Banner
முன்பு அடுத்து Page:

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் -....... மேலும்

19 மே 2013 14:51:02

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார். விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்....... மேலும்

19 மே 2013 14:05:02

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 9 அணிகளில் உள்ள வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட் டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டுள்ளது....... மேலும்

19 மே 2013 13:51:01

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்…

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்

18 மே 2013 18:22:06

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்

18 மே 2013 17:57:05

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்

17 மே 2013 17:22:05

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்

17 மே 2013 17:13:05

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்

17 மே 2013 16:17:04

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்

17 மே 2013 15:20:03

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்

16 மே 2013 16:56:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 26- மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1,696 எம்.பி.பி.எஸ். இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி இருக்கிறது.

இதில் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு 838 எம்.பி.பி.எஸ். சீட்டுகளும், 18 பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 898 பி.டி.எஸ். இடங்களும் கிடைக்கும். இந்த இடங்களும் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும்.

எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர 28,275 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் 398 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 27,877 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் கடந்த 20 ஆம் தேதி ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ, பல்மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ரேங்க் பட்டியலையும், 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 10 மாணவ-மாணவிகளின் பட்டியலையும் வெளியிட்டார்.  ரேங்க் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்த ஆண்டு கூடுதலாக 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு 50 சீட்டுகள் கிடைக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் இருந்து உத்தேச கடிதம் வந்துவிட்டது. அடுத்ததாக அனுமதி கடிதம் வர வேண்டும்.

இதேபோல், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் மருத்துவக் கவுன்சில் குழுவினர் 3 முறை ஆய்வு செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அந்த கல்லூரியில் 100 இடங்களுக்கு அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறோம். அடுத்த மாதம் (ஜூலை) 15 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும். முதல்நாளில், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும். 6 ஆம் தேதி முதல் 10 நாளைக்கு பொது கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு நாள் குறித்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்படும். ஒருவேளை அழைப்புக்கடிதம் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் உள்ள மாணவர்கள் அதற்குரிய நாளில் கலந்தாய்விற்கு நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம்.

எனவே, கலந்தாய்விற்கு விடுபட்டு விடுவோமோ என்று எந்த மாணவ-மாணவியும் அச்சப்படத் தேவையில்லை. அரசு கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றுவிடும்.

அந்த இடங்களில் ஏற்படும் காலி இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான 2 ஆவது கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும்.

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் இருந்து அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவ்வாறு புகார் வந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் வி.எஸ்.விஜய் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சி.வம்சதாரா, கூடுதல் இயக்குநரும், மருத்துவ தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் ஆர்.ஜி.சுகுமார், துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் ரேங்க் பட்டியல் உடனடியாக அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் அங்கு வந்து ரேங்க் பட்டியலை பார்த்தார்கள். பட்டியல் வெளியிடப்பட்ட சற்று நேரத்தில் சுகாதாரத்துறையின் இணையதளத்திலும் அது வெளியிடப்பட்டது.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்