Banner
முன்பு அடுத்து Page:

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒரு சில நிமிடங்கள் மட்டும் பார்வையிட்ட மத்திய கு…

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒரு சில நிமிடங்கள் மட்டும் பார்வையிட்ட மத்திய குழுவினர்; மக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒரு சில நிமிடங்கள் மட்டும் பார்வையிட்ட மத்திய குழுவினர்; மக்கள் ஏமாற்றம் சென்னை, நவ.27_ சென்னை புறநகர் பகுதி களில் மழை வெள்ளம் பாதித்துள்ள தாம்பரம், முடிச்சூர், சிடிஓ காலனி, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது. தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காததால், எங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கிறோம் என்று பொதுமக்கள் கண்ணீரு டன் கூறினர். அப்போது....... மேலும்

27 நவம்பர் 2015 16:26:04

சிறுதொழில்களுக்கான சர்வர்கள் அறிமுகம்

சிறுதொழில்களுக்கான சர்வர்கள் அறிமுகம்

கோவை, நவ. 26_ டெல் நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவ னங்களுக்கு உதவும் வகை யில் தனது வெற்றிகரமான “டெல் பவர் எட்ஜ்’’ 13ஆம் தலைமுறை சர்வர்கள் வரிசையில் நான்கு புதிய அறிமுகம் நிலை சர்வர் களை அறிமுகம் செய்துள் ளது. சர்வதேச ஆய்வுப்படி செயல்திறன், வன்பொருள், கொள்ளளவு மற்றும் தகவல் தொழில்நுட்ப சிக்கல் தன்மை ஆகிய வையே சிறு மற்றும் நடுத் தர நிறுவனங்கள் எதிர் கொள்ளும்....... மேலும்

26 நவம்பர் 2015 16:37:04

மழையால் பருவத் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

மழையால் பருவத் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

மழையால் பருவத் தேர்வை ஒத்தி வைப்பதுமாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதுதேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும்: கல்வியாளர்கள் கருத்து சென்னை, நவ.26_ ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையால் பாதிப்பு ஏற் பட்டு வரும் நிலையில், நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வு களில் நிரந்தர மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வி யாளர்களிடையேயும், மாண வர்களிடையேயும் எழுந் துள்ளது. அதாவது பருவத் தேர்வை முன்கூட்டியே அக்டோபரில் முடித்து விட வேண்டும் அல்லது டிசம் பருக்கு....... மேலும்

26 நவம்பர் 2015 15:55:03

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது மேட்டூர், நவ.26_ மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிகழாண்டில் 2-ஆவது முறையாக புதன் கிழமை காலை 90 அடியை எட்டியது. நிகழாண்டில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகபட்சமாக அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு, காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாத காரணத்தாலும் காவிரி....... மேலும்

26 நவம்பர் 2015 15:35:03

கிரானைட் முறைகேடு வழக்கு நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்பட…

கிரானைட் முறைகேடு வழக்கு நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கிரானைட் முறைகேடு வழக்குநரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு மேலூர், நவ. 26 கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வந்த சட்ட ஆணையர் சகாயத்திடம் பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சேவற்கொடி யோன் புகார் கொடுத்தார். அதில் தான் வேலைபார்த்த காலத்தில் மனநலம் பாதிக் கப்பட்டோர் நரபலி கொடுக் கப்பட்டதாக குறிப்பிட்டி ருந்தார். இது குறித்து விசா ரணை நடத்த சகாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டம்....... மேலும்

26 நவம்பர் 2015 15:25:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.14- ஊழல் வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக விசாரித்து தீர்ப் பளிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் ஏராளமான ஊழல் வழக்குகள் குவிந்துள்ளன. இந்த நிலையில், கீழ் நீதிமன்றங்கள் முதல் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள ஊழல் வழக்குகளை விரை வாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். எச்.கபாடியா கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தகவலை உச்சநீதிமன்ற செயலாளர் ஜெனரல் ஏ.அய்.எஸ். சீமா நேற்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி களுக்கு எழுதியுள்ள கடிதங்களில், `ஊழல் தடுப்பு சட்டம் 1988இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் முன்னுரிமை அடிப் படையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வழக்கு களை விரைவான முறையில் விசா ரித்து தீர்ப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என எஸ்.எச்.கபாடியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது போல, உச்சநீதிமன்ற பதிவா ளருக்கும் அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ஊழல் வழக்கு களை விசாரணைக்கு பட்டியலிடு வதில் அதிகபட்ச முன்னுரிமை அளிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்