பு என்று கூற உள்ளோம். எங்கள் கோரிக்கையின்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழக மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். ஆட்சியே கவிழ்கிற வகையில் அந்தப் போராட்டம் அமை யும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர்: நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர தமிழக அரசு அவசரசட்டம் கொண்டு வந்து மத்திய அரசை நிர்பந்திக்க வேண் டும். மத்திய, மாநில அரசுகள் செய்யுமா என்பது சந்தேகமே. மு.க.ஸ்டாலினுக்கு தற்போது கூடுதல் வேலை வந்துள்ளது.
இந்த ஆட்சியை கலைக்க வேண் டும். காங்கிரசு கட்சியில் 8 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். திமுக எடுக்கும் எந்த முடிவுக்கும் காங்கிரசு ஒத்துழைக்கும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகி ருஷ்ணன்:  ஜல்லிக்கட்டு விளையாட்டை திரும்ப பெற லட்சக்கணக்கான இளை ஞர்கள் போராடியதால் மோடியும், குடி யரசுத் தலைவரும் கையெழுத்திட்டனர். அப்படி இருக்கும் போது நீட் தேர்வு விலக்கிற்கு கையெழுத்து போட முடி யாதா? நீட் தேர்வு நடந்து விட்டதே இனி மாற்ற முடியுமா என்று கேட் கலாம். அடிமேல் அடி வைத்தால் அனைத்தும் நடக்கும். 

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: மாணவி அனிதா பணம் சம் பாதிக்க மருத்துவராக முயற்சி செய் வில்லை. தன் தாய்போல் யாரும் இறக் கக்கூடாது என்பதற்காக மருத்துவராக முயற்சி செய்தார். அனிதா தற்கொலை செய்யவில்லை. மோடி, எடப்பாடி அரசுகள் தற்கொலைக்கு தள்ளியுள்ளது. அனிதாவின் இறப்பிற்கு மோடியும், எடப்பாடியும் பொறுப்பேற்க வேண் டும். தமிழ்நாட்டின் மாணவர்கள், உரி மைகளை காப்பாற்ற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்: கல்விக்கான அதிகாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வரத்தான் கோரிக்கை வைக்கிறேம். நீட் என்ன என்று பலருக்கு தெரியவில்லை. நீட் தேர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் நடத்திய கூத்துகள் பற்றி மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.

இந்திய யூனியன் முசுலிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்: மாநில  பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்று மாநில  உரிமையை ஒதுக்கித்தள்ளி, மத்திய அரசு எதேச் சதிகார போக்கை பின்பற்றி  தனது கொள்கையை திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் நீட் தேர்வு.  இது புரியாமல் தமிழக பினாமி அரசு, மத் திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது.  இதை தடுத்து நிறுத்தாவிட்டால் நாளைய சமுதாயம் நம்மை தூற்றும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா: நீட் என்பது சர்வதேச சதி. இதற்கு பாஜ, எடப்பாடி அரசு உடந்தை யாக உள்ளது. தமிழக மருத்துவ கல்லூ ரிகளில் படித்த மருத்துவர்கள் 51 சத வீதம் பேர் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகின்றனர். நீட் வந்தால் இந்த நிலை முற்றிலும் மாறும்.

முன்னதாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு வரவேற்புரையாற்றினார். நிறை வாக  வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக் கானோர் தி.மு.க. தொண்டர்கள், தோழர் கள், அனைத்துக் கட்சியை சேர்ந்தவர் களும் கலந்து கொண்டனர்.
இம்மாபெரும் பொதுக் கூட்ட மேடையில் வைத்திருந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரி யாதை செலுத்தினர். இம்மாபெரும் பொதுக் கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டா லின் உரைக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை தனி யாக முதல் பக்கத்தில் இடம் பெற்று உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner