தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது
முன்பு அடுத்து Page:

100 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89 லட்சம் மின்வாரியம் கணக்கெடுப்பு

 100 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89 லட்சம் மின்வாரியம் கணக்கெடுப்பு

சென்னை, ஜூன் 26 தமிழக அரசின் 100 யூனிட் மின்சாரம் இல வசம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, 89 லட்சம் பேர் மின்சாரக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இல வசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததையடுத்து அதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி, கடந்த மாதம் 23-ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப் படும் அனைத்து....... மேலும்

26 ஜூன் 2016 15:04:03

தமிழகத்தில் சில நாள்களுக்கு மிதமான மழை நீடிக்கும்

 தமிழகத்தில் சில நாள்களுக்கு மிதமான மழை நீடிக்கும்

சென்னை, ஜூன் 26 தமிழகத்தில் இன்னும் சில நாள்களுக்கு மித மான மழை நீடிக்கும் என்றும், பலத்த காற்று வீசுவதால் மீனவர் கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்றும் வானி லை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. தென் மேற்குப் பருவமழை கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் வெப்பச் சல னத்தின் காரணமாகவும், வங்கக் கடலில் நிலை கொண் டிருந்த மேலடுக்கு சுழற்சியின் காரண மாகவும்....... மேலும்

26 ஜூன் 2016 14:45:02

சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை தடுத்து நிறுத்த காவல்துறைக்கு முழுசுதந்திரம் அளிக்க வேண்டும…

சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை தடுத்து நிறுத்த காவல்துறைக்கு முழுசுதந்திரம் அளிக்க வேண்டும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை தடுத்து நிறுத்த காவல்துறைக்கு முழுசுதந்திரம் அளிக்க வேண்டும்திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜூன் 26 திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:தமிழகத்தின் தலைநகர் சென் னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற் படுத்தி வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது. கழகத் தின்....... மேலும்

26 ஜூன் 2016 14:00:02

கச்சத்தீவு பேரால் மீனவர் பிரச்சினையை திசை திருப்புவதா? கலைஞர் கண்டனம்

 கச்சத்தீவு பேரால் மீனவர் பிரச்சினையை திசை திருப்புவதா? கலைஞர் கண்டனம்

சென்னை,  ஜூன் 25 தமிழக மீன வர்கள் தாக்கப்படும் விவகாரத் தைத் திசை திருப்புவதற்காகவே கச்சத்தீவு பிரச்சினை எழுப்பப் படுகிறது என திமுக தலைவர் கலைஞர் குற்றம்சாட்டியுள்ளார். “1974-இல் கச்சத்தீவு ஒப்பந் தம் தொடர்பான அறிவிப்பு வெளியானபோதுதான் தெரியும் எனக் கூறும் கலைஞர், 2013-இல் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானத்தில் திமுக அரசு கூறிதான், ஒப்பந்தத்தில் சில ஷரத்துகள் சேர்க்கப்பட்டதாகக் கூறுகிறாரே? இது ஒன்றுக்கு ஒன்று முரண்பாடா இல்லை யா?’ என்று....... மேலும்

25 ஜூன் 2016 16:07:04

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி சென்னை, ஜூன்24- நெய்வேலி சுரங்க நிலக்கரி நிறுவனத்தில் (என் எல்சி) பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை யில் நேற்று மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னி லையில் நடந்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி யில் முடிந்தது........ மேலும்

24 ஜூன் 2016 19:03:07

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, மே 25-டெங்கு காய்ச்சல் பரவு வதை தடுக்க நடவ டிக்கை எடுக்க உத்தர விடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அர சுக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள் ளது. மதுரை கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியி ருப்பதாவது:

நெல்லை, கன்னியா குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங் களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரு கிறது. நெல்லை மாவட் டத்தில் 30 பேர் இறந் துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனை யில் அவசர சிகிச்சை பிரிவில் 23 பேரும், உள்நோயாளியாக 40 பேரும் உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலை யங்கள், தாலுகா மருத் துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவை யான கட்டமைப்பு வசதி கள் இல்லை. டெங்கு காய்ச்சல் பாதித்த பலரை, ரத்த மாதிரியை எடுத்து விட்டு, வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். தென் மாவட்டங்களில் டெங்கு வேகமாக பரவி வருகிறது.

அப்பாவி குழந்தைகள் பலியாகி வருகின்றனர். குக்கிராமங்களில் வசிப் பவர்கள் மருத்துவம னைக்கு செல்ல வழி யின்றி இறக்கும் நிலை ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, சுகாதாரம், உள் ளாட்சி நிர்வாகம், பஞ் சாயத்து, நகர அமைப்பு, வருவாய் துறையினர் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான கட் டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு இறந்தவர்களின் குடும் பத்திற்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண் டும்.
-இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, ஆர். கருப்பையா விசாரித் தனர். மனுவுக்கு பதில ளிக்க அரசுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத் தரவிட்டனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner