முன்பு அடுத்து Page:

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்கு

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்கு

திருப்பூர், டிச. 12 கடந்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர், கவுசல்யாவை பட்டப்பகலில் வெட் டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். இவ்வழக்கில் கவுசல்யாவின் பெற் றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படை யைச் சேர்ந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் இவர் கள் அனைவர்மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. இவ்வழக்கில் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு....... மேலும்

12 டிசம்பர் 2017 16:00:04

வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கம் திராவிடர் கழகமே!

வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல்  மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கம் திராவிடர் கழகமே!

வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கம் திராவிடர் கழகமே! ஈரோடு விழாவில் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நெகிழ்ச்சியுரை ஈரோடு, டிச. 12  திராவிடர் கழகம் ஒன்றுதான், மக்களின் வாக்குகளைப்பற்றி கவலைப்படாமல், அவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படும் இயக்கம்என்றார் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் மத்திய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள். 2.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் மத்திய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன்....... மேலும்

12 டிசம்பர் 2017 15:32:03

புயலில் காணாமல் போனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்

 புயலில் காணாமல் போனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்

நாகர்கோவில், டிச.12 புயலில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி, மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போனார்கள். அவர்களை தேடி கண்டு பிடித்து மீட்கும் முயற்சியில் கடற்படை, கடலோர காவல் படையைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானங்கள், ஹெலிகாப் டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளன. மீனவர்களில் பலர் கரை....... மேலும்

12 டிசம்பர் 2017 15:12:03

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்கத் தடை நீடிப்பு

 உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்கத் தடை நீடிப்பு

சென்னை, டிச.12 வருவாய் வருகிறது என்பதற்காக பதாகைகள், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகைகள், சுவரொட்டிகள், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய்....... மேலும்

12 டிசம்பர் 2017 15:12:03

வடகிழக்கு பருவமழை: 10 மாவட்டங்களில் பற்றாக்குறை

  வடகிழக்கு பருவமழை: 10 மாவட்டங்களில் பற்றாக்குறை

சென்னை, டிச.12 தமிழகத்தை வளம்கொழிக்க செய்யும் வட கிழக்குப் பருவமழை நிகழாண் டில் பரவலமாக பெய்தாலும், பல மாவட்டங்களில் பற்றாக் குறை அளவில் உள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங் களில் சராசரி மழை அளவை விட பற்றாக்குறை காணப்படு கிறது. வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங் குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் சற்று தாமதமாக அக்டோபர் 27-ஆம் தேதி....... மேலும்

12 டிசம்பர் 2017 15:12:03

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி முற்றிலும் நிறைவு

 சென்னை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி முற்றிலும் நிறைவு

சென்னை, டிச.12  மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையிலான சுரங்கம் தோண்டும் பணி நேற்று நிறைவுற்றதை அடுத்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி முற்றிலும் முடிவடைந்தது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத் துக்காக விமானநிலையம் முதல் திருவொற் றியூர் விம்கோ நகர் வரை (33 கிலோ மீட்டர்) முதல் வழித்தடமும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை (22 கி.மீ) 2-ஆவது வழித்தடமும் உருவாக்கப்பட்டது. இதில் 2-ஆவது வழித்தடத்தில் கோயம் பேடு முதல்....... மேலும்

12 டிசம்பர் 2017 15:12:03

தமிழர் தலைவர் அறிக்கையின் எதிரொலி பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவர் இல்லையா? வலுக்கும் சர்ச…

தமிழர் தலைவர் அறிக்கையின் எதிரொலி  பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான  தலைவர் இல்லையா? வலுக்கும் சர்ச்சை

ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும், பெரியார் விருதுக்குரிய விண்ணப்பங்களுக்கான தமிழக அரசின் அறிக்கை, கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் ‘பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் ஆகிய மக்களின் சமூக மேம் பாட்டுக்காக உழைத்தவர்கள், தங்கள் பெயருடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட வில்லை என்ற கருத்துக்கு அ.தி.மு.க அரசு வந் துள்ளதா? டாக்டர்....... மேலும்

11 டிசம்பர் 2017 16:13:04

கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, டிச. 11- விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒக்கி புயலில் சிக்கி காரணமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்க வில்லை. ஒக்கி புயலால் பாதிக்கப் பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு மத்திய-மாநில அரசு....... மேலும்

11 டிசம்பர் 2017 15:41:03

ஒக்கி புயலில் 5,000 தேனீ கூடுகள் சேதம்

  ஒக்கி புயலில் 5,000 தேனீ கூடுகள் சேதம்

பெரவூர், டிச. 11- குமரி மாவட் டத்தில் ஒக்கி புயலால் சுமார் 5 ஆயிரம் தேனீ கூடுகள் அழிந் ததால், தேன் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள னர். கன்னியாகுமரி மாவட்டத் தில் தேனீ வளர்ப்பும், தேன் உற்பத்தியும் பிரதான தொழி லாகும். இந்தியாவின் தேன் கிண்ணம் என, குமரி மாவட் டத்தின் மார்த்தாண்டம் வர் ணிக்கப்படுகிறது. மார்த்தாண் டத்தை மய்யமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான தேனீ வளர்ப் போர் உள்ளனர். இவர்கள்....... மேலும்

11 டிசம்பர் 2017 15:40:03

காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கும்மிடிப்பூண்டி அருகே மீனவர்கள் பேரணி

  காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கும்மிடிப்பூண்டி அருகே மீனவர்கள் பேரணி

கும்மிடிப்பூண்டி, டிச. 11- ஒக்கி புயலால் காணாமல்போன கன்னியாகுமரி மீனவர்களை மீட்கக் கோரி, கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 4 கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று பேரணி நடத்தினர். ஆரம்பாக்கத்தை ஒட்டிள்ள நொச்சிக்குப்பம், பாட்டைக் குப்பம், வெங்கடேசபெருமாள் நகர், பெத்தானியாகுப்பம் ஆகிய 4 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை ஆரம்பாக்கத்தில் பேரணி நடத்தினர். ஒக்கி புயலால் காணாமல்போன கன்னியாகுமரி மீனவர் களை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தி....... மேலும்

11 டிசம்பர் 2017 15:40:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காலில் விழுவதைத் தவிர்த்ததற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன்
திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஜன.10 தன் வேண்டுகோளை ஏற்று காலில் விழுவதைத் தவிர்த்ததற்காக திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:

உயிரினும் மேலான தலைவர் கலை ஞரின் உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். கழகத்தின் செயல்தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதல் தினந்தோறும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அரசியல் கொள்கைகளுக்கு அப் பாற்பட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவற்றின் முன்னணி நிர்வாகிகளும் நேரிலும் அலைபேசி யிலும் வாழ்த்துகள் தெரிவித்தது, தனிப் பட்ட எனக்குரிய வாழ்த்தாக மட்டுமல் லாமல், தமிழர்களின் பண்பாட்டுக்கு, சிறப்பு சேர்க்கும் பெருமையாகவே கருதுகிறேன். அருகிவரும் பண்பாட்டை மீட்டெடுத்து நாளும் பெருகிவரும் வகையில் வெளிப்பட்ட இத்தகைய அன்பான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வ துடன், அரசியல் மாச்சரியங்களைக் கடந்த நட்பும் நல்லுறவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரோக்கியமான அரசியலை முன் னெடுப்பதில் மற்றவர்களுடன் இணைந் தும், தமிழகத்தின் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்கிணைந்தும் செய லாற்றுவதற்கு இத்தகைய வாழ்த்துகள் வலிமையாகத் துணை நிற்கும் என்றும் நம்புகிறேன்.

அதுபோலவே அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஊடகத்துறையினர், சமூக நல அமைப் புகளைச் சார்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என நாட்டு நலனில் அக்கறை கொண்ட பலரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி, அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டி மேலும் வளர்ந்தோங்கும் வண்ணம் செயல்பட உறுதியேற்கிறேன்.

எந்தளவுக்கு வாழ்த்துகள் குவிகின் றனவோ அந்தளவுக்கு பொறுப்புகளும், பணிகளும் நிறைந்திருக்கின்றன என் பதை உணர்கிறேன். எந்த நம்பிக்கை யுடன் அனைவரும் வாழ்த்துகிறார்களோ அந்த நம்பிக்கை நிறைவேறும் வகை யில் பணியினை மேலும் செம்மைப் படுத்தும் சீரிய தருணமாக இது அமைந் துள்ளது.

கழகத் தொண்டர்களின் சங்கிலித் தொடர் போன்ற வருகையும், வாழ்த் தொலியும் நெஞ்சத்தில் தேனாகப் பாய்கிறது. நாம் காண்கிற களங்களுக்கும் அதில் நாளைப் பெறப் போகிற வெற்றி களுக்கும் இன்று கிடைக்கும் ஊக்கமிகு வாழ்த்தொலியாகவே உங்களின் அன்பைக் கருதுகிறேன். போர்க்களம் செல்லும் வீரர்களுக்கு அவர்களின் இல் லத்தாரும், ஊர்மக்களும் மாலையிட்டு,

வெற்றித்திலகமிட்டு, பறைகொட்டி வாழ்த் துச் சொன்ன வரலாற்றை புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய ‘சங்கத் தமிழ்’ நூலில் இவற்றை அழகுமிகு சொற்களால் கவிதையாக வடித்திருக்கிறார்.

பண்டைத்தமிழர் பாரம்பரியத்தை ஒட்டி ஊக்கம் தரும் வாழ்த்துகளை வழங்கும் உடன்பிறப்புகள் ஆர்வ மிகு தியால், என் காலில் விழுவதைத் தவிர்த்து, கழகத்தின் சுயமரியாதைக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என நான் விடுத்த அன்பு வேண்டு கோளை ஏற்றுக் கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த் துகளுக்கும் எனது வேண்டுகோளை ஏற்று, கழகக் கட்டுப்பாட்டைக் காப் பாற்றியமைக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அனைத்துத் துறை களிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர் கின்ற இன்றைய நிலையில், சென்ற முறை ஏமாந்து போன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதை யில் செலுத்துவதற்கான பணிகளை, நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்; வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் நம்பிக் கைக்குரியவர்களாக நமது செயல் பாடுகள் தொடர வேண்டும்.

எதையும் ஜனநாயக பூர்வமாக செயல்படுத்தக் கூடிய கழகம், மக்களின் எதிர்பார்ப்புகளையும் விரைந்து நிறை வேற்றும் வகையில் தொடர்ந்து செயல் படும். களத்தில் விளையவிருக்கும் செயல் பாடுகளுக்கு உரமாகின்றன உங்களின் வாழ்த்துகள்.
இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து இயக்கப் பணிகளைத் தொடர்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner